6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக உயிரை துச்சமெனக் கருதி நெருப்புக்குள் புகுந்த இந்து நபர் : மரிக்காத மனிதம்!


இந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிறார். வடகிழக்கு டெல்லியில் நடந்த சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தின் போது, இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா கும்பல் நடத்திய வன்முறை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“போராட்டத் திலகங்கள்”

பெப்ரவரி மாதம் 27ம் 28ம் திகதிகளை மலையக மக்களுக்கு நினைவு படுத்த வேண்டிய ஒரு துர்பாக்கியம், இது இன்றைய தலைமுறைகளில் ஒரு சிலரைத்தவிரப் பலருக்குத் தெரியாது.

தில்லி எரிப்பு: மோடி, ட்ரம் ஆரத்தழுவல்

(சாகரன்)

உலகில் உள்ள இரண்டு தலைவர்களில் முஸ்லீம்கள் மீது அதிகம் வெறுப்புள்ள தலைவர்கள் இந்;தியாவின் அகமதாபாத்
இல் பெப்ரவரி 24, 2020 ல் சந்திப்பை நடாத்தியுள்ளனர். அதுவும் ஏழை மக்களின் குடியிருப்புக்களை மறைக்க மதில் கட்டி இதன் மறுவளத்தில் இந்தக் கோலாகல சந்திப்பு நடைபெற்றுள்ளது.

1000 ரூபாய் சம்பளம்: மார்ச் 1 முதல் வழங்கப்படும்

தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு மார்ச் ​1 முதல் பெற்றுக்கொடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அண்மையில் மேற்படி சம்பள அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கத்தால் கைசாத்திடப்படவிருந்த முத்தரப்பு ஒப்பந்தம் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

திருகோணமலை மாவட்ட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், நகராட்சி மன்ற உறுப்பினருமான சிவகுமார் (சத்தியன்)அவருடைய தந்தை இன்று காலமானார். 27/02/2020 அன்னாரின் பூதவுடல் தில்லை நகர் இல்லத்தில் இருந்து மாலை 4.00 மணிக்கு இந்து மயானத்திற்கு கொண்டு செல்லப்படும்.

துரதிர்ஷ்டவசமானது.. இருதயம் நொறுங்குகிறது: டெல்லி வன்முறை குறித்து சேவாக், யுவராஜ் சிங்

டெல்லியில் நடைபெற்று வரும் சிஏஏ என்கிற குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாற இதுவரை பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

நாளை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை

நாட்டின் சில பிரதேசங்களில் நாளை வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென, வானிலை மத்திய நிலையம் ​தெரிவித்துள்ளது. விசேடமாக மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி, மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுசரணையில் இருந்து விலகியது இலங்கை; அறிவித்தார் தினேஷ்


2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அறிவித்துள்ளது. ஜெனிவாவில் இடம்பெறும் கூட்டத்தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இதனை உத்தியோகப்பூர்வமாக இன்று (26) அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

COVID-19-ஆல் புதிதாகத் தொற்றப்படுவோரின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி

சீனாவில் COVID-19-ஆல் புதிதாகத் தொற்றப்படுவோரின் எண்ணிக்கை இன்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய சுகாதார ஆணைக்குழுவின் தகவல்படி புதிதாக COVID-19-ஆல் தொற்றுண்டதாக உறுதிப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையானது நேற்றைய 1,749 பேர் என்ற நிலையிலிருந்து 394ஆக இன்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.