மா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்)” எனும் நூலை புதிய பண்பாட்டுத்தளம் வெளியிடுகிறது

மா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்)” எனும் நூலை புதிய பண்பாட்டுத்தளம் வெளியிடுகிறது.இந் நூல் வெளியீடும் நூலாய்வும் கொழும்பு தமிழ்ச் சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில், 17.04.2016 மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. வேறுபட்ட பல அமைப்புகளது பரிமாணங்களை இந்நூலில் தரிசிக்க இயலுகிறது. கூட்ட உரைகளின் விவரணம், பத்திரிகைத் தமிழ், இலக்கிய ரசனைப்பாங்கு என்பவற்றின் சங்கமிப்போடு கூடிய இந்த நூலின் நடையியல் தமிழுக்குப் புதிது; 2007 – 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்டதான காலகட்டத்தின் எமது கலை – இலக்கிய – சமூக அரங்குகளின் இயங்காற்றல் – செல்நெறிப் பரிணமிப்புகளை வெளிப்படுத்தும் வடிவத்தினாலும், புதிய பாணி நடையியல் வீச்சுக் காரணமாயும் இந்த நூல் பெரும் கவனிப்புக்குரியது. இலங்கையிலுள்ள 844 ஆளுமைகளின் விவரிப்புகள் இந்நூலின் பெயர்ச்சுட்டியில் இடம்பெறுவது தனிச் சிறப்பு.

 

(“மா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்)” எனும் நூலை புதிய பண்பாட்டுத்தளம் வெளியிடுகிறது” தொடர்ந்து வாசிக்க…)

பணத்தால் நான்: பணத்தோடு நான்: பணத்திற்காகத்தான் நான்

விருத்தாசலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு செல்கிறார் ஜெயலலிதா. இரண்டு பேர் சாகின்றனர்; 17 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இது, பொதுக் கூட்டத்திற்கு சென்றவர்களின் நிலை. அது பொதுக்கூட்டம் தானே, போர்க்களம் அல்லவே! பின் ஏன் சாவுகள் நிகழ வேண்டும்? ஈ.வெ.ரா., அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவர், ராஜாஜி போன்ற தலைவர்களின் சிந்தனை திறன் மிக்க பேச்சைக் கேட்க, மக்கள் கடலெனத் திரண்டனர். அவர்களின் பேச்சுகள் நிகழும் மைதானங்கள், மாலை நேர கல்லுாரிகளாகவே மாறின. அந்த வகையில், பழைய தலைமுறையின் கருத்து வளமும், சொல்வளமும் மிக்க பேச்சாளர்களில் இன்று எஞ்சி இருக்கும் இருவர், கருணாநிதியும், அன்பழகனும் தான்.

(“பணத்தால் நான்: பணத்தோடு நான்: பணத்திற்காகத்தான் நான்” தொடர்ந்து வாசிக்க…)

குஷ்புவுக்குக் கொடுப்பதற்கு பதில் ஜோதிமணிக்குக் கொடுங்கள்.. – ராகுல்

குஷ்புவுக்கு ஆர்.கே. நகர் தொகுதியை விட்டுக் கொடுக்க திமுக தயாரானது. ஆனால், ஆர்.கே. நகர் வேண்டாம், ஜோதிமணிக்காக அரவக்குறிச்சியை கொடுங்கள் என்று ராகுல் கூறிவிட்டாராம். தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதியில் குஷ்பு போட்டியிடும் வகையில், அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்க திமுக மேலிடம் முன்வந்தது. ஜெயலலிதாவுக்கு சரியான போட்டியாகவும் இருக்கும், குஷ்புவுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் திமுக இந்த தொகுதியை விட்டுக் கொடுக்க நினைத்தது.

(“குஷ்புவுக்குக் கொடுப்பதற்கு பதில் ஜோதிமணிக்குக் கொடுங்கள்.. – ராகுல்” தொடர்ந்து வாசிக்க…)

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம்

வவுனியா தாண்டிக்குளத்தில் விவசாய திணைக்கள அரச விதை உற்பத்தி பண்ணையின் காணியில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவள்ளது. இது நீண்டகால நோக்கில் சாத்தியமானதா
ஏற்கனவே வவுனியா நகரம் குடிநீர் போக்குவரத்து பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மையம் அமையும்போது இன்னும் அதிகரிக்கும். ஒமந்தை அல்லது பூவரசங்குளத்தில் அமைந்தால் சிறப்பானதாகும். ஆனால் அரச விதை பண்ணை அதில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றபடுவதுடன் வவுனியா வைத்தியசாலைக்கு அவ்விடங்களை வழங்குவது சிறப்பானதாகும். எதிரகாலத்தில் அதிகரிக்கும் சனத்தொகை கருத்தில் கொள்வதுடன் நகர அபிவிருத்தி கீழ் நிதி ஒதுக்கப்பட்டமையால் நகரத்துக்கு உள்ளே அமைக்கபட்ட வேண்டும் என்றால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண அமைச்சர் மாகாண சபை உறுப்பினர்கள் அத்துடன் நல்லாட்சி எதிர்கட்சி தலைவர் போன்றவர்களால் மாற்றமுடியாதா.

மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் தமிழக எல்லையோர மதுக்கடை மூடல்

கேரள பழங்குடி மக்களின் தொடர் போராட்டம் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்பினரின் அச்சுறுத்தல் காரணமாக ஆனைகட்டியில் இருந்த மதுக்கடை மூடப்பட்டது. தமிழக – கேரள எல்லையில் கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியான ஆனைகட்டியில் தமிழக அரசுக்கு சொந்தமான மதுக்கடை உள்ளது. இந்த கடையால் இரு மாநில மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், எனவே அதை அகற்ற வேண்டும் எனவும் கேரளப் பகுதியில் உள்ள அட்டப்பாடி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

(“மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் தமிழக எல்லையோர மதுக்கடை மூடல்” தொடர்ந்து வாசிக்க…)

எண்பதுகளின் நடுப்பகுதிகளிலிருந்து புலிகளிலிருந்த…….

