22 மில்லியன் மக்களும் ஐந்து முன்னாள் ஜனாதிபதிகளும்

இந்நாட்டு மக்களுக்கு உணவு வழங்குவதில் உள்ள சிரமம் 2024இல் எப்படியும் இரு மடங்காகவோ அல்லது மூன்று மடங்காகவோ கூடுமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிவேக நெடுஞ்சாலை விபத்துக்கள்; இதுதான் காரணம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் விதிமுறைகளை கடைப்பிடிக்காத சாரதிகளே என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விசேட வேலைத்திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.இதேவேளை, கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு வரையிலான நெடுஞ்சாலையில் மின்சார விளக்குகளை பொருத்தும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழரை நடுத்தெருவில் விட்ட சத்தியாகிரகம்

1960 டிசெம்பர் 31ஆம் திகதி சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு மறுநாளே நடைமுறைக்கு வந்தது. 1961ஆம் ஆண்டு மொழிவாரிச் சிறுபான்மையினருக்கு மிகுந்த சவால்களுடன் தொடங்கியது. இது கல்வித்துறையில் எதிரொலித்தது. 1959 முதலே பல்கலைக்கழகங்கள் சிங்கள, தமிழ் மொழிமூல மாணவர்களை அனுமதித்தன. மருத்துவம், விஞ்ஞானம் மற்றும் பொறியியல் ஆகிய பீடங்கள் 1960களில் சேர்க்கப்பட்டன. பல்கலைக்கழகங்களில் இணைவோரின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்தது.

யாழ்ப்பாணத்திற்குஒருஆறு

யாழ் குடாநாடானது மிகவும் குறைந்தளவான 30′ மழைவீழ்ச்சியினை பெறுகின்ற அதே வேளை வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 60′ இற்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது.

பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. இப்போதும் கூட ஆளும் கட்சியினர் ஏனைய அரசியல் குழுக்கள் மற்றும் கட்சிகளுடன் இது தொடர்பில் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா: அகதிகளுக்கு குடியுரிமை திருத்த சட்ட விதிகள் தயார்

குடியுரிமை திருத்த சட்ட விதிகள்  தயாராகிவிட்டதாகவும் மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இதுகுறித்த அறிவிக்கை வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை (04) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 1.12 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 120 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (03) 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் செவ்வாய்க்கிழமை (02)  அரை மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கங்கள் முறையே ரிக்டர் அளவில் 4.4 மற்றும் 4.8 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் குண்டு வெடிப்பு: 103 பேர் பலி

ஈரானில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 141 பேர் காயமடைந்துள்ளனர். கெர்மான் பகுதியில் உள்ள ஈரானின் முன்னாள் தளபதி காசிம் சுலைமானின் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன. காசிம் சுலைமானின் நினைவு நாளை அனுசரிக்க ஏராளமானோர் கூடியிருந்தபோது, குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதுபான சாலையை அகற்ற கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலையை அகற்ற கோரி இன்றைய தினம் (03) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் நடைபெற்ற குறித்த போராட்டத்திக்கு வலுச்சேர்க்கும் வகையில் உடுப்பிட்டி பகுதியில் கடைகளையடைத்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் இறுதியில் பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்று ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கப்படவுள்ளதுடன் அதன் பிரதிகள் பல்வேறு தரப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. இப்போதும் கூட ஆளும் கட்சியினர் ஏனைய அரசியல் குழுக்கள் மற்றும் கட்சிகளுடன் இது தொடர்பில் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எவ்வாறாயினும், பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித ஆயத்தங்களும் இடம்பெறவில்லை என பாராளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.