நான் வாழும் ரூஜ்பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட நியமனம் கோரிய Gaரி ஆனந்தசங்கரி லிபரல் உட்கட்சித் தேர்தலில் வெற்றியடைந்திருக்கிறார். (இனி 2015இல் வரப்போகும் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் அவர் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும்.) அவரது நியமனத் தேர்தல் நடந்த மண்டபத்திற்குப் போயிருந்தேன். தமிழ்கனடாவின் பெரும்புள்ளிகள் மட்டுமல்ல லிபரல் தமிழ்ப் பொது மக்களும் பெருமளவில் வந்திருந்தார்கள் ஏற்கனவே சூடு பிடித்திருந்த இந்த உட்கட்சித்தேர்தல் கடைசிவரை விறுவிறுப்பாகவே போய் முடிந்தது. Gaரியின் வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் வந்திருந்தவர்களிடையே ஏற்பட்ட ஆரவாரத்தை ரசிக்க முடிந்தது. புதிய அரசியல் உலகம் தெரிகிறது…
(“மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு…..” தொடர்ந்து வாசிக்க…)