தேர்தல் குறித்து சரத் பொன்சேகா எடுத்துள்ள தீர்மானம்

இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

லெபனான் மீதான தாக்குதலில் 2,255 பேர் பலி

செப்டெம்பரில், லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதில் இருந்து குறைந்தது 1,645 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மக்கள் ஆதரவு கணிப்பில் கமலா முன்னிலை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் பிரசார நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

தரமற்ற டின் மீன்களை விநியோகிக்கும் முயற்சி முறியடிப்பு

உரம் அல்லது கால்நடைத் தீவனம் தயாரிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு ஆர்சனிக், தீங்கு விளைவிக்கும் கன உலோகம் கலந்த டின் மீன்களை சந்தைக்கு விநியோகிக்கும் முயற்சி ஒன்றை சுற்றுச்சூழல் அமைச்சகம் முறியடித்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

‘களுத்துறையில்’ தமிழ் சுயேட்சை குழு

களுத்துறை மாவட்ட வரலாற்றில், நடைபெறவுள்ள பொது தேர்தலுக்காக  14 தமிழ் வேட்பாளர்களை உள்ளடக்கிய சுயேட்சை குழு ஒன்று “கோடரி” சின்னத்தில் போட்டியிட முதன்முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. 

கல்வி அமைச்சின் அறிவிப்பு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலையால், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமாயின், அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிகாரத்தை கல்வியமைச்சு வழங்கியுள்ளது.

மௌனமாகவே நடக்கும் அடக்குமுறை

(லக்ஸ்மன்)

‘காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?’ என்ற கேள்வியுடன், ‘எமது உறவுகளுக்கு நீதி வேண்டும்’, ‘சர்வதேச விசாரணையே வேண்டும்’, ‘காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வேண்டாம்’, ‘மரணச் சான்றிதழ் வேண்டாம்’ போன்ற வேண்டுகோள்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்ட வண்ணமே இருக்கின்றன.

மக்கள் மனங்களில் மறைந்தும் மறையாமல் வாழும் டாடா

(ச.சேகர்)

வியாபாரத் துறையில், மக்களின் நலனுக்கு முக்கியத்துவமளித்து, மக்களுக்காக சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கருமமாற்றுவது என்பது, இன்றைய உலகில் அரிதாகிவிட்டது. அவ்வாறான சூழலில், சமூக நலனுக்கு முன்னுரிமையளித்து செயற்படும் முக்கியமான வியாபாரச் செயற்பாட்டாளர்கள் எண்ணிப் பார்க்கக்கூடியவர்களே உள்ளனர்.

பிரதமரின் படங்களுக்கும் முன் அனுமதி தேவை

அரச நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பயன்படுத்துவதற்கு எழுத்துப்பூர்வ முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பட்டியல் பிரச்சினையால் கட்சிகளுக்குள் பிளவு?

முன்னாள் அமைச்சர்கள் பலர் தமது கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கு கடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதனால், கட்சிகள் வீழ்ச்சியடையும் அளவுக்கு கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.