தாயகத்தின் கிழக்கு பிரதேசத்தில் தியாகிகள் தினம்.

 

மட்டக்களப்பு அம்பாறையிலிருந்து மட்டும் அல்லாது திருகோணமலை வன்னி யாழ்ப்பாணம் என்று பல பிரதேசங்களிலிருந்தும் பத்மநாபா மக்கள் முன்னணியினர் கலந்து கொண்ட இந்த சிறப்பு நிகழ்வு தோழர் சந்திரன் தலமையில் நடைபெற்றது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் நேரடியாகவும் ஆதரவாளர்களாகவும் கலந்து கொண்ட இந்நிகழ்வு காலை 10 மணியளவில் ஆரம்பமானது. பல மதத் தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இவ் நிகழ்வு கிழக்கில் மூவினம மக்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது மட்டும் அல்லாது போராட்டகாலத்தில் சந்தேகங்களுக்கு உள்ளான இன உறவுகளை மீண்டும் இறுக்கமாக கட்டியமைப்பதற்கான ஒரு அடையாளமாக பலராலும் பார்க்கப்படுகின்றது. ஆரம்ப கால ஈபிஆர்எல்எவ் இன் விடுதலைக்காக தம்மை அர்பணித்த தோழர்களின் குடுமப உறவுகள் தமது உறவுகளின் தியாகங்களை மீண்டும் மீண்டு நினைவு கூரும் கௌரவிக்கப்படும் ஒரு நிகழ்வாக இது பரிணாமம் அடைந்திருந்ததை கூட்டத்தின் இடையே அவதானிக்க கூடியதாக இருந்தது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல் அமைச்சரும் தமிழர் சமூக ஜனநாயக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் வரதராஜப்பெருமாளும் அக் கட்சியின் செயலாளர் தோழர் மோகன் அவர்களும் சிறப்புரையாற்றினர் தோழர் சுகுவின் வழி நடத்தில் இந் நிகழ்வு சிறப்பாக பத்மநாபா முன்னணியின் தோழர்களால் நடைபெற்று முடிந்திருக்கின்றது. (செய்திகள் தொடரும்…)