வலதுசாரிகளுக்கு எதிராக அணி திரண்ட மக்கள்!

(Maniam)

தென் அமெரிக்க நாடான ஹொண்டுராசில் (Honduras) கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சியோமாரா காஸ்ட்ரோ (Xiamomara Castro) என்ற இடதுசாரி சார்புள்ள பெண்மணி வெற்றி பெற்று ஜனாதிபதினார்.

அங்க பிரதட்சணம் செய்தவர் மரணம்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் அங்கப் பிரதட்சணம் செய்த  யாழ்ப்பாணம், நாவலர் வீதியை சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் (வயது 57) என்பவர்  உயிரிழந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் நான் குதிப்பேன்: அநுர

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தான் தேர்ந்தெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

10,000 இற்கும் அதிகமான ஏரிகள் வறண்டுள்ளன

நிலவும் கடும் வறட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் 10,000 இற்கும் அதிகமான குளங்கள் முற்றுமுழுதாக வறண்டுள்ளதாகவும் முக்கியமான அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீரின் அளவு 35 – 40  வீதத்தினால் குறைந்துள்ளதாகவும்  விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமலுக்கு வருகிறது வட்டி குறைப்பு

ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல், உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அனைத்து வட்டி விகிதங்களை குறைக்க மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. அடமான வட்டி விகிதங்கள், கடனட்டை வட்டி விகிதங்கள் போன்றவற்றின் வட்டி விகிதங்களைக் குறைக்க இதன் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மடகாஸ்கர் மைதானத்தில் நெரிசல்: 12 பேர் பலி

மடகாஸ்கரில் மைதானம் ஒன்றுக்குள் ரசிகர்கள் நுழைய முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்துள்ளனர்.

பத்மநாபா அறிவாற்றல் கழகம்

பத்மநாபா அறிவாற்றல் கழகம் ஏற்பாடு செய்த “சுயத்தை உருவாக்குதலுக்கான தேடல்” என்ற தலைப்பிலான கருத்தரங்கு நேற்று (25.08.2023) மட்டக்களப்பில் நடைபெற்றது.

வெளிப்படைத்தன்மை பெரிய தாக்கத்தை உருவாக்கும்

பரஸ்பர நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்க உதவும் என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

துருக்கியில் பரவும் காட்டுத்தீ

கிரீஸில் பரவி வரும் காட்டுத் தீ, அண்டை நாடான துருக்கியிலும் பரவி வருகிறது. இதனால் ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தீயில் 1,500 ஹெக்டேர்களுக்கு மேல் எரிந்துள்ளது. மேலும், 48 பேர் பயங்கர புகை காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் மரணம்

விமான விபத்தில் ரஷ்யாவின் வாக்னர் குழு தலைவர் உட்பட 9 பேர் மரணமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுளளது. சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டது இந்த வாக்னர் குழு.