எண்பதுகளின் நடுப்பகுதிகளிலிருந்து புலிகளிலிருந்த வெள்ளாள மற்றும் கரையார, தலித் சாதிகள் அல்லாத கோவியர் முதலிய இடைநிலைச்சாதிகள் வெளியேறினார்கள். இப்படி வெளியேறியவர்கள் 3000 வரை இருக்கும் என்று கிட்டு பிரபாகரன் Biography எழுதிய நாராயன் சுவாமியிடம் சொன்னது Tigers of Lanka என்ற பத்தகத்திலுள்ளது. தகுதி மற்றும் சீனியோறிற்றி அடிப்படையில்
தங்களுக்கு கிடைக்கவேண்டிய பதவி கிடைக்காததாலேயே இவர்கள்
வெளியேறினார்கள். 50 வீதமான யாழ் சமுக வெள்ளாளர் இயக்கத்தில்
செல்வாக்காவதை பிரபாகரன் விரும்பவில்லை. அவர்கள் வெளியேறுவது ஊக்கிவிக்பட்டது.

(“எண்பதுகளின் நடுப்பகுதிகளிலிருந்து புலிகளிலிருந்த…….” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம்(பதிவு9)

அண்ணன் வசதிக் கட்டணம் கட்ட தாமதம் ஆனதால் பள்ளிக்கூடம் போகவில்லை .இதே நேரம் அய்யாவுடன் கதைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் எமது குடும்பத்தின் நிலையை விளக்க அஅதிபரைத் சந்திக்கப் போயிருந்தார்.அதிபரைப் பொறுத்தவரை அண்ணன் பற்குணம் ஒரு குழப்படிகார மாணவன் என்பதே தெரியும். குடும்ப சூழல் தெரியாது.அந்த இன்ஸ்பெக்டர் சொன்னபின்பே அவருக்கு அண்ணன் அடிக்கடி பாடசாலை வராத காரணங்கள் புரிந்தது.ஆனாலும் அண்ணனின் குழப்படிகளையும் அவருடன் பகிர்ந்தார்.அவர் அதில் சிக்காமல் தப்புவதிலும் கெட்டிக்காரன் எனவும் சொன்னார்.

(“பற்குணம்(பதிவு9)” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். மண்ணில் அருகி வரும் புத்தாண்டுப் பாரம்பரியங்கள்

மன்மத வருடம் நிறைவு பெற்று இன்று புதன்கிழமை (13.-04.-2016) துர்முகி தமிழ்ப் புத்தாண்டு உதயமாகிறது. புதுவருடப் பண்டிகை தமிழர்களின் ஏனைய பண்டிகைகளான தைப்பொங்கல், தீபாவளி ஆகியன போன்று சமூக விழாவாக விளங்குவது சிறப்பெனலாம். இலங்கையைப் பொறுத்த வரை சித்திரைப் புத்தாண்டு (தமிழ் -_ சிங்களப் புத்தாண்டு) இரு இன மக்களினாலும் காலகாலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரைப் புதுவருடம் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டாலும் யாழ்ப்பாணத்துக்கென தனித்துவமான புத்தாண்டுப் பாரம்பரியம் உள்ளது. இந்நன்னாள் எமது புத்தாண்டுப் பாரம்பரியத்தின் முன்னோடிகளாக விளங்கிய முன்னோர்களை நினைவு கூரும் நாளாகவும் காணப்படுகிறது.

(“யாழ். மண்ணில் அருகி வரும் புத்தாண்டுப் பாரம்பரியங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையின் பொருளாதாரத்தைக் கவிழ்க்கும் விடுமுறைகள்

இலங்கையில் வருடம் ஒன்றுக்கு வழங்கப்படும் 25 பொது விடுமுறைகள் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தினால் பல பில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நிவர்த்திப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் நாட்டில் வழங்கப்படும் பொது விடுமுறைகள் பெரும் தடையாக அமைவதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(“இலங்கையின் பொருளாதாரத்தைக் கவிழ்க்கும் விடுமுறைகள்” தொடர்ந்து வாசிக்க…)

நம்பிக்கை இழக்காத ஜோதி… அதிர்ந்து நிற்கும் அரவக்குறிச்சி திமுக!

அரவக் குறிச்சி தொகுதி தி.மு.கவுக்கு என ஒதுக்கப்பட்டாலும், விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி. சமூக வலைத்தள பிரசாரம், மக்களை சந்திப்பது என அவரது உற்சாகம் தி.மு.கவினரை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஆறு மாதம் முன்பிருந்தே,  மக்களை சந்தித்து பிரசாரத்தைத் தொடங்கியிருந்தார் ஜோதிமணி. ‘ராகுல்காந்தியின் ஆசியோடு கட்டாயம் போட்டியிடுவேன்’ என உறுதியாக நம்பிக் கொண்டிருந்தவருக்கு,  கூட்டணி உடன்பாட்டில் அரவக்குறிச்சியை திமுகவுக்கு விட்டுக்கொடுத்து  அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது காங்கிரஸ் தலைமை.

(“நம்பிக்கை இழக்காத ஜோதி… அதிர்ந்து நிற்கும் அரவக்குறிச்சி திமுக!” தொடர்ந்து வாசிக்க…)