மஹிந்தவும் வந்தார்

கூட்டு எதிரணியினரால் நடத்தப்படும் மக்கள் பொதுக் கூட்டமொன்று கொழும்பு ஹைட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தற்போது கலந்துகொண்டுள்ளார். கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர், அவர் அக்கூட்டத்திற்கு வந்து கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழருக்கு தொடரும் துயரம்….

சென்னை கும்மிடிப்பூண்டி ஈழ அகதிகள் முகாமைச் சேர்ந்த சுபேந்திரன் வயது 38 -ஐ ,கடந்த 23/02/16 அன்று கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையம் கூட்டிச்சென்ற , ஆய்வாளர் டில்லி பாபு அவரை அடித்து, உதைத்து கால்களை முறித்து விரட்டிவிட்டார். இந்த ஆய்வாளர் ஏற்கனவே ஒழுங்கற்ற நடவடிக்கை காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவராம்..

(“ஈழத் தமிழருக்கு தொடரும் துயரம்….” தொடர்ந்து வாசிக்க…)

ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க படுகொலை பின்னணியில் மஹிந்த, கோத்தாபய – சரத் பொன்சேகா

லசந்த விக்ரமதுங்க, ரவிராஜ் உட்பட அப்போது இடம்பெற்ற படுகொலைகளை ஒரு கும்பலே மேற்கொண்டன. அதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோதாபய ராஜபக்ஷ போன்றோரே செயற்பட்டனர் என அமைச்சர் பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா தெரிவித்தார். அத்தகைய சம்பவங்கள் மறைக்கப்பட்டமைக்கும் அதுவே காரணம் என குறிப்பிட்ட அவர், லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அடிவருடியாகச் செயற்பட்டதே லசந்தவின் படுகொலை விவகாரம் மறைக்கப்பட்டமைக்கு மற்றொரு காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

(“ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க படுகொலை பின்னணியில் மஹிந்த, கோத்தாபய – சரத் பொன்சேகா” தொடர்ந்து வாசிக்க…)

சிரியாவில் குர்திஷ்கள் சமஷ்டி பிரகடனம்

வடக்கு சிரியாவில் குர்திஷ் கட்டுப்பாட்டு பகுதியில் சமஷ்டி அரசொன்றை பிரகடனம் செய்ய குர்திஷ் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். சிரிய உள்நாட்டு யுத்தத்திற்கு தீர்வு காணும் முயற்சியாக ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை இடம்பெற்று வரும் நிலையிலேயே குர்திஷ் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சிரியாவின் துருக்கி எல்லையை ஒட்டிய அலப்போ மாகாணத்தின் அப்ரின் மற்றும் கொபானி, ஹஸகாவில் ஜெஸீரா பகுதிகளில் குர்திஷ்கள் ஒரு சுயாட்சி நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர்.

(“சிரியாவில் குர்திஷ்கள் சமஷ்டி பிரகடனம்” தொடர்ந்து வாசிக்க…)

கொல்லவே நினைத்தேன்

மாவிலாறு அணையின் வான்கதவுகளை மூடியபோது, பயங்கரவாதிகளுக்கு எதிராக யுத்தம் செய்யவேண்டும் என்ற குரல் ஓங்கியிருந்தது. எனினும், எதில் அடிப்பது என்று மஹிந்த ராஜபக்ஷ கேட்டார்’ என்று கூறிய பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ‘எந்தவொரு ஜனாதிபதியும் யுத்தம் செய்யவேண்டாம் என்று கூறவில்லை’ என்றார்.

(“கொல்லவே நினைத்தேன்” தொடர்ந்து வாசிக்க…)

சந்திரிக்கா குமாரதுங்க.

“வடக்கு மாகாணத்தில் கணவனை இழந்த பெண்களிடம் இராணுவத்தினர் மட்டுமன்றி தமிழ் அரச ஊழியர்களும் பாலியல் இலஞ்சம் கோரும் ஈனச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.”
-முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க.

பற்குணம் ( பதிவு 3)

அண்ணன் பற்குணம் நாங்கள் அறிந்தவரையில் மிகவும் துணிச்சலான மனிதர்.ஆனால் அவர் சிறு பராயம் அப்படி அல்ல.குழந்தையில் இளம் பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டு தப்பியவர்.15 வயது வரையில் மிகவும் பயந்த ஒருவராகவே வாழ்ந்தவர். அம்மா காங்கேசன்துறை வைத்தியசாலையில் இருந்த காலத்தில் இவர் மட்டுவில் மகாவித்தியாலயத்தில் பெரிய அண்ணனைத் தொடர்ந்து படிக்க சேர்ந்தார்.இவர் சேர்ந்த காலத்தில் நடராசாவும் மற்றும் இருவரும் படிப்பை முடித்துவிட்டனர்.எனவே பெரிய அண்ணன் துணையோடு பள்ளிக்குப் போய் வந்தார்.இவர் சேர்ந்த பின் ஒரு உண்மை அய்யாவுக்கு தெரியவந்தது.பெரிய அண்ணன் பாடசாலைக்கு ஒழுங்காக போவதில்லை .கண்டித்துப் பார்த்தார்.அப்பவும் ஏமாற்றமே.எனவே அவரை வரணி மகாவித்தியாலயத்துக்கு மாற்றிவிட்டார்.

