அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு பொதுமக்கள் முன்னிலையில்

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடும் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (31-01-2016) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது..காவிகளும் பாவாடைகளும் மட்டும் ஆசீர்வதிக்க கூப்பிட்ட தீர்வுப் பொதிக்குள் சிறுபான்மைமக்கள் யாவரும் உள்ளடக்கப்படவில்லை என்ற செய்தி இருக்கின்றது. இது வடக்கிற்கான சிறப்பாக யாழ்ப்பாணத்தின் கருதுகோள் அடிப்படையில் மட்டும் இருக்கும் என்பது தெரிகின்றது. (வரைவு நகல் என் கையில் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தும் இதனை வாசிக்க முன்பு இந்த முடிவிற்கு நான் வந்திருக்கின்றேன்). ஆனாலும் புலிகளால் கட்டி வைக்கப்பட்ட இந்த கூட்டு இப்பவாவது ஏதோ எழுதித் தொலைத்திருக்கின்றது என்ற மகிழ்ச்சி என்னிடம் இல்லாமல் இல்லை. இந்நிலையில் ” நான் பதவியிலிருக்கும்வரை ஒற்றையாட்சியை ஒழிப்பதையோ அல்லது வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்படுவதையோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.”என
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.

குழப்பத்தில் இரண்டாம் தலைமுறை புலம் பெயர் எமது பிள்ளைகள்

கனடாவில் வாழும், புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பத்தை சேர்ந்த இரண்டாம் தலைமுறைப் பெண் ஒருவர் தயாரித்த யூடியூப் வீடியோ சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது. அவர் அந்த வீடியோவில் தனது தமிழ் சமூகத்தில் உள்ள குறைகளை நையாண்டி செய்துள்ளார். ஊரில் வாழும் உறவினர்களுக்கு, கனடாவில் வாழும் தமிழர்கள் பணம் அனுப்புவதை குறை கூறி கிண்டல் அடித்துள்ளார்.

(“குழப்பத்தில் இரண்டாம் தலைமுறை புலம் பெயர் எமது பிள்ளைகள்” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவின் புதிய முன்னணிக்கு தினேஷே தலைவர்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய முன்னணிக்கு, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன, தலைவராக நியமிக்கப்படுதற்கான சாத்தியம் நிலவுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(“மஹிந்தவின் புதிய முன்னணிக்கு தினேஷே தலைவர்?” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் தீர்வும் கைதுகளும் சிறையிலடைப்பும்

(சாகரன்)

கைதுகளும் சிறையில் அடைப்புகளிலும் சில நியாயங்கள் இல்லாமல் இல்லை. தேரரின் கைது, மகிந்த குடும்பத்தின் செல்ல வாரிசின் கைது இவற்றைத்தான் குறிப்பிடுகின்றேன். ஆனால் இவை நடைபெறும் காலம் எனக்குள் ஒரு கேள்விக் குறியை எழுப்பி நிற்கின்றது. கண்டி யாத்திரை சென்றவரின் மருமகன் ஒன்றும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தருவதில் விருப்புடையவர் அல்ல. சந்திரிகா அம்மையாரின் தீர்வுப் பொதியை எரித்து நிறுதியவர். ஏன் கருணாவை உடைத்து வேகமாக புலியை இல்லாமல் செய்தவர். இதன் மூலம் நோர்வேயின் ஒஸ்லோ சமஷ்டி வாய்ப்பை இல்லாமல் செய்தவர். இவரின் அரசியல் பெரியப்பா 13 வதில் இருந்த அதிகாரங்களை பறித்தெடுத்து இணைந்திருந்ததை தமிழ் மாகாண அரசை பிரிக்க அத்திவாரம் போட்டவர். சில வெளிநாட்டுச்(மேற்குலக) சக்திகளின் விருப்பு இலங்கை முழுவதிற்குமான சந்தை வாய்ப்பு, தமது செ(சொ)ல்வாக்கு பிரதேசமாக இலங்கையை வைத்திருத்தல் என்பதே. இதற்கான வேண்டுதலை ஜேஆர் இன் மருமகன் தனது பதவியை(19 தேர்தல்களில் தோற்ற பின்பு கிடைத்த வெற்றி) தக்க வைத்துக்கொள அனுசரிக்க வேண்டிய நிர்பந்தம். அதுதான் புதிய அரசியல் அமைப்பு சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வு என்று கூறித்திரியும் வேடம். ஆனால் மனத்தில் துளியளவும் சிறுபான்மை மக்களுக்கு உரிமை வழங்களில் வெறுப்புள்ளவர். எனவே தொட்டிலையும் ஆட்டி பிள்ளையை கிள்ளிவிடும் செயலாகவே இந்த கைதுகள் பரிணாமம் அடையும் என்பது என் பார்வை.

