புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 2)

(சிவராசா கருணாகரன்) 

முக்கியமாக நான்காம் கட்ட ஈழப்போர் என்று வர்ணிக்கப்படும் இந்தக் காலகட்டப் போரில் புலிகளின் கடற்படை அல்லது கடற்புலிகளின் பலம் முற்றாகச் சிதைக்கப்பட்டது. அத்துடன் புலனாய்வுத் துறையும் அவர்களின் கரும்புலிகளின் அணியும் செயலற்ற நிலமைக்குத் தள்ளப்பட்டன. கொழும்பு நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டன. தவிர வன்னிக்கு வெளியே யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களின் சிறு அளவிலான ராணுவ நடவடிக்கைகளையோ அரசியல் செயல்பாடுகளையோ மேற்கொள்ள முடியாதவாறு சிறிலங்கா அரசின் புலனாய்வு நடவடிக்கைகளும் இறுக்கமும் இருந்தன. அத்துடன் கேனல் கருணா என்ற விநாயக மூர்த்தி முரளிதரனின் பிரிவோடு கிழக்கில் புலிகளின் ஆதிக்கமும் அதன் வழியான எல்லா வளங்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாகப் புலிகளின் போருக்குக் கிழக்கு இளைஞர்கள் பெரும் பலமாக இருந்தனர். கருணாவின் பிரிவோடு இது தடைப்பட்டது. 

ருவாண்டா படிப்பினைகள் – 04

இனச் சுத்திகரிப்பும் மீளெழலும்

(Thiruchchelvam Kathiravelippillai)

உலகத்திலேயே அதிகளவான சதவீதத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் நாடென்றால் அது ருவாண்டாதான். நாடாளுமன்றத்தில் 61.4 வீதமானவர்கள் பெண்கள்.

மரம்

மதுரையின் மிகப் பிரபலமான மரக்கடை குடும்பத்தாரின் மகன் எனது பள்ளிக் காலத்து நண்பன். அவரை பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் சந்தித்தேன். பள்ளியில் படிக்கும் போதே அவர் எங்களை விட இரண்டு வயது பெரியவர். எல்லோரும் அவரை பெருசு என்றே அழைப்போம். படிப்பு சரியாக வராது. கடுமையாக மனப்பாடம் செய்தாலும் பரிட்சையில் கோட்டை விட்டு விடுவார்.

ஈழத்தின் தலைநகர் – சதுர்வேத மங்கலம்- கந்தளாய் குளம்

ஈழத்தின் தலைநகர் என்று சொல்லப்படும் திருகோணமலையில் காணப்படும் மிக பெரிய குளம் கந்தளாய் குளம் .வரலாற்றுடன் பல தகவல்களை தன்னகத்தே கொண்டு தற்போது பெயர் திரிபுகள் பலவற்றை சந்தித்து வரும் பகுதி.கண்டிப்பாக ஈழத்தமிழர்கள் கந்தளாய் குளத்தை பற்றியும் அதன் பெருமையையும் தெரிந்து வைத்து இருப்பதுடன் அடுத்த சந்ததிக்கும் வாய்வழியாகவும் எழுத்து வடிவிலும் கொண்ட சேர்க்க வேண்டியது கடமையாகும்.

செருப்படியும், தீவைப்பும்..! மெல்லப் பதின்மூன்று இனி: தப்பிப்பிழைக்குமா..? சாகுமா..?

(அழகு குணசீலன்)

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நல்லாசியுடன் ஆட்சியில் அமர்ந்த நல்லாட்சி இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டுவரவிருந்த புதிய அரசியல் அமைப்பு காலத்தால் கனியவில்லை என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூறிவருகிறது. ஒரு நாடு ஒரே சட்டம் பேசும் இன்றைய  அரசாங்கம் மற்றொரு புதிய அரசியல் அமைப்பு பற்றி ஆரம்பத்தில் இருந்தே பேசிப் பேசி தற்போது  அந்த முயற்சி ஒரு  குழு வரை ஆமை வேகத்தில் நகர்ந்திருக்கிறது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் மாகாண சபைத் தேர்தலும்

(என்.கே. அஷோக்பரன்)

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள், இன்னாள் தலைவர்கள் சிலர் கையொப்பமிட்டு, பாரதப் பிரமருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தமை அனைவரும் அறிந்ததே!

மஹிந்த விரைவில் குணமடைய சீன சபாநாயகர் வாழ்த்து

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விரைவில் குணமடைவதற்கு வாழ்த்துத் தெரிவித்து சீனமக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்றத்தின் சபாநாயகர்) லீ சன்ஷூ கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இலங்கைச் செய்தி: கொரனா செய்திகள்

சடுதியாக உயர்ந்தது கொரோனா தொற்று. நாட்டில் மேலும் 1,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 611,185 ஆக அதிகரித்துள்ளது.

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய விழாவுக்கு இந்திய யாத்ரிகர்களை அனுமதிக்க முடியாது – இலங்கை

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்திற்கு, இந்திய யாத்திரிகர்களை அனுமதிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவிக்கின்றார்.