சாலமன் பாப்பையா பேசிக் கொண்டுதான் இருப்பார்….!

(தோழர் சாகரன்)

36 இல் பிறந்து 26 இல் எமது மனங்களில் நீங்கா இடம் பெற்று தனது 90 வயதில் இயற்கை எய்தி உள்ளார் சாலமன் பாப்பையா.

அவரது வாழ்க்கைத் துணைவியார் ஜெயா பாய் தனது 88 வயதில் ஜனவரி 2025 ம் ஆண்டு காலமானார். அவரின் இழப்பு ஐயாவின் மூப்பை மேலும் வருத்தியது எனலாம்.

தமிழ் நாடு சட்ட சபை போட்டுக் காட்டிய வெளிச்சம்

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மொழியை தாய்மொழியாக படித்தவர்களுக்கு தமிழ் படிக்கத் தெரியவில்லை என்பது எவ்வளவு அசிங்கம்… கணக்குத் தெரியல ஆங்கில் தெரியலன்னா கூட பரவாயில்லை ஆனால் தமிழ் தெரியாமல் யாராவது இருப்பார்களா?

விஜய் இன் பதட்டம்

உண்மையில் நடிகர் இவ்வளவு ஆத்திரம் அடையத் தேவையில்லை. ஆட்சியில் இருக்கிறார். தில்லியும் அவருக்குத் துணை நிற்கிறது. மனைவி விவாகரத்து மனுவை வாபஸ் வாங்கி விட்டார். தோழியுடன் வெளிப்படையாக சுதந்தர நாளில் தமது அன்பை வெளிப்படுத்தினார்.

பாலா தம்பு: தொழிலாளர்களுக்காக அறுபத்தாறு ஆண்டுகள் ஒலித்த குரல்

ஒரே தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக அறுபத்தாறு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய ஒருவரை உலகத் தொழிற்சங்க வரலாற்றிலேயே காண்பது அரிது. அந்தச் சாதனைக்குரியவர் இலங்கையின் பாலா தம்பு. 1948-ஆம் ஆண்டு இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2014-ஆம் ஆண்டு தனது 92-ஆவது வயதில் மறையும் வரை அப்பொறுப்பில் தொடர்ந்தார்.

நேபாள அனர்த்தம் எமக்கு கூறும் எச்சரிக்கைகள்

(தோழர் சாகரன்)

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

“திருமணப்பதிவு எனும் காலனித்துவ நடைமுறை”.…………………

(Siva Malathy)

கிராமப்புறங்களில் இப்போதுகூட பதிவுத் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் இருக்கின்றனர். அதுபோல, ஒரு இருபது வருடங்களுக்கு முன்னர் பதிவுத் திருமணம் செய்யாமல் பாரம்பரிய முறைகளின்படி சடங்குத் திருமணம் செய்து சேர்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததென்றே கூறமுடியும்.

இந்தச் சிறுவனுக்காகவும் பாடிய அம்மா!உங்களுக்கு எனது அஞ்சலி !

(மல்லியப்புசந்தி திலகர்)

ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் உயர்தரம் முடிக்கும் காலகட்டத்தில், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து பாடசாலைக்கு வந்த அறிவித்தல் ஒன்றை மாணவர்களுக்கு அறிவித்தார்கள்.

காவரி நீர் பயன்பாடும் அதுசார்ந்த அர(ரி)சியலும்

(தோழர் ஜேம்ஸ்)

தமிழ் நாடு… சோற்றிற்கு காவிரி நீர் வேண்டும்,
கர்நாடகா… சோற்றை உண் பின்பு குடிப்பதற்கு நீர் வேண்டும்

காலத்தே பயிர் செய் என்பார்கள் தமிழ் நாட்டின் நெல் சாகுபடி தஞ்சை டெல்டா என்று அழைக்கப்படும் தஞ்சை பெரு நிலப்பு பரப்பை அதிகம் மையப்படுத்தியே நடைபெறுகின்றது

இது 90களில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒவ்வொருத்தரின் மனசுக்குள்ளும் புதைந்து கிடக்கிற ஒரு பசுமையான நினைவு.