(“பற்குணம் ( பதிவு 3)” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் கந்தையா வேலுப்பிள்ளை மறைந்தார்..

நம்மில் பலரும் அவரை இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர்களான தர்மகுலசிங்கம், புவிராஜசிங்கம், ராஜகுலசிங்கம் (பாபு கேட்டரிங் உரிமையாளர்), விஜயகுலசிங்கம், டொக்டர் பஞ்சகுலசிங்கம் ஆகியோரினதும், மற்றும் இந்திராணி ( கல்யாணி ), செல்வஜோதி, புஷ்பஜோதி , பிரோமஜோதி ஆகியோரின் தந்தையாராகத்தான் அறிவோம். கந்தையா அவர்கள் ஒரு பெரும் சமூக சேவகர் என்பதும், சமூக மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டவர் என்பதையும், முன்னாளில் நல்லதொரு கம்யூனிஸ்ட் ஆக செயல்பட்டார் என்பதையும் நம்மில் பலரும் மறந்துவிடக் கூடாது. இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் கம்யூனிஸ்ட் கார்த்திகேசு மாஸ்டரின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தவர் தோழர் கந்தையா. தோழர் கந்தையாவின் சொந்த வாழ்க்கையே புரட்சிகரமானது. ‘வலது கை கொடுப்பது இடது கை அறியாது’ என்பதுபோல் அவர் செய்த சமூக உதவிகளையும், பல்வேறு சேவைகளையும் அறிந்தால் பிரமிப்படைந்துவிடுவோம். ‘நீ சமூகத்தை மாற்றுவது என்பது உன்னில் இருந்துதான் ஆரம்பிக்கிறது’ என்பதை நம்பியவர் அவர். ஒரு குழந்தையுடன் விதவையாக இருந்த கனகம்மாவை மறுமணம் புரிந்த புரட்சிவாதி. அந்தக் காலத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தில் இத்தகைய விவாகம் மாபெரும் சமூகப்பிரமிப்பாக இருந்தது. நல்லதொரு கணவனாக, மொத்தம் ஒன்பது குழந்தைகளுக்கு அப்பாவாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் தோழர் கந்தையா. அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும். அவரது பிரிவால் துயருறும் அவர்தம் பிள்ளைகளுடன் நாமும் துயரத்தில் பங்கு கொள்கிறோம்.

(Narayana Moorthy)

தமிழ்ச்செல்வனை காட்டிக் கொடுத்த நடேசன்

தமிழ்ச்செல்வன் கொலையில் வெளியாகும் ‘CIA’ இரகசியம்..! பின்னணியில் அமெரிக்கா..?

விடுதலைப் புலிகளின் அழிவில் தமிழ் இனப்படுகொலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வகித்த பாத்திரம் பற்றி ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. அது குறித்து ஏராளமான ஆதாரங்கள் வெளியான போதிலும் வலதுசாரி போலித் தமிழ்தேசியவாதிகளான அமெரிக்க அடிவருடிக் கும்பல் அவற்றை எல்லாம் வேண்டுமென்றே மறைத்து வந்துள்ளது. உலகில் பல கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை தீர்த்துக் கட்டியது போன்று புலிகளின் தலைவர்களையும் அழிக்க வேண்டுமென்பது அமெரிக்காவின் நோக்கமாக இருந்துள்ளது. அதனை இரகசிய CIA ஆவணம் வெளிப்படுத்தி உள்ளது.

(“தமிழ்ச்செல்வனை காட்டிக் கொடுத்த நடேசன்” தொடர்ந்து வாசிக்க…)

புறப்படும் புதுப் புரளிகள்: ‘பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்’

இறுதி யுத்தத்தின் போது மரணமடைந்து விட்டதாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரும், கரும்புலிகள் அமைப்பின் கட்டளைத் தளபதியுமான பொட்டு அம்மான் என்றழைக்கப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரன், மறைந்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

(“புறப்படும் புதுப் புரளிகள்: ‘பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்’” தொடர்ந்து வாசிக்க…)