காஷ்மீரில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து அமர்வு

“அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை மற்றும் சிவில் சமூகத்தின் பங்கு” என்ற மாபெரும் நிகழ்ச்சியை, இளைஞர் அபிவிருத்தி மையம் மற்றும் அதன் முன்முயற்சியான டவுன்ரவுன் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை ஸ்ரீநகரில் உள்ள சங்கர் மாலிலுள்ள 7சீ உணவகத்தில் நடத்தின.

தொங்கு பாலம் அறுத்து விழுந்ததில் 60 பேர் பலி

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாலமொன்று அறுந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  சம்பவம் இடம்பெற்ற போது பாலத்தின் மேல் சுமார் 400 பேர் இருந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

உலக பொருளாதார நெருக்கடி: பழி ஓரிடம்; பாவம் இன்னோரிடம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அது ‘சுனாமி’ மாதிரி, தொடர்ச்சியாகப் பல நாடுகளைத் தாக்கிய வண்ணமுள்ளது. பணவீக்கத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு நாட்டிலும், பொருளாதார சீர்கேடு உருவாக்குகிறது. இது பல சந்தர்ப்பங்களில் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு வழிசெய்கிறது. 

இலங்கையில் மாகாணசபைகள்: இருக்கின்றன….. ஆனால் இல்லை(தொடர் – 2)

(அ. வரதராஜா பெருமாள்)


புதிய தேர்தல் முறையைக் காட்டி
தேர்தலையே தள்ளிப் போட்டு விட்டார்கள்

2017ம்ஆண்டு வரை மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விகிதாசார முறையின்படி நடப்பதே சட்டமாக இருந்தது. 2017ம் ஆண்டு தேர்தற் தொகுதி முறையும் விகிதார முறையும் கலந்த வகையான தேர்தல் முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டம் பாராளுமன்றத்தினால் ஆக்கப்பட்டது. முன்னர் எப்போதும் மாகாண சபைக்கான தொகுதிகள் என்பது இருக்கவில்லை. 2017ம் ஆண்டு புரட்டாசி 22ந் திகதி மாகாண சபைகளுக்கான தேர்தல் (திருத்த) சட்டம் பாராளுமன்றத்தினால் ஆக்கப்பட்டு சபாநாயகரினால் கைச்சாத்திடப்பட்டு வரத்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

புத்தமதமும் – டாக்டர் அம்பேத்கரும்

இளம் பருவத்திலிருந்தே புத்தர் வாழ்க்கைச் சரித்திரத்தையும், புத்த தருமத்தையும் பற்றிக் கசடறக் கற்கத் தொடங்கினார் அம்பேத்கர். 1954இல் பர்மாவில், இரங்கூன் மாநகரில் உலக புத்தர் மாநாடு கூடிற்று. டாக்டர் அம்பேத்கர் அம்மாநாட்டில் கலந்து கொண்டார். புத்தர் மதச் சடங்குகளை வெறுத்தவர்.

அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ்

(ப.தெட்சிணாமூர்த்தி)

ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்வதேச பிரிவான ஹெச்.எஸ்.எஸ் (ஹிந்து சுயம்சேவக் சங்), “தர்மத்தின் மூலம் உலக அமைதியை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்” எனக் கூறிக் கொள்கிறது. இந்தியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 39 நாடுகளிலும் ஊடுருவி உள்ளது எச்எஸ்எஸ். இப்போது அமெரிக்கா முழு வதும் 34 மாநிலங்களில் உள்ளது, 171 நகரங்களில் 250க்கும் மேற்பட்ட கிளைகள் (ஷாகாஸ்) எச்எஸ்எஸ் -க்கு உள்ளதாக அதன் 2020- 2021 வருடத்திய ஆண்ட றிக்கைகள் கூறுகின்றன. இந்து சுயம்சேவக் சங் அமெ ரிக்காவை தனது முதன்மை சர்வதேச அரசியல் தளமாக இப்போது மாற்றியுள்ளது. அமெரிக்காவில் கிருத்துவ யூத அமெரிக்கர்களோடு இந்து முஸ்லீம் அமெரிக்கர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியாவும் தெற்காசிய புவிசார் அரசியலும்!

தெற்காசியாவின் புவிசார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவின்  முக்கியத்துவம் அவசியமானதாக கருதப்படுகிறது. அதிகரித்து வரும் பிராந்திய கொந்தளிப்புக்கு மத்தியில், இந்தியாவுக்கு கடினமான பணி உள்ளது. அதன் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதையும், அது தொடர்ந்து மேல்நோக்கி வளர்ச்சிப் பாதையில் செல்வதையும் முதலில் உறுதி செய்ய வேண்டும்.

கிழக்கு ஆளுநரின் அதிரடி உத்தரவு

வெளிநாட்டு உதவியின் கீழ் பெறப்படும் பணத்தில் கட்டிடங்கள் மற்றும் வீதி நிர்மாணப் பணிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர்  அனுராதா யஹம்பத் மாகாண அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

தென்கொரிய திருவிழா: இலங்கையர் ஒருவர் உட்பட 151 பேர் மரணம்

தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை ஏற்பட்ட ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 82 பேர் காயமடைந்துள்ளர். உயிரிழந்தவர்களில் இலங்கை​யைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றார். கண்டியைச் சேர்ந்த 27 வயதான ஆண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.