இலங்கை: மருந்து இல்லாமல் நோயாளிகள் மரணிக்கக்கூடும்

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்வரும் வாரங்களில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. 

மாணவிகள் துஷ்பிரயோகம்; பெண்கள் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.   இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு  நகர் பகுதியில் இன்று பெண்கள் பலர் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 46 பேர் நாடு கடத்தப்பட்டனர்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 46 இலங்கையர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு இன்று (30) காலை நாடுகடத்தப்பட்டனர். நாடுகடத்தப்பட்ட 46 பேரும் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். நாடுகடத்தப்பட்டவர்கள் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்களுள் 5 வயதுக்கு குறைந்த இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட எம்.பி

நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் மஹிந்தானந்த அளுத்கமகேயும் ஒருவராவார் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம் மஹ்தி தெரிவித்துள்ளார். அவரால் இன்று (30 ) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தனியாருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்

விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது என, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

22 ஆவது திருத்தம்: வர்த்தமானி வெளிவந்தது

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த சட்டமூலம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர்களை விடுதலை செய்ய ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணி பரிந்துரை

முன்னாள் விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ குழு பரிந்துரை

இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், யுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல், மத மாற்றத்தை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, ”ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது.

சிங்கப்பூர் உணவுப் பற்றாக்குறை: எப்படி சமாளிக்கிறது சின்னஞ்சிறு நாடு?

உணவுப் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி ஆகியவை குறித்து சாமானியர்களும் பேசத் தொடங்கி உள்ளனர். இவ்வாறு பேச வைத்திருக்கிறது கொரோனா கொள்ளை நோய் நெருக்கடி.

உதய்பூர் படுகொலை: இந்திய முஸ்லிம்கள் தலிபான் மனநிலையை அனுமதிக்க மாட்டார்கள்: ஆஜ்மீர் தர்கா தலைவர் கண்டனம்

இந்திய முஸ்லிம்கள் தலிபான் மனநிலையை அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறி உதய்பூர் சம்பவத்தை கண்டித்துள்ளார் ஆஜ்மீர் தர்காவின் தலைவர் தீவான் ஜைனுல் அப்தீன் அலி கான்.

பிடில் வாசிக்கும் நவீன நீரோக்கள்

(மொஹமட் பாதுஷா)

உரோம் நகரம் பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார் என்று சொல்வார்கள். அதுபோல, இலங்கை மக்கள் பெரும் அவலத்தைச் சந்தித்துள்ள இக்காலப் பகுதியில், ஆட்சியாளர்கள் மட்டுமன்றி, பொறுப்பு வாய்ந்த எல்லாத் தரப்புகளும், கிட்டத்தட்ட பிடில் வாசிக்கும் நவீனகால நீரோக்கள் போலவே செயற்படுகின்றன.