கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும்

(முகம்மது தம்பி மரைக்கார்)
நமது கைகளை அகல விரிக்கும் போது, நமக்கான சுதந்திரம் என்பது, அடுத்தவரின் மூக்கை, நமது கைகள் தொடாத வரையில்தான் என்பார்கள். நமது சுந்திரம் என்பது, அடுத்தவருக்கு அத்துமீறலாக இருக்கும் போதுதான் முரண்பாடுகளும் பிரச்சினைகளும் எழுகின்றன. ஆனால், அதிகாரம் உள்ளவர்கள், சாதாரண மனிதர்களின் தலைகளில், அநேக தருணங்களில் கூடுகளைக் கூட, கட்டத் தொடங்குகின்றனர்.