தந்தையரும், மகளும்…. கோபி பிறையன்ர்(Kobe Bryant) உம் அவர் மகளும்(Gianna)….

(சாகரன்)

எல்லா தந்தையருக்கும் தனது மகள் என்றால் ஒருவகையான விசேட உறவு பாசப்பிணப்பு இருப்பது இயல்பானதே. பிறக்கும் முதல் குழந்தை மகளாக இருக்க வேண்டும் எதிர்பார்ப்புதான் தந்தையரிடம் இருக்கின்றது. என் வீட்டிற்கு ஒரு தேவதை புதிதாக வரவேண்டும் என்று மனதிற்குள் குதூகலித்து இருப்பர் தந்தையர்.

கொக்கட்டிச்சோலைப் படுகொலையின் 33ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்

பாவப்பட்ட வரலாறு

கொக்கட்டிப் பிரதேசமே குருதியில் நனைந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பு இறால்பண்ணை படுகொலை என்றும் நினைவுகூறப்படுகிறது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் திட்டமிட்ட அன அழிப்பு நடவடிக்கைளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒரு குரூரமாகும்.

பத்திரிகை மகாநாட்டில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர் -வவுனியா

சுயாதீனமான பரந்த மாற்று அணியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் தி.சிறிதரன் தெரிவித்துள்ளார். (காணொளியை காண…….)

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை

சீனாவிலிருந்து வருகைதரும் பயணிகளைக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட வௌியேறும் பிரிவினூடாக வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

’சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்து என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும்’

“ஜனாதிபதி போர் காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த காரணத்தினால், நாட்டின் ஜனாதிபதி என்றவகையில் படையினரிடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக தீர்வு காணவேண்டியுள்ளது” என்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

நந்திக்கடல் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரம்: உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை!

(நெற்றிக் கண்)

நந்திக்கடல் உட்பட வன்னிப் பிரதேச களப்புக்களை அபிவிருத்தி செய்து நன்னீர் மீன்வளர்ப்பிற்கு ஏதுவான சூழலை எற்படுத்துவன் மூலம் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.

ஹிருணிகாவின் பேச்சு – 2 ……. (தமிழில்)

(Jeevan Prasad)

பெண்களை அடக்குவதற்கு அந்த பெண்ணின் ஒழுக்கத்தை கீழ் தரமாக விமர்சிப்பதால் வீழ்த்த முடியும் . எனது ஒழுக்கத்தை விமர்சித்து என்னை வீழ்த்தப் பார்க்கிறார்கள் . நான் அரசியலுக்கு வந்த காலத்தில் நாமலுடன் உறவு என கதை பரப்பினார்கள். இந்த பாராளுமன்றத்தில் இருக்கும் அநேக ஆண்களோடு என்னை இணைத்து கதை பரப்பினார்கள் . நான் வீழ்ந்தேனா? நாமலிடம் கேளுங்கள் எனக்கும் அவருக்கும் உறவு இருந்ததா என்று …… அவரது காதலிகளின் தூதாக உதவியுள்ளேன் . நாங்கள் நண்பர்கள் . ஒரு நாளாவது அவரோடு உறவு வைத்துக் கொண்டேனா என கேளுங்கள் …… ஒரு பெண் பாராளுமன்றம் வரும் போது இப்படியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது . இதற்கெல்லாம் நானா வீழ்வது! எனக்கு பக்க பலமாக முதுகு பலமுள்ள ஒரு ஆம்பிளை – திடமான மனிதர் உள்ளார். இந்த சேறடிப்புகளுக்கு எதிராக நிமிர்ந்து நிற்க அவர் எனக்கு பக்க பலமாக இருக்கிறார்.

இன்னும் விலகாத மர்மம்

இந்தியாவுக்கு வெளியே மூன்று லட்சம் பேரைக் கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வழிநடத்தியவர் நேதாஜி. 1944-ல் இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாய் அது. அப்போதுதான், ஹிரோஷிமா – நாகசாகி அணுகுண்டு தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் ராணுவத்திடம் சரணடைகிறது ஜப்பான். அப்போது சிங்கப்பூரில் ஐ.என்.ஏ. தலைமையகமான ‘கதே மாளிகை’யில் இருந்தார் நேதாஜி. அவரை அங்கிருந்து வெளியேறிவிடும்படி தகவல் அனுப்புகிறார் ஜப்பான் அதிபர் டோஜோ.

இலங்கையின் ஆளும் வர்க்கம்

(Subamangala Saththiyamoorthy)

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கொழும்பில் வழங்கிய சொகுசு மாளிகை உட்பட அவருக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதங்களை தொடர்வது என ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சவின் அரசாங்கமும் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

‘ஹிட்லரால் நடத்தப்பட்ட யூத இன அழிப்பு பேரழிவு ஞாபகர்த்த நாள்’

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)

இன்று,யூத நாடான இஸ்ரேலிய தலைநகரமான ஜெருசலம் நகரில் நடக்கும் ‘ஹிட்லரின் யூத இனஅழிப்பு’ ஞாபகார்த்தநாள் தினத்தில் பிரித்தானிய பட்டத்து இளவரசர் சார்ள்ஸ் உட்பட பல உலகத் தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். இன்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன் 27.1.1945ம் ஆண்டு சோவியத் யூனியப் படையினர் போலந்து நாட்டிலுள்ள ஆஷ்விட்ஷ் என்ற இடத்தில் ஜேர்மனியரால் நடத்தப்பட்ட கொலைக்கூடத்தையடைந்து அங்கிருந்த யூதக் கைதிகளைக் காப்பாற்றிய நாளை நினைவு கூரும் முகமாக இந்த ஒன்று கூடல் நடக்கிறது.