வித்தியாவின் படுகொலைத் தீர்ப்பும்….. அமைச்சரின் இராஜினாவும்…..

(Saakaran)வித்தியாவின் படுகொலைக்கான தீர்ப்பு நீதித்துறை மீது சில மரியாதை எற்படுத்தியிருக்கின்றது. அதுவும் குறிப்பிட்ட காலத்திற்குள் இதற்கான தீர்ப்பு வந்திருப்பதும் வரவேற்கத்தக்கது. நீதிமன்றத் தீர்ப்பில்; பெண் அமைச்சர் ஒருவர் குற்றவாளி(கள்) தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்தார் என்றும் இதனைக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது. கூடவே மக்களின் தாக்குதலில் இருந்து கற்றவாளிகளைக் காப்பாற்றியதற்பு பாராட்டும் தெரிவித்திருந்தது. ஒரு முதன்மை கொலைக் குற்றவாளி தப்புவதற்கு உடந்தையாக இருந்தது என்பதை வெறும் கண்டனத்துடன் நிறுத்தியிருப்பது இலங்கையில் இன்னமும் அரசியல்வாதிகள் சட்டத்திலிருந்து விலத்திப் பார்க்கும் வெளிப்பாட்டை காட்டி நிற்கின்றது. இதில் நீதிபதிகளும் சுதந்திரமாக? செயற்பட முடியாத நிலமை இருப்பதை எடுத்துக் காட்டியும் இருக்கின்றது. (“வித்தியாவின் படுகொலைத் தீர்ப்பும்….. அமைச்சரின் இராஜினாவும்…..” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கில் மையம் கொள்ளும் அரசியல் புயலால் சேதாரம் யாருக்கு ?!……

அண்மைக்காலமாக முக்கியத்துவம் பெறும் செய்தி கிழக்கு மாகாணத்தில் இடம்பெற போகும் தேர்தல்களை கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ள போகின்றன என்பதே. கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலை புலிகள், உட்பட யு என் பி, எஸ் எல் எப் பி, ஜே வி பி மற்றும் உதிரியாக உள்ள சில கட்சிகள் தனித்தோ அல்லது கூட்டாகவோ களம் இறங்குவர். (“கிழக்கில் மையம் கொள்ளும் அரசியல் புயலால் சேதாரம் யாருக்கு ?!……” தொடர்ந்து வாசிக்க…)

குர்திஷ் மக்களின் உரிமைப் போராட்டம் வெற்றியடையுமா…?

(சாகரன்)
உலகம் தேசிய இனங்களாகவும் இனக்குழுக்களாகவும் பிரிந்து இருப்பதினால் தேசங்களாகவும் இதனை இணைந்த நாடுகளாகவும் பிரிந்தும் இணைந்தும் இருக்கின்றன. மனித குலம் இரு வர்க்கமாக பிரிந்து நின்று தமது உரிமைகளுக்காக ஐக்கியப்பட்டு போராடக் கூடாது என்பதற்காகவே நாடுகளுக்குள் தேசங்களை உருவாக்கும் முரண்பாடுகளை சுரண்டும் வர்க்கம் ஏற்படுத்தி வருகின்றது. இணைந்து உரிமைகளுக்காக போராட முடியாத சூழலில் முதலில் தேசங்களாகப் பிரிவது பின்பு வர்க்க முரண்பாட்டிற்காக போராடுவது பின்பு வர்க உடன்பாடுகளுடன் இணைவது என்ற மாக்சிச கோட்பாட்டுன் தேசிய விடுதலைப் போராட்டங்கள் முற்போக்கானதாக பார்க்கப்பட்டு இதற்கு இடதுசாரிகள் ஆதரவும் தெரிவும் வந்தனர்.

(“குர்திஷ் மக்களின் உரிமைப் போராட்டம் வெற்றியடையுமா…?” தொடர்ந்து வாசிக்க…)

சர்ஜன வாக்கெடுப்பில் சுதந்திரத்துக்கு வெற்றி – குர்திஷ்தான் தலைவர் மசூட் பர்ஸானி

ஈராக்கிலிருந்து சுதந்திரம் பெற வேண்டுமா என, ஈராக்கிய குர்திஷ்தானில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில், “ஆம்” என்ற பிரிவு வெற்றிபெற்றுள்ளது என, குர்திஷ்தானின் தலைவர் மசூட் பர்ஸானி தெரிவித்துள்ளார். இதன்மூலம், அடுத்த கட்டமான பதற்றம், அப்பகுதியில் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது என, ஈராக்கும் ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட தோழமை நாடுகளும், தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை, இதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

(“சர்ஜன வாக்கெடுப்பில் சுதந்திரத்துக்கு வெற்றி – குர்திஷ்தான் தலைவர் மசூட் பர்ஸானி” தொடர்ந்து வாசிக்க…)

இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களின் தேர்வும்

(புருஜோத்தமன் தங்கமயில்)
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘சட்டம் தெளிவோம்’ என்கிற மாதாந்த நிகழ்வில், ‘சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா மற்றும் கே.துரைராஜசிங்கம்’ வழக்கில், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கியத்துவம் பற்றி, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் அருளானந்தம் சர்வேஸ்வரன் உரையாற்றினார். உரையின் இறுதிக் கட்டத்தில், கடந்த வாரம் வெளியான புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பிலும் ஆர்வத்தோடு சில கருத்துகளை முன்வைத்தார். குறிப்பாக, அந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை ஒரு படிநிலையாகக் கொண்டு, தமிழ் மக்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

(“இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களின் தேர்வும்” தொடர்ந்து வாசிக்க…)

மாகாண சபைகளுக்காகக் குரல் கொடுத்த ஒன்றிணைந்த எதிரணி

(எம்.எஸ்.எம். ஐயூப்)
கடந்த வாரம் அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட 20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தையும் அதேவாரத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தையும் பார்க்கும்போது, இந்த அரசாங்கத்துக்கு, நல்லதொரு விடயத்தையாவது சர்ச்சைகள் இல்லாமல் செய்ய முடியாதா என்ற கேள்வி எழுகிறது. அந்த இரு சட்ட மூலங்களையும் சர்ச்சைகளுக்கு வழிவகுக்காமல் இதைவிட இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால், அரசாங்கமே சர்ச்சைகளை உருவாக்கி, அவற்றில் சிக்கிக் கொள்ள நேரிட்டது.

(“மாகாண சபைகளுக்காகக் குரல் கொடுத்த ஒன்றிணைந்த எதிரணி” தொடர்ந்து வாசிக்க…)

வித்தியா படுகொலை வழக்கு: முழு விவரம்

  • 30 வருட கடூழியச் சிறை
  • வித்தியா குடும்பத்துக்கு
    ரூ. 7 மில்லியன் நட்டஈடு
  • 2 பேருக்கு தலா ரூ.70 ஆயிரம் தண்டம்
  • 5 பேருக்கு தலா ரூ.40 ஆயிரம் தண்டம்
  • ஒருவர் விடுவிப்பு
  • குற்றவாளிகள் குடும்பத்தினர் ஓலம்
  • விஜயகலா மகேஸ்வரனுக்கு விமர்சனம்

(“வித்தியா படுகொலை வழக்கு: முழு விவரம்” தொடர்ந்து வாசிக்க…)

ஜேர்மன் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி

(சாகரன்)

இரண்டாம் உலகப் போருக்கு காரணமான ஹிட்லரின் நாஜி கோட்பாடு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக ஹிட்லர் தோற்கடிகப்பட்ட பின்பு தீண்டத்தகாதாகவும் வேண்டத் தகாததாகவும் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் ஜேர்மனின் தற்போதைய தேர்தலில் இதே நாஜி கொள்கையை தூக்கிப்பிடித்த இரண்டாம் உலகப் போருக்கு பின் முதல் தடவையாக தேர்தலில் பங்கு பற்றிய Alternative for Germany (AfD) கட்சியிற்கு கிடைத்த வாக்குகள் உலகிற்கு மீண்டும் அதிர்சியூட்டும் செய்தியினை சொல்லி நிற்கின்றது. இது ஜேர்மனுக்கு மட்டும் பொதுவான செய்திகள் அல்ல. அமெரிக்காவில் ட்றம் இன் வெற்றியும் அமெரிக்காவே முதன்மையானது என்பதும் இதனை ஒத்த தேர்தல் செய்திகளை சொல்லி நிற்கின்றது.

(“ஜேர்மன் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாண மாநகரில் மீண்டுமொரு வெள்ளைமாளிகை ………………..

அமெரிக்காவின் வெள்ளைமாளிகையை நினைவுபடுத்துவதாய் , வான் பார்வையில் முதலாம் உலக மகா யுத்த விமானம் போன்று காட்சியளித்து பெரு மிடுக்கோடு அமைந்திருந்த நகரமண்டபம்
உள்நாட்டு யுத்தத்தில் சாம்பலாகிப்போனதும் மாநகரசபை தனக்கென ஓர் நிலையான தளமின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் அலைந்துலைந்ததும் வரலாற்றுத்துயர். அத்தகைய கொடிய பௌதிக அழிவுகளை மேவி எம் அபிவிருத்தி வேலைகள் துரிதமாக்கப்பட்டுள்ளன என்பதைப் பிரதிபலிக்கப்போவது யாழ்ப்பாண மாநகரசபையின் நகரமண்டப நிர்மாணம். (“யாழ்ப்பாண மாநகரில் மீண்டுமொரு வெள்ளைமாளிகை ………………..” தொடர்ந்து வாசிக்க…)

’எமது பிள்ளைகள் எங்கே?’

தமது பிள்ளைகள் தொடர்பில் உரிய தீர்வொன்றை முன்வைக்குமாறு வலியுறுத்தி, வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வீதியோரங்களில் பல்வேறு சிரமங்களுடன் போராடி வரும் தமக்கு, உரிய தீர்வை பெற்றுத்தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.

(“’எமது பிள்ளைகள் எங்கே?’” தொடர்ந்து வாசிக்க…)