பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பினாலேயே இலங்கையில் சமஸ்டி முறை சாத்தியமாகும்

அ. வரதராஜா பெருமாள் —இலங்கையின் அரசியல் கட்டமைப்பு சமஸ்டி முறையைக் கொண்டதாக அமைய வேண்டுமானால், அதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறபோதே – அதற்கு பெரும்பான்மையான மக்கள் சட்டபூர்வமாக ஒப்புதல் அளிப்பதனை சாத்தியமாக்கின்ற போதே, அது இலங்கையின் அரசியலில் நடைமுறையாகும். சமஸ்டிதான் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக அமைய வேண்டும் என தமிழர்கள் தங்களுக்குள்ளேயே மட்டும் பேசிக் கொள்வதாலோ அல்லது தமிழ் ஊடகங்களில் மட்டும் விவாதங்களை நடத்துவதாலோ சமஸ்டி தொடர்பாக இலங்கையின் அரசியலை இஞ்சியளவு கூட நகர்த்த முடியாது.

மாகாண சபை தேர்தல் நடக்கும்

சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து, யோசனைகள் மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்கான விசேட செயற்குழு, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி கூடி ஆராய்ந்துள்ளது.

தமிழனுக்குத் தமிழனே எதிரி

(மொஹமட் பாதுஷா)

ரணில் விக்ரமசிங்கவின் கடந்த  ஆட்சியில் அரசியலமைப்பு பேரவைக்குச் சிறிய கட்சிகள்  சார்பில் தமிழ் பிரதிநிதியாக ஒருவரை  நியமிக்கப் பேரினவாதக் கட்சிகள் காட்டிய எதிர்ப்பும்  அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாகத்  தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவரும் தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும் யாழ் மாவட்ட  எம்.பியுமான தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயரை பிரேரித்து விட்டு, அவரை நியமிக்குமாறு  தமிழ் தேசியக் கட்சிகள் நடத்திய  போராட்டமும்  ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி கலையும் வரை சித்தார்த்தன் நியமிக்கப்படாமையும் வரலாறு.

ஜனாதிபதித் தேர்தலா? சர்வஜன வாக்கெடுப்பா?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

கடந்த வாரம் நாம் ஆராய்ந்த விடயத்தின் தொடரச்சியாகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கபப்டவிருக்கும் நிலையில், அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதியினதோ அல்லது பாராளுமன்றத்தினதோ பதவிக் காலத்தை நீடிப்பதோடு மட்டுமே சம்பந்தப்பட்ட ஒரு விடயத்துக்காக அரசாங்கம் அரசியலமைப்பை திருத்த அவசரப்படுவது ஏன்?

மற்றுமொரு படியெடுப்பாக தமிழ்த் தேசியப் பேரவை

 (லக்ஸ்மன்)

ஜனாதிபதி தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் சிவில் அமைப்புகளினால் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்காகச் செயற்படுவதற்கான அமைப்பினை ஏற்படுத்திக்கொள்வதில் கடந்த மாதத்தில் மக்கள் அமைப்பாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பொதுச் சபை மீண்டும் ஒரு பெயர் மாற்றத்திற்கு உட்பட்டு தமிழ்த் தேசியப் பேரவையாக இறுதிப் படியாக அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மாற்றம் ஏற்படாமலிருக்கும் என்று சொல்ல முடியாது.

இலங்கை இந்திய ஒப்பந்தம்: 13 வது திருத்தச் சட்டம்… மாகாண சபைச் சட்டம்

1987ம் ஆண்டின் இந்திய இலங்கை சமாதான உடன்பாட்டின்படிதான் 13வது திருத்தம் உருவாக்கப்பட்டது என்பது பலரதும் அபிப்பிராயம்.

பொதுவாக அவ்வாறு கருதப்பட்டாலும், அது தொடர்பாக உள்ள நுட்பமான வேறுபாட்டைத் தெரிந்து கொள்வதுவும் அவசியமாகும்.

இந்திய இலங்கை உடன்பாட்டில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சுருக்கமாக பின்வருமாறு:

புதுப்புது அரசியல் குழப்பங்கள்

(மொஹமட் பாதுஷா)

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகக் கூறி, நாட்டைப் புதிய இயல்பு நிலைக்குத் திருப்பிய பிறகு, அதைவிடப் பெரிய அரசியல் குழப்பங்கள், நாட்டைத் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளன. அரசாங்கம் இவற்றை மறைக்க, என்னதான் பகிரதப் பிரயத்தனங்களை எடுத்தாலும், ‘ஒரு சோற்றுப் பீங்கானுக்குள் முழுப் பூசணிக்காய் போல’, அவையெல்லாம் வெளியில் துருத்திக் கொண்டு தெரிகின்றன.

ஜெனீவாவில் இருப்பதா, வீற்றோவால் தொலைப்பதா?

(புருஜோத்தமன் தங்கமயில்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவர பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கின்றன. 

மறக்கமுடியுமா?

எத்தனை வருடம்? எத்தனை மரணங்கள்? ஒரு அழகான தேசத்தின் அமைதியைக் கெடுத்த கொடியவர்கள். மறக்கமுடியுமா? திருநெல்வேலி சந்தியில் தொடங்கிய வெறியாட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது. முடிக்கப்பட்டது. முப்பது வருடங்களாக எவராலும் எங்கேயும் நிம்மதியாக உறங்கவிடாமல் கெடுத்தவர்களை எப்படி மறப்பது? நாங்கள் மரணிக்கும்வரை அவர்களின் பயங்கர வெறியாட்டங்கள் மறக்கமுடியாது.

(“மறக்கமுடியுமா?” தொடர்ந்து வாசிக்க…)

என்னை நல் ஆசான் ஆக்கிய ஆசான்களை வணங்கி நிற்கின்றேன்

என்னை நல் மாணாக்கனாக்கிய ஆசிரியர் அனைவருக்கும் ஆசிரியர் தினத்தில் மீண்டும் எனது மரியாதை கலந்த வணக்கங்கள். அருவரியில் ஆரம்பித்து பல்கலைக் கழகம் வரையும் மரத்தடி விளையாட்டுத்திடலில் ஆரம்பித்து மக்களின் விடுதலைக்காகான பொதுவாழ்வில் பயணத்தை மேற்கொள்வதற்கு எனக்கு பல்வேறு ஆசிரியர்களின் வழிகாட்டல் பேருதவியாக இருந்தது. என்னைப் பெற்றெடுத்த என் தந்தையர் எனது இன்று வரையிலானான மாசீக குரு. அவர் தனது காலத்தில் கல்வி கற்றது வெறும் 3ம் வகுப்பு என்றாலும் இன்று சபையில் நான் தலை நிமிர்ந்து நடப்பதற்கான நேர்மை, நீதி, ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து இவர் வகுத்துக் கொடுத்த வாழ்கைப் பாதை தான் முதல் காரணமாக அமைகின்றது. இதனைத் தொடர்ந்து அவையத்து முன்னிருக்க எனது குஞ்சியப்பு மாமா போன்றவர்கள் பேருதவியாக செயற்பட்டனர். இதில் தான் ஈற்றெடுக்காவிட்டாலும் தனது இரத்தம் என்று எனக்கு வழிகாட்டியாக நின்ற அந்த குஞ்சப்புவையும் மாமாவையும் நான் அடிக்கடி நினைவில் நிறுத்துவதுண்டு.

(“என்னை நல் ஆசான் ஆக்கிய ஆசான்களை வணங்கி நிற்கின்றேன்” தொடர்ந்து வாசிக்க…)