நவம்பர் மாத பணவீக்கமும் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்கமானது நவம்பர் மாதத்தில் 61 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், புதன்கிழமை (30) தெரிவித்தது.

மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் விவகாரம்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுப்பு

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இனிமேல் வாரத்தில் 4 நாட்களே வேலை; மகிழ்ச்சியில் மக்கள்

உலகில் பல நிறுவனங்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை என்ற கொள்கைக்கு மாறிவருகின்றன. அந்த வகையில் பிரித்தானியாவில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ளன.

GCE(O/L)-2021 : கிழக்கு மாகாணம்

அண்மையில் வெளிவந்த 2021ஆம் ஆண்டிற்கான கபொத(சா /த) பரீட்சை முடிவுகளின் படி கிழக்கு மாகாணத்தின் 17 கல்வி வலயங்களில், மட்டக்களப்பு கல்வி வலயம் (நகரப்பாடசாலைகளை உள்ளடக்கிய வலயம்) இலங்கையில் உள்ள 100 கல்வி வலயங்களில் முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளது. இவ்வலயம் கடந்த வருட பரீட்சையுடன் ஒப்பிடும்போது உயர்தரத்துக்கு தகுதி பெறுவோரின் வீதத்தில் 12% அதிகரிப்பை பெற்றுள்ளது. வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் அவர்களுக்கும், மற்றைய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்புரி அமைப்புக்கள், பெற்றோர், மாணவ செல்வங்கள் அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்.

படுவான்கரை என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 8.7% அதிகரிப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் வளங்கள் குறைந்த இவ்வலயம் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி அகிலா கனகசூரியம் தலைமையில் மிகவும் வளர்ச்சி கண்டு வருகின்றது.
முஸ்லீம் கிராமங்களை உள்ளடக்கிய மட்டக்களப்பு மத்தி, பட்டிருப்பு, கல்குடா மற்றும் திருகோணமலை மாவட்ட கிண்ணியா வலயங்களும் 3-4% சித்திவீத அதிகரிப்பை பெற்றுள்ளன.

கிழக்கு மாகாணம் 2018ஆம் ஆண்டு வரை இறுதி மாகாணமாக பலகாலம் இருந்து வந்தாலும் படிப்படியாக முன்னேறி தற்போது 4 வது மாகாணமாக உயர்ந்துள்ளது பாராட்டுக்குரியது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.

‘கஷ்மீர் ஃபைல்ஸ்’

‘சர்வதேசத் தலைவர்களுள்
முதலிடம் பிடித்துள்ள சிறந்த தலைவர்’ என்று
பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்
குறிப்பிடும் பாரதப் பிரதமர்
மாண்புமிகு நரேந்திர மோதி அவர்களாலேயே
“சிறந்த படம்! காணத் தவறாதீர்கள்!” என்று
மக்களுக்கு சிபாரிசு செய்யப்பட்ட திரைப்படம்.

பாடசாலைகளில் இணைந்து A/L கற்பதற்கான நிபந்தனைகள் என்ன?