நீங்கள் தொண்ணூறுகளில் அல்லது 2008வரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறீர்களா? அப்படி வாழ்ந்திருந்தால் உங்களுக்குத் தெரியும். அந்தப் பத்துப் பதினைட்டு வருடங்கள் ஈழத்து மக்களின் வாழ்க்கையில் வலிகளும், அதேசமயம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்குப் பசுமையான நினைவுகளும் கலந்த ஒரு காலகட்டம் என்று.

இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறை

  1. 18 – 19 ஆம் நூற்றாண்டுகள் (முறையான ஆதிக்கம்)
    சாதிய அமைப்பு இந்து ஆலய வழிபாட்டு முறைகளிலும், அன்றாட சமூக வாழ்விலும் ஆழமாக வேரூன்றியிருந்தது. நில உரிமையாளர்களான வெள்ளாளர்கள் தங்களை மேலாதிக்கம் கொண்டவர்களாக நிலைநிறுத்திக்கொள்ள கடுமையான “தூய்மை”வாத விதிகளை உருவாக்கினர். ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில்களுக்குள் நுழைவதைத் தடுத்ததோடு, சமூகத் தொடர்புகளில் கடுமையான “தீண்டாமை”யையும் திணித்தனர்.
  2. 1847 (கல்விக்கு எதிரான எதிர்ப்பு)
    யாழ்ப்பாணத் தமிழர்களின் முக்கியமான நாவலராகப் போற்றப்படும் ஆறுமுக நாவலர், யாழ்ப்பாணம் சென்ட்ரல் கல்லூரியில் நளவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் சேர்க்கப்பட்டதை எதிர்த்து, அங்கிருந்த தனது ஆசிரியர் பணியை விலகினார். இது கல்வி உரிமையில் சாதியம் தலையிட்டதற்கான தொடக்ககாலச் சான்றாகும்.
  3. 1920 – 1930 கள் (சமூகக் கட்டுப்பாடு)
    எளிய மக்களுக்கான சம உரிமைகளை வழங்கும் முயற்சிகளை உயர்சாதித் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். 1929 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு வகுப்பறைகளில் ஒடுக்கப்பட்ட சமூகச் சிறுவர்களும் சமமாக அமர்ந்து படிக்கும் “சம ஆசன” (Equal Seating) முறையைக் கொண்டுவந்தபோது, அதை எதிர்த்து உயர்சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளைத் தீக்கிரையாக்கினர்.
  4. 1957 (சம உரிமை எதிர்ப்பு)
    சமூக ரீதியான பின்னடைவுகளையும் தடைகளையும் சரிசெய்ய வாக்குறுதி அளித்த ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை முடக்கும் வகையில் உயர்சாதித் தமிழர்கள் தங்களின் ஆதிக்கத்தைத் தக்கவைக்க எதிர்ப்புகளைப் பதிவிட்டனர்.
  5. 1968 (சாதியப் போராட்டங்கள்)
    தங்கள் மீது திணிக்கப்பட்ட சாதிய விலக்கலுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் வீரியத்துடன் போராடத் தொடங்கியதால் ஒரு பெரிய “சாதியப் போர்” வெடித்தது. வெள்ளாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்குள் நுழையவும், அங்கே வழிபாடு செய்யவும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடிய ‘மாவட்டபுரம் ஆலயப் பிரவேசப் போராட்டம்’ இதில் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வாகும்.
  6. 1970 – 1980 கள் (உள்நாட்டுப் போரின் தாக்கம்)
    தமிழ ஆயுதப் போராட்ட இயக்கங்களின் (குறிப்பாக எல்.டி.டி.ஈ – LTTE) எழுச்சி, பாரம்பரிய சாதியக் படிநிலையைக் கணிசமாகக் குலைத்தது. அனைத்துத் தமிழர்களையும் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்ததால், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அமைப்பில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், இந்த மாற்றம் சாதியத்தை முழுமையாக ஒழிக்காமல், போர்க்காலத்தில் அதைத் தற்காலிகமாக மறைத்து வைத்தது அல்லது “கம்பளத்தின் கீழ் தள்ளி மறைத்தது” என்றே கூறலாம்7. 2009 க்குப் பிந்தைய நிலை (மீண்டும் தலைதூக்குதல்)
  7. 7. 2009 க்குப் பிந்தைய நிலை (மீண்டும் தலைதூக்குதல்)