ஈரான்-இஸ்ரேல் மோதல்: சபை ஒத்திவைக்கப்பட்டது

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை முன்மொழியவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இல்லாததால், இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் திடீரென முடிவுக்கு வந்தன. பாராமன்ற உறுப்பினர் நிஜாம் காரியப்பர் பிரேரணையை முன்மொழியத் தொடங்கியதை அடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.