 1. எந்த Stream இலும் கற்பதற்கான குறைந்த பட்ச நிபந்தனை O/L பரீட்சையில் 3C உம் 3S உம் ஆகும் இதில் கணிதமும் தமிழும் W இல்லாதிருத்தல் வேண்டும்.
 2. Bio கற்பதாயின் கணிதம் தமிழ் உட்பட
  3C உம் 3S உடன் விஞ்ஞான பாடத்தில் C அவசியமாகும்.
 3. Maths கற்பதாயின் 3C, 3S உடன் கணித பாடத்தில் C அவசியமாகும் விஞ்ஞான பாடத்தில் S அவசியமாகும்.
 4. Commerce கற்பதாயின் 3C, 3S உடன் அந்த C சித்தியில் வர்த்தகப் பாடம் அல்லது முயற்சியாண்மைக் கற்கை அல்லது கணிதம் அல்லது வரலாறு பாடத்தில் C அவசியமாகும்.
 5. Arts கற்பதாயின் 3C, 3S அவசியமாகும் அல்லது கணிதம் தமிழ் Pass பண்ணி 2C 4S இருந்தால் 3 வது C இற்காக SBA இல் கணிதம் தமிழ் தவிர்ந்த ஏனைய S எடுத்த பாடத்தில் 3 இருந்தால் கலைப் பிரிவில் கற்க முடியும். எப்பாடத்தினையும் எடுத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இடாப்பில் பெயரினை எழுதி A/L பரீட்சைக்கு பாடசாலையின் ஊடாக விண்ணப்பம் செய்ய முடியும்.
  3C, 3S உடன் தமிழ் பாடம் W ஆயின் அடுத்து வரும் 1 வருடத்திற்குள் தமிழ் பாடத்தில் O/L பரீட்சையில் S எடுத்தால் போதுமானது அல்லது 3C, 3S உடன் தமிழ் பாடத்தில் S எடுத்து கணிதப்பாடத்தில்
  W எடுத்தால் அடுத்து வரும் 2 வருடத்திற்குள் O/L பரீட்சையில் S எடுத்தால் போதுமானது. தமிழ் அல்லது கணிதம் W எடுத்த மாணவர்களின் பெயரினை Pending டாப்பில்தான் எழுதவேண்டும் மற்றய வழமையான இடாப்பில் எழுத முடியாது இம் மாணவர்கள் அடுத்து வரும் O/L பரீட்சையில் pass பண்ணி Results இனை பாடசாலையில் காண்பித்த பிற்பாடே Pending இடாப்பில் உள்ள பெயரினை நீக்கிவிட்டு மற்றய இடாப்பில் எழுத வேண்டும்.
  இவ்வாறு பூர்த்தி செய்த மாணவர்கள் A/L பரீட்சைக்கு பாடசாலையின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் பல்கலைக் கழகமும் தாராளமாகச் செல்ல முடியும் ஆனால் O/L பரீட்சைப் பெறுபேறு A/L பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வதற்கு பிற்பாடே வெளியாவதால் கணித பாட 2 வருட நிபந்தனையின் படி குறிப்பிட்ட மாணவர்களினை 2 வருடமும் பாடசாலையில் வைத்திருந்து பாடசாலையின் ஊடாக விண்ணப்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
  A/L பரீட்சைக்கு விண்ணப்பித்த பிற்பாடு குறித்த மாணவன் அடுத்த வருடம் O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்காது அல்லது W சித்தி பெற்றால் இம்மாணவனுக்கு A/L பரீட்சைக்கான அனுமதி அட்டையினை வழங்க முடியாது அவ்வாறு அனுமதி அட்டையினை வழங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.
  இம் மாணவன் கணித பாடத்தில் S எடுத்தால் பிரச்சினை எதுவும் இல்லை.
  W எடுத்தால் பிரச்சினை ஆரம்பமாகிறது
  A/L விண்ணப்பம் செய்கின்றபோது கணித பாடம் W எடுத்த மாணவர்கள் கேட்குகின்ற கேள்வி ஏன் நீங்கள் இவ்வளவு காலமும் பாடசாலையில் கற்க அனுமதி வழங்கினதால் தனிப்பட்ட முறையில் விண்ணப்பம் செய்ய முடியாது என மறுத்து அதனை உரிமை மீறலாகப் பார்க்கின்றனர் இப்பிரச்சினைக்கு இரு வழிகளில் தீர்வுகாணலாம்.
 6. O/L பரீட்சைப் பெறுபேறு A/L பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்னதாக வெளியாக வேண்டும் அல்லது
 7. பாடசாலையில் கணிதபாடத்தில் W சித்தியில் இணைந்தோர் அடுத்து வரும் ஆண்டில் ( ஒரு வருடத்திற்குள்) S சித்தி பெற வேண்டும் அவ்வாறு பெறாவிட்டால் ஒரு வருடத்தால் அம்மாணவர்களினை பாடசாலையில் இருந்து நீக்கிவிட வேண்டும் இதுதான் தற்போது அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறையாக இருக்குமென நினைக்கின்றேன்.
  அம்மாணவர்களினை நீக்கிவிடுகின்றபோது அவர்களிடம் கூறவேண்டும் ஒரு வருடம் தவறிவிட்டீர்கள் அடுத்து வரும் வருடம்
  O/L பரீட்சையில் S எடுத்தால் A/L பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சாத்தியாகத் தோற்றி பல்கலைக்கழகம் செல்ல முடியும் என்று கூறுங்கள் 2 வருடமும் தவறினால்தான் பல்கலைக்கழகம் செல்ல முடியாது.
  என மாணவர்களினை சரியான முறையில் தகுதியானவர்களினைக் கொண்டு வழிப்படுதல் ஆலோசனை சேவையினை வழங்குங்கள் குறிப்பாக தமிழ் பாடத்தில் W பெற்றவர்கள் ஒரு வருடத்தால் மீண்டும் W பெற்றால் அம்மாணவர்கள் தாமாகவே பாடசாலையினை விட்டு விலகிக்கொள்வர் இம் மாணவர்கள் தனிப்பட்ட பரீட்சாத்தியாக தோற்றினாலும் பல்கலைக்கழகம் செல்ல முடியாது.

