இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்!சிங்களவர் அல்ல (பாகம் 2)

அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் மக்களும் ஒன்றென்றும் எழுதியும் பேசியும் வந்தார்கள். இன்றும் பேசி வருகிறார்கள். இவர்களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தனா போன்றோர் கிறித்தவர்களாக இருந்து பின்னர் பவுத்தர்களாக மதம் மாறிக் கொண்ட அரசியல் பவுத்தர்களாவர்.

(“இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்!சிங்களவர் அல்ல (பாகம் 2)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 48 )

தம்பலகாமத்தில் சிறிபாலாவின் அடவடித்தனத்தை பற்குணம் அடக்கியதால் தமிழர்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு இருந்தது.எந்த வகையான விளையாட்டும் அவர் தயாரானவர் என்பதால் பணம்,அரசியல்,சண்டித்தனம் எதுவுமே அவரிடம் எடுபடாமல் போய்விட்டது. ஆனால் பற்குணம் சிறிபாலாவின் அடாவடித்தனத்தை தனக்குள்ளேயே மீளாய்வு செய்தார்.எவ்வளவு தமிழர்கள் அங்கே இருந்தும் சிறிபாலா சிங்களவர் என்ற ஒரே காரணத்தால் பயந்து நின்றனர்.எனவே இந்த நிலையை மாற்ற முடிவு செய்தார்.

(“பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 48 )” தொடர்ந்து வாசிக்க…)

தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [5]

நாபா, தேவா இருவர் மீதும் அதீத நம்பிக்கை கொண்டவராக இருந்த ஸ்டாலின் அண்ணா, இடைப்பட்டகாலத்தில் ஏற்ப்பட்ட தடுமாற்றங்கள் பற்றிய மன உளைச்சலில் இருந்தார். அவரை பொறுத்தவரை நாபா, தேவா இருவரையும் தன் இரு கண்களாகவே கருதினார். நாபாவின் அரசியல் அணுகுமுறை, தேவாவின் களைப்பற்ற கடின உழைப்பு, அண்ணாவின் மனதில் இருவருக்கும் சம ஸ்தானத்தையே கொடுத்திருந்தது. தாயகத்தில் ஏற்ப்பட்ட சலசலப்பை கலந்து பேசித் தீர்க்கலாம் என அண்ணா நம்பினார். அதற்க்கான ஏற்பாடுகளை செய்யும் வேளையில், இடையில் இருந்தவர் செயலால் அது தடைபட்டு கொண்டே சென்றது. அண்ணாவின் தலைமையில் அந்த முன்னெடுப்பு நடந்திருந்தால் நிலைமை வேறுவிதமாக அமைந்திருக்கும். ஆனால் இடைசெருகல்களின் செயலால் சுமுகமாக தீர்க்க வேண்டிய விடயம், சிண்டு முடியப்பட்டு பெரும் சிக்கலாக மாறியது.

(“தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [5]” தொடர்ந்து வாசிக்க…)

பிரித்தானியாவில் பிரித்தானியாவின் பிரித்தாளும் கொள்கை

லண்டனில் வசிக்கும் தமிழ் நண்பர் ஒருவருடன் உரையாடிய பொழுது, Brexit விடயத்தில் மக்கள் எவ்வாறு அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படுள்ளனர் என்பது தெரிய வந்தது. இந்தியர்கள், இலங்கையர்கள், ஆப்பிரிக்கர்கள் போன்ற முன்னாள் காலனி நாடுகளை சேர்ந்த குடியேறிகளைக் கவரும் வகையில், போரிஸ் ஜோன்சன் போன்ற அரசியல்வாதிகள் ஒரு கதையை பரப்பினார்கள்.

(“பிரித்தானியாவில் பிரித்தானியாவின் பிரித்தாளும் கொள்கை” தொடர்ந்து வாசிக்க…)

வெஞ்சினம் வராதோ இந்த வீணர்களின் செயல் கேட்டு

கொழும்பில் துறைமுகத்தை தாக்கச் சென்றவர்கள் தாக்குதல் நடத்தாமல் திரும்பி வந்ததற்காக சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். தண்டனை தாங்கமுடியாமல் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். தமிழினி இந்த உண்மையைக் கூறியிருக்கிறார். ஆனால் தமிழினிக்கும் தெரியாத பல இரகசிங்கள் புலிகளிடம் உண்டு. புலிகளின் புலனாய்வுத் துறையின் மோசமான நடவடிக்கைகள் புலித் தளபதிகள், உறுப்பினர்கள் எல்லோருக்கும் தெரிவதில்லை. ராஜீவ் கொலை பற்றி புலிகளின் தளபதியாக இருந்த கருணாவுக்கும் தெரிந்திருக்கவில்லை. அது சமபந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அவர்கள் வெளியில் வரும்போது அந்த உண்மைகளைக் கூறுவார்கள்.

