இலங்கை: கொரனா செய்திகள்

கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (09) முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை மைய்யப்படுத்தி, இந்த நடவடிக்கை இன்று (09) ஆரம்பிக்கப்படும் என்றனர். தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கு விருப்பமுள்ள கர்ப்பிணிகளுக்கே இந்த தடுப்பூசி செலுத்தப்படுவதாக, குடும்ப சுகாதார பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி த சில்வா தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு, முதற்கட்டமாக தடுப்பூசி ஏற்றும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிணங்க இரத்தினபுரி மாவட்ட ஊடகவியலாளர்கள் 64 பேருக்கு நேற்று சப்ரகமுவ மாகாண சபையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அத்துட ன் 724 அரச ஊழியர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு பலாங்கொடை இ/வித்யா லோக மகா வித்தியாலயத்தில் நடை பெற்றது. இவர்கள் அனைவருக்கும் சினோர்பாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.