தொழில் நுட்பப் பிரிவில் (Technology stream) பொறியியல் தொழில் நுட்பம்(E-Tech) கற்க விரும்பும் மாணவர்கள் 3 C 3 S உடன் கணித பாடத்திலும் விஞ்ஞான பாடத்திலும் S இருந்தால் போதுமானது கணித பாடத்தில் அல்லது விஞ்ஞான பாடத்தில் W இருந்தால் இத்துறையில் கற்க முடியாது உயிரியல் தொழில் நுட்பம் ( B- Tech) கற்க விரும்பும் மாணவர்கள் 3 C 3 உடன் கணித பாடத்தில் W என்றாலும் பிரச்சினை இல்லை.

ஆனால் விஞ்ஞான பாடத்தில் S சித்தி அவசியமாகும் கணித பாடத்தில் W ஆயின் நிபந்தனையின் பெயரில் இணைக்கப் பட்டு உரிய காலத்திற்குள் S பெறவேண்டும்.
இரு வருடங்களின் O/L பெறுபேற்றினைக்கொண்டு கலைத்துறையில் பாடசாலையில் மாணவர்களினை இணைப்பதாயின் முதல் வருடத்தில் 3 C 2 S பெற்று 5 பாடம் என இருந்தால் அடுத்து வரும் வருடம் O/L பெறுபேற்றினையும் இணைத்து இம்மாணவர்களினை பாடசாலையில் இணைத்துக்கொள்ள முடியும் குறித்த வருடம் 3 C 2 S இல்லாத மாணவர்களினை தவறான முறையில் இணைத்து விட்டு அடுத்து வருட O/L பெறுபேற்றோடு கற்க அனுமதி வழங்க முடியாது.
Note:-
ஒரே நேரத்தில் இரு நிபந்தனைகளுடன் மாணவர்களினை பாடசாலையில் இணைக்க முடியாது அதாவது கணிதமும் தமிழும்W அல்லது கணிதம் அல்லது தமிழ் W இருந்தால் 6 பாட சித்தியுடன் 2 C தான் எனில் 3 வது C இற்காக SBA பார்க்க முடியாது.
கலைப் பிரிவுக்கும் B- Tech இற்கும் நிபந்தனை அடிப்படையில் பாடசாலையில் இணைத்துக்கொள்ள முடியும் அது தவிர Bio Maths Commerce E- Tech போன்ற பிரிவுகளில் முடியாது.

Naasik Majeed

ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் ரயில் சேவைகள்

மஹாவ மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான ரயில் சேவைகள் 2023 ஜனவரி 15 முதல்  ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

உணவு பணவீக்க பட்டியலில் முன்னேறியது இலங்கை

உலகளாவிய ரீதியில் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் உணவுப் பணவீக்கம் 86 சதவீதமாக உள்ளதுடன், கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியான அறிக்கையில் இலங்கை 5ஆவது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics) இறுதிப் பகுதி


(அ. வரதராஜா பெருமாள்)


