முற்றாக முடங்கியது வடக்கு மாகாணம்!

வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவி படுகொலையைக் கண்டித்தும், இந்தக் கொடுர சம்பவத்துக்கு நீதி வழங்கக் கோரியும், ஏற்பாடு செய்யப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் இன்று முழுமையாக முடங்கியது. பல்வேறு பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ்.வணிகர் கழகம் என்பனவற்றின் அழைப்பின் பேரில் இன்றைய பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தினால், வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. சில இடங்களில் மாத்திரம், மருந்துக்கடைகளும், உணவகங்களும், திறந்திருந்தன.

மட்டக்களப்பில் மகிந்த ஆட்சி!

நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னும் நல்லாட்சி ஏற்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இன்று மட்டக்களப்பு மாவட்டம் நல்லாட்சி நிர்வாகத்தை கொண்டிருக்கவில்லை மட்டக்களப்பில் இப்போதும் மகிந்தராஜபக்சஸ அரசின் ஆட்சியே நடைபெறுவதாக பொதுமக்கள் தங்களது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர். அண்மைக்காலமாக மட்டக்களப்பில் அரச நிர்வாகம் சரியாக செயற்படவில்லை, அனைத்து நிர்வாகங்களிலும் அரசியல் தலையீடு காணப்படுவதாக வெளியான செய்திகளை அடிப்படையாக கொண்டு இதுகுறித்த கருத்துக்களை லங்காசிறியின் 24 மணிநேரச் செய்திச் சேவை பொதுமக்களிடம் கேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் மேலும் கருத்துதெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதும் மகிந்தராஜபக்ஸவின் ஆட்சியே நடைபெறுகிறது. அரசநிர்வாகங்கள் அனைத்திலும் அமைச்சர்களின் நேரடித்தலையீடுகள் உண்டு.

(“மட்டக்களப்பில் மகிந்த ஆட்சி!” தொடர்ந்து வாசிக்க…)

பதில் சொல்லுங்கள் ஐங்கரநேசா?!

ஐங்கரநேசன் பொறுப்பு வகிக்கும் விவசாய அமைச்சின் கீழ் கூட்டுறவுத்துறை, விவசாயம், நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகம்இ சுற்றுச்சூழல் எனப் பல துறைகள் உள்ளடங்குகின்றன. இவை அனைத்தும் மிக முக்கியமானவை. இவற்றை வைத்துக்கொண்டு பெரும்நிதிச் செலவைச் செய்து கொண்டிருக்கிறாரே தவிர பயனாக எந்தச் செயலும் இதுவரை நடந்ததில்லை. சில மாதங்களுக்கு முன் நான் யாழ்ப்பாணம் போயிருந்தபோது அங்கேயிருந்து வெளியாகும் ஒரு பிராந்தியப் பத்திரிகையில் ‘ஐயோ ஐங்கரநேசன்’ என்ற தலைப்பில் சில பத்திகளைப் படித்தேன். வடக்குமாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனின் தவறுகளையும் குறைபாடுகளையும் விமர்சிக்கும் பத்தி. நெத்தியடியாக பல விசயங்கள் அதிலே எழுதப்பட்டிருந்தன.

(“பதில் சொல்லுங்கள் ஐங்கரநேசா?!” தொடர்ந்து வாசிக்க…)

வெளியில் வர முடியாமல் தவிக்கும் பிள்ளையான்?

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை 14 நாட்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 18ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று மட்டக்களப்பு உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி சிவபாதம் உத்தரவிட்டார். கடந்த 3 மாதங்களாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிள்ளையான் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முதன்முறையாக உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். கடந்த 2005.12.25ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது. உண்மையில் புலிகள் பொறுப்பேற்றக வேண்டிய கொலைக்கு புலிகளிலிருந்து பிரிந்து சென்றவர் பொறுப்பேற்கும் நிலை பிள்ளையானுக்கு ஏற்பட்டுள்ளது.

வாக்குறுதிகளை இலங்கை செயற்படுத்த வேண்டும்!

மனித உரிமை பற்றிய வாக்குறுதிகளை இலங்கை செயற்படுத்த வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் செயன்முறைப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை தொடர்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ள நிலையில் அந்த தீர்மானப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளது.

(“வாக்குறுதிகளை இலங்கை செயற்படுத்த வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

ஊடகதர்மம் உணர்ந்த ஊடகவியலாளர்!?

[டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் கனவு, படிப்பு மற்றும் குடும்பங்களை அச்சுறுத்தும் செய்திகளை தொடர்ந்து வெளியிட்ட ஜீ (zee news) செய்தித் தொலைக்காட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது பதவியை துறந்த செய்த ஊடகவியலாளர் விஷ்வா தீபக் கடிதம்]

