கலாநிதி திலக் சியம்பலாபிட்டியவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இலங்கை மின்சார சபையின் (CEB) புதிய தலைவராக பேராசிரியர் KTM உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.பேராசிரியர் ஹேமபால எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றினார். அவர் ஒரு புகழ்பெற்ற கல்வியாளரும் என்பதுடன், முன்னர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையில் பேராசிரியர் மற்றும் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பதவிகளை வகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.