வட்டிவீதங்களின் அதிகரிப்பில் அரசின் இரட்டை இலக்குகள்

 1. பண்டங்களின் அதீத விலை அதிகரிப்பு ஏற்படுகிற போது பணம் கையிருப்பில் இருந்தாலும் அல்லது வங்கிகளில் வைப்புகளாக இருந்தாலும் அல்லது வேறு வகைகளில் நீண்டகால அடிப்படையில் அரசினதோ அல்லது அரசு சார் நிறுவனங்களினதோ அல்லது பெரும் தொழில் நிறுவனங்களினதோ, கடன் பத்திரங்கள், உறுதிப் பத்திரங்கள் மற்றும் பிணை முறிகளில் முதலீடு செய்திருந்தாலும் அந்தப் பணங்களின் மெய்யான பெறுமதி வீழ்ச்சியடையும் என்பது புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒன்றே. உயர்ந்த வருமானம் பெறுவோரும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பெற்றோரும் மற்றும் பணக்காரர்களுமே வங்கிகளில் தமது பணத்தை பெருந்தொகையில் வைப்புக்களாக வைத்திருப்பர். அதேபோல, பெரும் பணக்காரர்களும் பெரும் தொழில் நிறுவனங்களுமே அரசு சார் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வர்.
  இவ்வாறாக வைப்பு செய்யப்பட்டிருந்த அல்லது முதலீடு செய்யப்பட்டிருந்த அனைத்தினதும் மெய்யான பணப் பெறுமதி வீழ்ச்சியடைந்திருக்கிறது.
  இதனால் உயர் மத்திய தர வர்க்கத்தினரதும் பெரும் பணக்காரர்களினதும் கோபத்துக்கும் வெறுப்புக்கும் ஆட்சியாளர்கள் உள்ளானது இயல்பானதே. அறகலயவுக்கு அந்த வகையினர் தற்காலிகமாகவேனும் ஆதரவு அளித்ததற்கு இதுவும் ஒரு காரணமே.
  அரசின் பிழையான கொள்கைகளாலும் பாதகமான செயல்களாலும் சாதாரண பாமர மக்கள் எவ்வளவுதான் பாதிக்கப்பட்டாலும், அதனால் அவர்கள் ஆட்சியாளர்கள் மீது எவ்வளவுதான் வெறுப்பும் ஆத்திரமும் கொண்டாலும் அதனை அட்சியாளர்கள் பெரிதாக பொருட்படுத்துவதில்லை.
  2
  அதனை ஆட்சியாளர்கள் தமது பிரச்சார யந்திரங்களைக் கொண்டு திசை மாற்றி விடுவார்கள் அல்லது தமது அதிகார யந்திரங்களைக் கொண்டு பரந்துபட்ட பொதுமக்களின் ஆத்திரமும் வெறுப்பும் விரக்தியும் ஓர் அரசியல் எழுச்சியாக கிளர்ந்து விடாமல் அடக்கி விடுவார்கள் – ஒடுக்கி விடுவார்கள்: சட்டம், அமைதி மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் அவற்றிற்கான நியாயங்களையும் தமது செல்வாக்குக்கு உட்பட்ட ஊடகங்களினூடாக கட்டியெழுப்பி விடுவார்கள்.

இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics) பகுதி – 6


(அ. வரதராஜா பெருமாள்)


வங்கி வட்டி வீதங்கள் அதிகரித்தன விலை வீழ்ச்சி ஏற்படவில்லை

 1. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து நிலையான வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி வீதங்களையும், வழங்கும் கடன்களுக்கு அறவிடும் வட்டி வீதங்களையும் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்துள்ளன. அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மத்திய வங்கியினூடாக ஊக்குவித்துள்ளது. மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்குக் கொடுக்கும் கடனுக்கு வழங்கும் வட்டி வீதத்தை 15 தசம் (புள்ளி) .5 சதவீதமாக்கி, வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியில் வைக்கும் வைப்புக்கு வட்டியாக 14 தசம் .5 சதவீதமுமென ஆக்கியுள்ளது. அதேவேளை, அரச வர்த்தக வங்கிகள் வெளியார் மேற் கொள்ளும் நிலையான வைப்புகளுக்கு வழங்கும் வட்டி வீதத்தை 16 சதவீதம் தொடக்கம் 24 சதவீதம் வரை அறிவித்துள்ளன.