அமரர் .பொன்.கந்தையா: [ 01. 07.1915 – 09.09.1960 ] 108வது பிறந்தநாள்.

இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூலவர்களில் ஒருவர்.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் ,கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் படித்து பட்டம் பெற்றவர்.

பிரதமர் மோடியும் : அமெரிக்காவின் விஜயமும்

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் அமெரிக்க அரசுமுறைப் பயணம், சர்வதேச அளவில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. அமெரிக்கா எந்த அளவுக்கு இந்தியாவுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது என்பதாக மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையே இதுநாள் வரை இருந்துவந்த தயக்கம் அகன்று வெளிப்படையான நட்புறவாக மாறியிருப்பதன் அடையாளமாக அதை உலகம் பார்க்கிறது.

நாட்டைவிட்டு வெளியேறியுள்ள 50 விசேட வைத்தியர்கள்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 50 விசேட வைத்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் 14.2 வீதத்தால் குறைந்தது

ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று நடைபெற்ற ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நான் LTTE அமைப்பில் இருந்தவன்; எச்சரித்த பிள்ளையான்

தமிழ் மக்களுடைய காணிகளை சிங்களவர்கள் அபகரித்ததால் நான் விடுதலைப் புலிகளில் இருந்து யுத்தம் செய்தேன். பின்னர்  நான் அரசியலுக்கு வந்தேன். எனவே அந்த மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்வு மற்றும் சில விடயங்களை நிறுத்துமாறு பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் சிங்கள மொழியில் பேசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒரே இரவில் தீர்வு?

(என். கே அஷோக்பரன்)

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், வலைத்தளத்தில் எழுதிவரும் ‘உரலார் கேள்வியும் உலக்கையார் பதிலும்’ என்ற கேள்வி – பதில் தொடரில், அண்மையில் கேட்கப்பட்டிருந்த, ‘ரணில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகண்டுவிவார் போல இருக்கிறதே’ என்ற கேள்விக்கு, ‘ஏறச்சொன்னால் கழுதைக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்’ என்ற நிலையில்த்தான், நமது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பலகாலமாய் நடந்து கொண்டிருக்கின்றன’ என்று தனது பதிலில் குறிப்பிட்டு இருந்தமை, கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது.

‘தமிழத் தேசியக் கூட்டமைப்பு’ – மக்களுக்கானதா? கட்சிகளுக்கானதா?

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA) என்ற பெயரில் ஏலவே பதிவு செய்திருந்த அரசியல் கட்சி ஒன்றின் பெயரில் கூட்டாக இணைந்து உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக கடந்தஜனவரி மாதம் 14ஆம் திகதி அறிவித்த TELO,EPRLF,PLOTE மற்றும் தமிழ் தேசியக் கட்சி, ஜனநாயகபோராளிகள் கட்சி என்பவற்றின் தலைவர்கள் அண்மையில் வவுனியாவில் ஒன்றுகூடி தமது எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பான பல தீர்மானங்களை எடுத்திருந்தார்கள். அவற்றுள் உண்மையான தமிழ்தேசிய கூட்டமைப்பு தாங்களே என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள்.இதனை அவர்கள்தங்கள் தொடக்கக் கூட்டத்திலும் சுட்டிக் காட்டியிருந்ததுடன் தேர்தல் விளம்பரங்களிலும்பயன்படுத்தியிருந்தனர்.

தியாகிகள் தினம்

லண்டனில் இன்று (24/06/2023) நடைபெற்ற 33 வது தியாகிகள் தின நிகழ்வுகளின் சில காட்சிகள்…. உணர்வுபூர்வமாக நடைபெற்ற இன் நிகழ்வில் வழமை போல் முற்போக்கு செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்திருந்தனர்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் (1883-1983)

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கறுப்பு ஜூலையின் நாற்பதாண்டுகளின் பின்னர் 06:

கறுப்பு ஜூலை இடம்பெறுவதற்கு சரியாக, ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கைத் தீவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தே, இந்தக் கட்டுரை நோக்குகிறது. 1883ஆம் ஆண்டு, இலங்கையில் இரண்டு முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்தன. 

விழிப்புணர்வு பேரணி

காத்தான்குடியில் இன்று(26) திங்கட்கிழமை போதை ஒழிப்பு ஊர்வலமொன்று இடம் பெற்றது. காத்தான்குடி பிரதேச செயலகம் காத்தான்குடி பிரதேச செயலக கலாச்சார பிரிவு என்பன இணைந்து காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் தலைமையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது