தோழர் விசுவானந்ததேவன் நினைவு நூல் வெளிவந்துள்ளது

 

இலங்கை மார்க்சிய – லெனினிசக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’யின் முக்கிய செயற்பட்டாளரும், ‘தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி’ (NLFT) ‘தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி’ (PLFT) என்ற அமைப்புகளை ஸ்தாபித்து வழிநடாத்தியவருமான தோழர் வி.விசுவானந்ததேவன் மறைந்து இவ்வருடம் (15.10.2016) முப்பது ஆண்டுகளாகின்றன.

(“தோழர் விசுவானந்ததேவன் நினைவு நூல் வெளிவந்துள்ளது” தொடர்ந்து வாசிக்க…)

“வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்தன்”

பலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்தன், சென்னையிலிருந்து செப்டெம்பர் 1986ல் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வந்து அக்டோபர் 15, 1986 திரும்பிச் செல்லும் வழியில் அநியாயமாகக் கொலையுண்டு, முப்பதுவருட காலங்கள் உருண்டோடிச் சென்றுவிட்டன. தமது அதிகாரத்துக்கும், பதவிக்கும், பிரசித்திக்கும், அரசியலை பயன்படுத்தி, மக்களை உரமாக்கியவர்கள் வாழ்ந்த காலத்தில், மக்களின் அரசியல் விடிவுக்காக நீதிக்கும், நியாயத்துக்குமாகப் போராடி, தன்னையே உரமாக்கியவர்தான் நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்தன்.

(““வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்தன்”” தொடர்ந்து வாசிக்க…)

வெனிசுவேலா: கலையும் கனவு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கனவுகள் அழகானவை; பல சமயம் கனவுக்கும் யதார்த்தத்துக்கும் உள்ள இடைவெளி நினைத்ததிலும் அதிகமாகலாம். கனவு தரக்கூடிய மகிழ்ச்சியை நனவு மறுக்கிறது. ஆனால், கண்ட கனவை நனவாக்கிச் சாதித்தவர்களும் இப் பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள். சிலர் இன்னமும் வாழ்கிறார்கள். சாத்தியமற்றதாய்த் தெரிவதைச் சாத்தியமாக்குவதற்கான வித்து கனவிலேயே விதைபட்டு நனவில் அறுவடையாகிறது. கண்ட கனவு கண்முன்னே கரைந்து மெல்ல மெல்லக் கலைவதைக் காண்பது வேதனையானது.

(“வெனிசுவேலா: கலையும் கனவு” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்

(விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பற்றி கருணாகரன் சுகன் சாகரன் என்ன கூறுகின்றார்கள்)

கருணாகரன்:
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் பலர் எதிர்கொள்ளும் வாழ்க்கை நெருக்கடிகளைப்பற்றியும் சவால்களைப் பற்றியும் தொடர்ந்து எழுதிக் கவனப்படுத்தி வருகிறேன். இவர்களுடைய நிலைமையைப்பற்றி வேறு சிலரும் தொடர்ச்சியாக உரையாடல்களைச் செய்து வருகின்றனர். இருந்தாலும் நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

(“விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

விமல் குழந்தைவேலின் “கசகறனம் ” நாவல் பற்றிய ஒரு பார்வை

(எஸ்.எம்.எம்.பஷீர்)

“உரிமை உள்ள இனமாக (முஸ்லிம்கள்) வாழவேண்டும் . இதனை யாராலும் தடுக்க முடியாது.; தமிழரும் முஸ்லிம்களும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து வாழ வேண்டும் . ஒரு இனத்தை வீழ்த்தி மற்ற இனம் வாழ்ந்துவிட முடியாது.”

( மறைந்த கல்முனை முன்னாள் மஜீத் எம்.பீ ஆற்றிய உரையிலிருந்து. -25 மாசி மாதம் 1987 )

(“விமல் குழந்தைவேலின் “கசகறனம் ” நாவல் பற்றிய ஒரு பார்வை” தொடர்ந்து வாசிக்க…)

சம உரிமை இயக்கம் நடாத்தும் கலாச்சார விழா

 

சம உரிமை இயக்கம் நடாத்தும். எனினும் நாம் பறப்போம் கலாச்சார விழா, நாளை தொடக்கம் மூன்று நாட்கள் தொடர்ந்து யாழில் நடைபெறவுள்ளது அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

எமது நாடும் நவதாராளமய முதலாளித்துவம்


இன்றைய நவதாராளமய முதலாளித்துவமும், மனித சமூகத்தையும் அதன் கலாச்சாரத்தையும் எந்த அளவுக்கு அழிக்கின்றது என்றால், இது சம்பந்தமாக மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு உலகம் பூராவும் நகரங்களில் வீதிகள் தோறும் வெடித்துக் கிளம்புகிறது . இந்த அளவு எதிர்ப்பு இருந்தாலும் நவதாராளமய முதலாளித்துவம் வீழ்த்து விடாமல் இருப்பது எப்படி? எதிப்புக் காட்டுபவர்களை அடக்கியும், கோட்பாட்டு மாயைகளினால் நெருக்கடியை மறைத்தும் நவதாராளமயம் நிலைத்து நிற்கின்றது. வாழ்க்கையின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிச் செயற்படும் இவ்வாறான சித்தாந்தங்கள் உண்மையான எதிரிகளை மறைப்பதற்கு, போலி எதிரிகளை உருவாக்கவே முன்னுரிமை அளிக்கின்றன.

(“எமது நாடும் நவதாராளமய முதலாளித்துவம்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 71 )

பற்குணம் சில காலம் புத்தளத்தில் பணியாற்றினார் .ஜே.ஆர். அதிகாரத்துக்கு வந்தபின் இரண்டு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.ஒன்று காலி.இன்னொன்று ஆனைமடுவ.ஆனைமடுவ தேரத்தலின்போது புத்தளத்தில் பணியாற்றினார் .அங்கு பணியாற்றிய வேளையில் அங்குள்ள வாக்காளர் பெயர்களை ஆராய்ந்தபோது அவர்களின் மூன்று தலைமுறைக்கு முந்திய பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருந்தன.

(“பற்குணம் A.F.C (பகுதி 71 )” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கும் கிழக்கும் இணைவது

வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு, ஒரு நிர்வாக அலகாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியா நீதிமன்றத்துக்கு, நேற்றுப் புதன்கிழமை சென்றிருந்த சுமந்திரன் எம்.பியிடம், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,“வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது, 1957ஆம் ஆண்டு பண்டா- செல்வா ஒப்பந்தத்தில் இருந்து வருகின்ற ஒரு நிலைப்பாடாகும்.

(“வடக்கும் கிழக்கும் இணைவது” தொடர்ந்து வாசிக்க…)