கே.ஆர்.கௌரி: பொதுவுடைமை நாயகி!

கேரளத்தின் உத்வேகமிக்க கம்யூனிஸ்ட் தலைவரான கே.ஆர்.கௌரி (102), முதுமை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக செவ்வாய் அன்று காலமானார். கேரளப் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காகக் குரல் கொடுத்த கௌரி, கேரளச் சட்டமன்றத்தில் அதிக காலம் பணியாற்றிய பெண் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்றத்தின் மிக வயதான பெண் உறுப்பினர், வயதான பெண் அமைச்சர், தேர்தல்களில் அதிக வெற்றியைப் பெற்றவர் எனப் பல முதன்மைகளுக்குச் சொந்தக்காரர். கேரளம் இதுவரை பார்த்த திறமையான நிர்வாகிகளுள் ஒருவர்.