புலனாய்வுக் கட்டமைப்பும் ஐ.எஸ் தாக்குதலும்

(க. அகரன்)

உலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து கொண்டிருக்கும் ஓர் அழகிய தீவு என்றால் அது இலங்கையாகத்தான் இருக்கமுடியும். நீண்ட யுத்தத்தைக் கண்டு, அதன் ஓய்வுக்குப் பின்னர், மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் சந்தர்ப்பத்தில், ஏற்றுக்கொள்ள முடியாததும் நம்பமுடியாததுமான தாக்கத்துக்கு மீண்டும் சென்றுள்ளது நாடு.

உலகக் கிண்ணம்: குழாம்களில் தவறவிடப்பட்டவர்கள்

(Shanmugan Murugavel)

இங்கிலாந்தில் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடருக்கான அனைத்து அணிகளின் குழாம்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் அனுமதி இல்லாமலே அடுத்த மாதம் 22ஆம் திகதி வரை குழாம்களில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற நிலையில், இப்பத்தியானது தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குழாம்களில் தவறவிடப்பட்ட வீரர்களை நோக்குகிறது.

மாலி: பயங்கரவாதத்துக்கு எதிரான முடிவுறாத யுத்தம்

(ஜனகன் முத்துக்குமார்)

கடந்த ஏப்ரல் 10ம் திகதி பிரான்ஸ் மற்றும் மாலி அரசாங்கம் இணைந்து நாடாத்திய பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதலில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட போதிலும், மாலி அரசாங்கம் எதிர்கொள்ளும் பயங்கரவாதம் இலகுவில் தோற்கடிக்க கூடிய ஒன்றல்ல என்பதே வரலாற்று ரீதியில் நாம் கற்கும் பாடமாகும். பிரதானமாக நாட்டின் பயங்கரவாத குழுக்கள் மற்றும் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தீவிரவாத நடவடிக்கைகளை களைதல் மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான உதவிகளை பெறுதல் தொடர்பில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை மாலி முன்வைக்கும் அதேவேளை உள்நாட்டு பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்ச்சியாக பிராந்தியத்துக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியவண்ணமே உள்ளன.

ஜெட் எயார்வேய்ஸ் விமான சேவைகள் நிறுத்தம் பயணிகள் பாதிப்பு

(ச. சந்திரசேகர்)
இந்தியாவின் இரண்டாவது மாபெரும் விமான சேவைகள் வழங்குநராகத் திகழ்ந்த ஜெட் எயார்வேய்ஸ், தனது விமானச் சேவைகளை, கடந்த வியாழக்கிழமை முதல் இடைநிறுத்தியுள்ளது. கடந்த டிசெம்பர் மாதம் முதல் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த இந்த விமான சேவையில், தமது பயணங்களை ஏற்கெனவே பதிவு செய்திருந்த பயணிகள் இந்தச் சேவை இடைநிறுத்தம் காரணமாக பெருமளவு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தியாவில் பலத்த தேடுதல் நடவடிக்கைகள்

ஐ.எஸ் தீவிரவாத குழுவினரை தேடும் பலத்த பணிகளுக்கு மத்தியில் இந்தியா இறங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நேற்று பலத்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அங்கு வீடொன்றிலிருந்து அராபிய எழுத்துக்களில் எழுதப்பட்ட ஆவணங்கள் சிலவும், DVD ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கிருந்து சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களா என்று இதுவரை தெரியவில்லையென்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலி நிகழ்வு திருகோணமலை

கடந்த ஞாயிறு அன்று (21/04/2019) குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு திருகோணமலை கடற்கரையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினரால் (SDPT) நடாத்தப்பட்டது. அதேவேளை அப்பாவி மக்களை கொலை செய்தவர்களான ISIS பயங்கரவாதிகளுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

முள்ளில் விழுந்த சேலை

(கே. சஞ்சயன்)
உலகத்தையே உறைய வைத்த குண்டுத் தாக்குதல்களுடன் கழிந்து போயிருக்கிறது இந்த வருட ஈஸ்டர் திருநாள். தேவாலயங்களும் சொகுசு விடுதிகளும் இரத்தமும் சதையுமாக, கோரமாகக் கிடந்த காட்சிகள், ஊடகங்களில் நிரம்பியுள்ள நாள்களாகவே, இப்போது கழிந்து கொண்டிருக்கின்றன.

நிகழ்ந்திருக்கவே கூடாத பயங்கரம்

(மொஹமட் பாதுஷா)
இலங்கையின் பல பாகங்களிலும், இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சிகளில் இருந்து, நாடும் நாட்டு மக்களும் இன்னும் முழுமையாக மீளவில்லை. கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில், தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து, மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டமிட்ட குண்டுத்தாக்குதல்கள், வரலாற்றில் மிக மோசமான இழப்பையும் துயரஅனுபவத்தையும் தந்திருக்கின்றது.

வெலிகம பிரதேச வீடொன்றிலிருந்து 10 மி.ரூபாய் கண்டுபிடிப்பு

வெலிகம- மதுராகொட பிரதேசத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, அங்கிருந்த வீடொன்றின் கட்டிலுக்கு கீழே பையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 மில்லியனுக்கு அதிகமான பணத்துடன் வீட்டின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் ​கொழும்பு தலைவர் சிக்கினார்

தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் ​கொழும்புக்கு பொறுப்பான தலைவரான மொஹமட் பவாஸ் வி​சேட பொலிஸ் குழுவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். 38 வயதுடைய மொஹமட் பவாஸ் வாழைத்தோட்ட தொடர்மாடி குடியிருப்பிலுள்ள வீடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை கைதுசெய்யும் போது, அவரிடம் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சுவரொட்டிகள், அமைப்பின் போதனைகள் அடங்கிய பென்ட்ரைவ், போதனைகளுடனான காணொளிகள் அடங்கிய அலைபேசிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.