(“வெஞ்சினம் வராதோ இந்த வீணர்களின் செயல் கேட்டு” தொடர்ந்து வாசிக்க…)

தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [4]

ஈரோஸ் இல் இருந்து பிரிந்தாலும், அதன் அடிப்படை கொள்கை, கோட்பாடுகளில் இருந்து ஈ பி ஆர் எல் எப் மாறுபட்டு செயல்ப்படவில்லை. ஏனைய போராட்ட இயக்கங்கள் தமது நிதி தேவைக்காக, தனிநபர் மாற்றும் வங்கிகளின் பணம், நகைகளில் கைவைத்த போது, ஈரோஸ் அதை ஏற்கவில்லை. அதன் வழிவந்த ஈ பி ஆர் எல் எப் பும் அதையே பின்பற்றியது. மக்களை அணிதிரட்டி, அரசியல் மயப்படுத்தி, மக்கள் பங்களிப்புடன்தான் ஈழ விடுதலையை பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இருந்தும் எப்போதும் தன் வழி தனி வழி என்று செயல்ப்படும் தேவா, இயக்க கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்ப ஒரு பத்திரிகை நடத்தவேண்டிய தேவை வந்தபோது, ஏற்பட்ட நிதி தேவைக்காக தனது உற்ற நண்பர்/தோழர் சி ரி[C T ] யுடன் தன்னிச்சையாக முடிவெடுத்து, திருக்கோவில் வங்கி பணத்தை அபகரிக்க முற்பட்டு, அது தோல்வியில் முடிவுற்றது. தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் ஏற்பட்ட காயத்தால், சி ரி உன்னிச்சை 7ம் கட்டை சிவா/பாஸ்கரன் உறவினர் [சண்முகம்] வீட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ, தேவா பிடிபட்டு சிறை சென்றார்.

(“தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [4]” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ஏ.ஜி.எ (பகுதி47 )

அரச அதிபர் திஸ்ஸ தேவேந்திரா சமூக,பொருளாதார,அரசியல், பலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.இவர் 1977 இனக் கலவரம் தொடர்பான சன்சோனி கமிஷன் விசாரணைக் குழுவின் செயலாளராகவும் பணி புரிந்தவர்.
இவர் ஒரு நாள் எதேச்சையாக ரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் திருகோணமலை வந்தார்.அந்த வகுப்பில் இரண்டு பொலிஸ்காரர்கள் பயணிகளுடன் தகராறு பண்ணிக் கொண்டிருந்தனர்.அதைக் கண்ட கோபமடைந்த திஸ்ஸ தேவேந்திரா கண்டித்தார்.அவரை யாரென்று அறியாத அந்த பொலிஸ்காரர்கள் இவரை அடித்துவிட்டனர்.இந்த சம்பவம் கபரணைக்கு முன்பாக நடந்தது.

இதையடுத்து திஸ்ஸ தேவேந்திரா கபரணையில் இறங்கி பொலிஸ் நிலையம் சென்றார். இவருக்கு முன்பாக அங்கு அந்த பொலிஸ்காரர்கள் அங்கே நின்றனர்.அவரகள் அந்த நிலையத்தை சேர்ந்த பொலிஸ் என்பது திஸ்ஸ தேவேந்திரா அவர்களுக்கு தெரியாது.அவரகளுக்கும் இவர் யார் என்று தெரியாது.எனவே மீண்டும் அவரை வாசலில் மிரட்டினார்கள்.

