ஆப்கான் கனிமங்கள் மீது சீனா கண்

ஆப்கானில் 8 டிரில்லியனிற்கும் அதிகமான இயற்கை வளங்கள் உள்ளன.உலகில் அதிகமான லிதியம் படிமங்களும் காணப்படுகின்றன. ஆனால் இவற்றை அகழவேண்டும்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 14,394 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. மேலும் 5,350 தொற்றாளர்கள் கடந்த 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை பிந்திக்கிடைத்த அறிக்கையின் படி சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.

’உறவுகளை சர்வதேசம் நிரந்தரமாக காணாமல் ஆக்கப்போகிறதா?’

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நிரந்தரமாக காணாமல் ஆக்குவதற்கே, சர்வதேசம் செயற்பட்டு வருவதாக, மன்னார் மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 6)

(அ.வரதராஜா பெருமாள்)

வீழ்ச்சி நிலையில் பொருளாதார வளர்ச்சி

உரிய வேலைவாய்ப்பு கேட்டு

தொடர்ந்து அதிகரிக்கும் இளைஞர் படை

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பிரதானமாக வேலையில்லாத இளைஞர்களின் வீதாசாரம் வீழ்ச்சியடைதல், வறியநிலையில் வாழும் மக்கள் தொகையினரின் வீதாசாரம் குறைதல், நாட்டு மக்கள் ஒவ்வொருவரதும் வாழ்க்கைத் தரம் உயர்தல் ஆகியனவற்றை மொத்தத்தில் குறிப்பதாக அமைதல் வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தர உயர்ச்சி என்பது வெறுமனே பண வருமானத்தின் உயர்ச்சியை மட்டும் கருத்திற் கொண்டதல்ல. பண வருமான உயர்ச்சியை அவதானிக்கின்ற போது பண்டங்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாகவும், அந்நியச் செலாவணி மாற்று விகிதம் தொடர்பாகவும் அந்த வருமானத்தின் உண்மையான பெறுமதியில் ஏற்பட்டிருக்கும் உயர்ச்சி மதிப்பிடப்படுதல் வேண்டும்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் அவலநிலை!

பாகிஸ்தானின் சனத்தொகையில் 95 சதவீதமானவர்கள் முஸ்லிம்கள். ஏனைய 5 சதவீதமானவர்கள் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிஸ், அஹ்மதிஸ் மற்றும் சில பிரிவுகளாவர். 

கொரனா: வவுனியாவுக்கு அச்சுறுத்தல்

வவுனியா மாவட்டத்தில், கடந்த இரு வாரங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களும் அதனூடாக ஏற்படும் மரணங்களும், தமது மாவட்டத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் என்பதை வெளிகாட்டுகிறது என, வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி க. ராகுலன் தெரிவித்தார்.

தமிழகம் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து?

தமிழகம் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் கோவை தெற்கு தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

30 ஆம் திகதிக்குப் பின்னர் நடப்பது என்ன? சுகாதார அமைச்சர் அதிரடி பதில்

தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு ஓகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ​அறிவித்துள்ளார்.  “பலரின் பரிந்துரைகளை பரிசீலித்த பிறகு முடிவு எடுக்கப்படும்” என்று அமைச்சர் கூறினார்.

இலங்கைத் தமிழர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நடமாடும் வர்த்தகம் செய்வோர்க்கு அறிவிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், ​​கொழும்பு மாவட்டத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட விற்பனையாளர்களால் மட்டுமே நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என, கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.