இலங்கையில் முஸ்லீம் இளைஞர்களுக்கு நூற்றுக்கணக்கில் ஆயுதங்களைக் கொடுத்தது வேறு எவருமல்ல- ஹிஸ்புல்லா

இலங்கையில் முஸ்லீம் இளைஞர்களுக்கு நூற்றுக்கணக்கில் ஆயுதங்களைக் கொடுத்தது வேறு எவருமல்ல… நானே தான்…முன்னாள் இலங்கை முஸ்லீம் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் இரகசிய வீடியோ.

(“இலங்கையில் முஸ்லீம் இளைஞர்களுக்கு நூற்றுக்கணக்கில் ஆயுதங்களைக் கொடுத்தது வேறு எவருமல்ல- ஹிஸ்புல்லா” தொடர்ந்து வாசிக்க…)

‘கட்டுநாயக்கவை கட்டியெழுப்புவோம்’

கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள், ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நீண்டகாலத் திட்டங்கள், ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

(“‘கட்டுநாயக்கவை கட்டியெழுப்புவோம்’” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்த வேலிகள்..(24)

(உலகை உறைய வைத்த இரத்த சகதி)

14.08.2006 ( இன்றைக்கு சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு) பொழுது புலரத்தொடங்கியது. புலிகளால் ஆயுத பயிற்சிக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச்செல்லப்பட்ட மாணவர்களையும் மாணவிகளையும் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்க தீர்மாணித்த புலிகள் அதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையை தொடங்குவதற்கு தயாராகிவிட்டனர்.

(“பயிரை மேய்த வேலிகள்..(24)” தொடர்ந்து வாசிக்க…)

கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்லை என்று,கூறியவருக்கு

காரைநகரில் மருதப்புரம் என்னும் கிராமம் உள்ளது. நாயன்மார் என்னும் கோவில் உள்ளது வருடத்தில் ஒரு முறை பொங்கள்,செய்வார்கள் ஒடுகப்பட்ட சாதியினர் கோயிலுக்கு பின் பக்கமும் மற்றும் உயர்சாதியினர் கோயிலுக்கு முன்னாலும் பொங்குகிறார்கள். கடவுளுக்கு படைக்கும் பொங்கள் உயர்சாதியினரின் மற்றவர்கள் பொங்கி விட்டு தாமே எடுத்து செல்ல வேண்டியது தான் அவர்ககளை அங்கு படைக்க விடமாட்டார்கள்.காரைநகரிலுள்ள திக்கரை முருகன் கோவில் வாரிவளவு பிள்ளையார், முத்துமாரி அம்மன் கோவில் மணற்காட்டு அம்மன் கோவில், கருங்காலி மூர்த்தி கோவில்…. இவ்வாறு பல கோவில்களுக்கு இன்றும் நுழைய விடுவதில்லை மடத்தில் இருந்துசாப்பிட கூட விடமாட்டார்கள்.

(“கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்லை என்று,கூறியவருக்கு” தொடர்ந்து வாசிக்க…)

‘பிரபாகரனும் இல்லை மஹிந்தவும் இல்லை’

‘யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், உயிர்வாழ்பவர்கள் மத்தியில் இல்லை. அதேபோல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆகையால், பிரச்சினைகளை என்னுடன் இலகுவாகப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

(“‘பிரபாகரனும் இல்லை மஹிந்தவும் இல்லை’” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(23)

( தேவனாலும் மறவனாலும் குறி வைக்கப்பட்ட மாணவர்கள்.)

முழு அளவினான போர் தொடங்கி இரண்டு நாட்களே கடந்திருந்த நிலையில், விமானப் படையினரும், தங்களது தாக்குதல்களை இப்போது முழுமையாக தொடக்கியிருந்தனர். முன்னைய ஈழப்போர் போன்று அல்லாமல், ஈழப்போர் நான்கில் புலிகளைவிட , இராணுவத்தினரின் கை மோலோங்க ஆரம்பித்திருந்தது. இராணுவம் தரை வழித் தாக்குதல்களை வடக்கில் தொடங்காத போதும், விமானப் படையினர் மூலம் வன்னி வான் பரப்பை மாத்திரமல்லாமல், முழு நாட்டினது வான் பரப்பையும் , 24 மணி நேரமும் தமது கட்டுப் பாட்டில் வைத்திருக்க முயன்று கொண்டிருந்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(23)” தொடர்ந்து வாசிக்க…)

காணாமல் போனாரா பிரபாகரன்?

தமிழ் அரசியல்வாதிகள் தம்மைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக உலாவ வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முன்னாள் போராளிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகிறது.

(“காணாமல் போனாரா பிரபாகரன்?” தொடர்ந்து வாசிக்க…)

நீலக்கடலானது குருநாகல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாடு, கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் நேற்றுப் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகிய மாநாடு மாலை 5.30க்கு நிறைவடைந்தது.

(“நீலக்கடலானது குருநாகல்” தொடர்ந்து வாசிக்க…)

முன்னாள் புலியை நாடு கடத்த முடிவு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சுதன் சுப்பையா என்பவரை நாடு கடத்துவதற்கு இந்தியா, நடவடிக்கை எடுத்துள்ளதாக சென்னையில் உள்ள இலங்கைக்கான தூதுவராலயம் அறிவித்துள்ளது. போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி, வெளிநாடொன்றுக்கு பயணிப்பதற்கு தயாராக இருந்த நிலையிலேயே இந்தியப் பொலிஸாரினால், அவர் கைது செய்யப்பட்டார். அவர், மாரிமுத்து என்ற பெயரில் 2005ஆம் ஆண்டுவரையிலும் மாரிமுத்து எனும் பெயரில், விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினராக செயற்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொற்பொருள் விளக்கம்: முஸ்லிம் மாகாணமும் தென்கிழக்கு அலகும்

(மொஹமட் பாதுஷா)

நமது அரசியல்வாதிகளில் சிலர் தம்முடைய அறியாமையையும் சிறுபிள்ளைத் தனங்களையும் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள். தமக்கே விளக்கமில்லாத விடயங்களைப் பற்றி மேடைகளில் இருந்தவாறு மக்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருப்பார்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் என்ற பேச்சு வருகின்ற போது, கரையோர மாவட்டம், கரையோர அல்லது தென்கிழக்கு அலகு, நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் என்ற எல்லா வார்த்தைகளும் ஒரு தெளிவில்லாத அடிப்படையிலேயே மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்படுகின்றன. மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியவர்கள் ஒவ்வொரு சொற்றொடரினதும் சொற்பொருள் விளக்கத்தையும் அறியாதிருப்பதை முஸ்லிம் அரசியலில் தெட்டத் தெளிவாக காணலாம்.

(“சொற்பொருள் விளக்கம்: முஸ்லிம் மாகாணமும் தென்கிழக்கு அலகும்” தொடர்ந்து வாசிக்க…)