அவரோ கவனிக்காமல் உள்ளே போய் பொலிஸ் இன்பக்டரை பார்க்க வேண்டும் என்றார்.அப்போதும் இவர்கள் தகராறு பண்ணினார்கள்.சிறிது நேரத்தில் பொலிஸ் இன்பெக்டர் வர இவர் விசயத்தை சொன்னார்.இதனிடையே அந்த பொலிஸ் காரர்கள் இன்பெக்டரிடம் கதைக்க அவரோ சமாளித்து அனுப்ப முயன்றார்.திஸ்ஸ தேவந்திரா விடவில்லை. முறைப்பாட்டைக் கொடுத்தார்.இறுதியில் முகவரியைக் கேட்க அரசாங்க அதிபர்,திருகோணமலை என்றார்.அடித்த பொலிஸ்காரர்கள் அவர் கால்களில் வீழ்ந்து மன்னிப்புக்கேட்டர்கள்.இன்பெக்டர் எழுந்து நின்று சல்யூட் அளித்தார்.

அவரோ அடித்த இருவரையும் உடனடியாக வேலையை விடு நீக்குமாறு பணித்தார்.எந்தக் காரணம் கொண்டும் மன்னிக்க முடியாது.இது சாதாரண மனிதனுக்கு நடந்தால் அவன் என்ன செய்வான் என்று கூறி அவர்களை வேலையை விட்டு நீக்கப் பண்ணினார்.அந்த பொலிஸ் இனபெக்டரையும் எச்சரித்தார்.

இதுதான் பொலிஸ் புத்தி.இப்படி தமிழனுக்கு அல்லது இஸ்லாமியனுக்கோ நடந்தால் இனவாதமாக திரிபு படுத்திவிடுகிறோம்.ஒரு அரசாங்க அஅதிபருடன் எப்படி நடந்துள்ளர்கள்.எல்லா சம்பவங்களுக்கும் இன,மத,மொழி வேறுபாடுகள் காரணம் அல்ல.அதற்காகவே இந்த உண்மைச் சம்பவத்தை பதிவிடுகிறேன்.

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (Part 1)

‘இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு’ என்ற கூக்குரல் தென்னிலங்கை சிங்கள – பவுத்த பேரினவாதிகளால் உரத்த குரலில் ஒலிக்கப்படுகிறது. ஏற்கனவே சிங்கள பேரினவாதத்தை கக்கிக் கொண்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய, சுதந்திரத்துக்கான தேசிய இயக்கம் போன்ற கடும்போக்கு அமைப்புக்கள் மட்டும் அல்லாது அண்மையில் முளைத்திருக்கும் பொது பல சேனா, சிகல ராவய, இராவண பலய போன்ற அமைப்புக்களும் களத்தில் இறங்கியுள்ளன. இந்தப் பேரினவாத சக்திகளின் போர்க்கோலம் அய்ம்பதுகளில் தனிச் சிங்களத்துக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த வரலாற்றுக் காட்சிகளை நினைவு படுத்துகிறது.

(“இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (Part 1)” தொடர்ந்து வாசிக்க…)

EU இருந்து ஐக்கிய இராச்சியத்தின் பிரிவும் எம்மவர்கள் வெட்டி பேச்சும்..!!

கடந்த ஐந்து வருடங்களுக்கு ஐரோப்பிய யூனியனில், பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்து கொண்டது(கொள்ள பட்டது) யாவரும் அறிந்ததே. அவ்விணைவின் மூலம் திறக்க பட்ட எல்லைகளினால் இவ் ஐந்து வருடங்களுக்குள் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்குள் குடியேறியவர்கள் தொகை (+ அகதிகள் ) அண்ணளவாக 9 மில்லியன் மக்கள் வரும். இன்றைய நாட்களில் அவற்றில் அண்ணளவாக 5.5 மில்லியனுக்கு கூடுதலான மக்கள் ஐக்கிய இராச்சிய பிரசைகளாக மாறிவிட்டனர். மிகுதியாக இருப்பவர்கள் 3.5 மில்லியனுக்கு குறைவானவர்களே ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் பிரசைகளாக உள்ளனர்.

(“EU இருந்து ஐக்கிய இராச்சியத்தின் பிரிவும் எம்மவர்கள் வெட்டி பேச்சும்..!!” தொடர்ந்து வாசிக்க…)

36 இலங்கை தமிழ் அகதிகள் நாளை இலங்கைக்கு வருகை

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய ஒருங்கிணைப்புடன் நாளை செவ்வாய்க்கிழமை 36 இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதர உள்ளனர் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

(“36 இலங்கை தமிழ் அகதிகள் நாளை இலங்கைக்கு வருகை” தொடர்ந்து வாசிக்க…)