அன்பிற்குரிய ஜீ நியூஸ்,

ஒரு வருடம் நான்கு மாதங்கள் இந்த நிறுவனத்தோடு பின்னிப் பிணைந்து வேலை பார்த்த பின்பு, இன்று என்னை இந்த நிறுவனத்திலிருந்து விலக்கிக் கொள்வது என்ற முடிவுக்கு வர நேர்ந்திருக்கிறது. இந்த முடிவை நான் முன்னரே எடுத்திருக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால், இப்போதேனும் இந்த முடிவை எடுக்காவிட்டால், என்னை நானே மன்னிக்க முடியாது. நான் இப்போது சொல்லப்போவது உணர்ச்சிவசப்பட்டோ, கோபத்திலோ, எரிச்சலிலோ சொல்வதல்ல; ஆழ்ந்து சிந்தித்துதான் இதை சொல்கிறேன். நான் ஒரு ஊடகவியலாளன் மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனும் கூட. இந்த நாட்டின் பெயரால் குருட்டு ‘தேசியவாதம்’ எனும் நஞ்சு பரப்பப்படுகிறது. ஒரு குடிமகனாகவும், வேலை சார்ந்த அறத்தின் அடிப்படையிலும் இந்த நஞ்சு மேலும் பரவாமல் இருக்கச் செய்வது எனது கடமையாகும். இது, சிறு படகில் பேரலைகளை கடக்கும் முயற்சி என்று நானறிவேன், ஆனாலும், இதை நான் தொடங்க விரும்புகிறேன். குருட்டு தேசியவாதத்தை பரப்புரை செய்து, கன்ஹையா சொல்லாததைச் சொன்னது போல தொடர்ந்து பரப்பி வந்த ஜீ நியூஸ் தொலைக்காட்சியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே எனது வேலையை ராஜினாமா செய்கிறேன்.

(“ஊடகதர்மம் உணர்ந்த ஊடகவியலாளர்!?” தொடர்ந்து வாசிக்க…)

ஊழல்வாதிகளை கைது செய்ய வேண்டும்!

புதிய சட்டமா அதிபரின் கீழ் ஊழல், மோசடிகள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளை துரித்தப்படுத்தி சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டும் என ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். கடந்த ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர், முன்னைய அரசாங்கத்தின் கீழ் நடந்த மிகப் பெரிய ஊழல் மோசடிகள் குறித்து கண்டறிய நாங்கள் ஒன்றிணைந்தோம். ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு தேவையான தகவல்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கி நாங்கள் உதவினோம். நியாயமான, ஒழுக்கமான சமூகத்தையும் சுதந்திரம் மற்றும் சட்டத்தை மதிக்கும் நாட்டை கட்டியெழுப்பவே நாங்கள் இதனை செய்தோம். ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் செய்த ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வருவதே எமது நோக்கம். ஊழல்வாதிகளை பாதுகாத்து, ஊழலுக்கு இந்த அரசாங்கம் உதவாது என தாம் எண்ணுவதாகவும் சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

சரணடைய மேலும் கால அவகாசம் கோரிய எமில்காந்தன்!?

விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த முக்கியஸ்தர் எனக் கூறப்படும் அந்தோணி எமில்காந்தன் என்பவர் இலங்கைக்கு வந்து நீதிமன்றத்தில் சரணடைவதற்கு மேலும் காலஅவகாசம் தேவை என அவரது சட்டத்தரணி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார். எமில்காந்தன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவருக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள சிகப்பு அறிக்கையை இரத்துச் செய்யுமாறும் அவர் தனது சட்டத்தரணியின் ஊடாக இதற்கு முன்னர் கோரியிருந்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா, சந்தேக நபரை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக வெளியிடப்பட்டிருந்த சிகப்பு அறிக்கை இரத்துச் செய்தார்.

(“சரணடைய மேலும் கால அவகாசம் கோரிய எமில்காந்தன்!?” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 7)

நவரத்தினம் கொலை செய்யப்பட்டதை அடுத்து வெள்ளாளரும் கொஞ்சம் சாதிவெறியர்களுக்கு ஆதரவளிக்க தொடங்கினர்.ஆனாலும் அயலில் உள்ளவர்கள் உண்மை நிலை தெரிந்ததால் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.ஒவ்வொரு விசயத்திலும் நமது பகுதி கையே முந்துவதால் இரத்தினத்தை எப்படியாவது கொலை செய்ய தீர்மானித்தனர்.இதற்கு இப்போது வெள்ளாளர் ஒத்துழைப்பும் கிடைத்தது.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 7)” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்ஸில் புலிகள் அமைப்பினர்களிற்கிடையே நடந்த துப்பாக்கி சண்டை!: ஒருவர் படுகாயம்!!

 

பிரான்சிஸில் இயங்கும் இரு புலிகள் இயக்க அமைப்புக்கள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கம் படுகாயமடைந்துள்ளார். இன்று இரவு பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர்ப் பகுதியில் இப் படுகொலை முயற்சி இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சொத்துப் பங்கீடு, மாவீரர் தினவிழவை யார் நடத்துவது, யார் மக்களிடமிருந்து பணத்தை வாங்குவது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பிரான்சில் இயங்கும் இரு புலிளாதரவு இயக்கப்பிரிவினரிடையே உள்ள பகை முரண்பாடே இத்தாக்குதல்களுக்கு காரணம் என பிரான்ஸ் வாழ் தமிழர்கள் பேசிக்கொள்கிறார்கள். கடந்த 18.05.2015 அன்று ஆயுததாரிகளின் கத்திக் குத்திற்கு இலக்காகிப் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.