இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் இதுவரை அஸ்ட்ரா செனேகா, மற்றும் கொவிட் ஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டிலுள்ளன. அத்துடன் தற்பொழுது சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகள்  கிடைக்கப்​பெற்றுள்ளதோடு ரஷ்யாவிலிருந்து ஸ்பூட்னிக் -வி என்ற தடுப்பூசிகளும் விரைவில்  கிடைக்கப்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.  இந் நிலையில் இரு வேறுபட்ட தடுப்பபூசிகளை 1 ஆம் மற்றும் 2 ஆம் கட்ட தடுப்பூசிகளாகப்  பயன்படுத்துவது பாதுகாப்பானதா  என்பது குறித்து ஆராய்ச்சிகளைத்  தொடங்கவுள்ளதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதாத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,531 கொரோனாத் தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக  கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம்  533 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கம்பாஹா மற்றும் களுத்துறையில் 145 பேரும், குருநாகலில் 107 பேரும்  இனம் காணப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி நகருக்கு முகக் கவசம் அணியாமல் வருவோரை, கடமையிலிருக்கும் இராணுவத்தினர், திரும்பியனுப்புகின்றன. நகருக்குள் கொரோனா வைரஸ் ​தொற்றுவதை தடுக்கும் வகையிலேயே இந்த அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.