(“அரசியல் தீர்வும் கைதுகளும் சிறையிலடைப்பும்” தொடர்ந்து வாசிக்க…)

யோஷித்த ராஜபக்ஷ கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசாரணைகளுக்காக கடற்படை தலைமையகத்துக்கு இன்று காலை 10.30 மணியளவில் அவர் சென்றிருந்தார். விசாரணைகளை அடுத்து, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ, கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.மஹிந்த சற்று முன்னர் வந்தடைந்தார். அவர் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு மணித்தியாலம் ஆகிறது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கடுவலை நீதவான் நீதிமன்றத்துக்கு சற்று முன்னர் வந்தடைந்தார்.

தோற்றுப்போன தமிழர் தரப்பு

தீர்வை வழங்க கூடாது என்ற சிங்கள தரப்பின் ஒற்றுமைக்கு முன்னால் தோற்றுப்போன தமிழர் தரப்பு!

1972ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் யாப்பு அதன் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவில் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட யாப்பு, அதன் பின்னர் செய்யப்பட்ட 19 யாப்பு திருத்தங்களுக்கு பதிலாக புதிய அரசியல் யாப்பை மக்கள் ஆலோசனைகளை பெற்று முன்வைக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து தமிழர் தரப்பும் யாப்பு திருத்தத்தில் தமது கோரிக்கைகளை முன்வைக்க தயாராகி வருகின்றன. தமிழர்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பாக ஒற்றுமையாக தமது கோரிக்கையை முன்வைக்க முடியாத நிலையில் தனித்தனியாக தமது யோசனைகளை தமிழர் தரப்பு முன்வைக்க உள்ளன. தமிழர்களின் கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்பதில் சிங்கள தரப்பு ஒன்றுமையாக இருக்கிறது. ஆனால் தமக்கு என்ன தீர்வு என்பதை முன்வைப்பதில் தமிழர் தரப்பிடம் ஒற்றுமை இல்லை.

(“தோற்றுப்போன தமிழர் தரப்பு” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் ஒருங்கிணைப்பு குழு கட்டத்தை ஈ.பி.டி.பி புறக்கணிப்பா ?

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த 13 மாதங்களுக்கு பின்னர் இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகி வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்று வருகின்றது.

(“யாழ் ஒருங்கிணைப்பு குழு கட்டத்தை ஈ.பி.டி.பி புறக்கணிப்பா ?” தொடர்ந்து வாசிக்க…)

முதல்வருக்கு உறுப்பினர்களின் ஆட்சேபனை கடிதம்!

இன்று [30-01-2016] அவசரமாக கூடிய வடமாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், முதல்வருக்கு தமது ஆட்சேபனை கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர். அக்கடிதம் பின்வருமாறு.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே!

“அரசியல் தீர்வு திட்டம்” தொடர்பிலான வடக்கு மாகாணசபை ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் கூட்டான நிலைப்பாடு:

கடந்த 20-01-2016 அன்று மாண்பிமிகு முதலமைச்சர், கௌரவ பேரவைத்தலைவர், கௌரவ அமைச்சர்கள், கௌரவ உறுப்பினர்கள் [வடக்கு மாகாணசபை ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு] உடனான விசேட சந்திப்பின்போது மூன்றுவிடயங்கள் குறித்து பேசப்பட்டது.

(“முதல்வருக்கு உறுப்பினர்களின் ஆட்சேபனை கடிதம்!” தொடர்ந்து வாசிக்க…)

ஈழவிடுதலைப் போராட்டமும்….. பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும்…..

(இது ஒரு முகப்பு புத்தகத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு)

ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு சர்தேச அளவில் ஆயுதப் பயிற்சி(லெபனான் பயிற்சி எனக் கூறுவர்) வழங்கியதில் பாலஸ்தீன மக்களிடையே உள்ள விடுதலை அமைப்பின் இடதுசாரிச் செயற்பாடாளர்கள் PFLP அமைப்பினரே முதன்மை பெறுகின்றனர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ஒரு குடை அமைப்பின் கீழ் இவ் அமைப்பு இருந்திருந்தாலும் தனது சித்தாத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணிக்குள் தமது கருத்துக்களுக்கான உள்ளக அமைப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியே வந்திருக்கின்றனர். சகோதரப் படுகொலை பாரியளவில் நடைபெறாத விடுதலைப் போராட்டத்தை கொண்டிருந்த இந்த மக்களின் போரட்டப்பாதையில் ஹமாஸ் சில தடவைகள் சகோதரப் படுகொலையில் ஈடுபட்ட காலங்களிலும் இதனைத் தவிர்ப்பதில் இந்தPFLP கணிசமான வெற்றிகளை கண்டே வந்திருக்கின்றது.

(“ஈழவிடுதலைப் போராட்டமும்….. பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும்…..” தொடர்ந்து வாசிக்க…)

கேள்வி செவியர் ஊரை கெடுப்பார்! வினை விதைப்பார்!

அண்ணனுக்காக போர்க்களம் பலகண்டு எட்டுத்திக்கும்வென்று, தேவலோக தலைவன் இந்திரனை கூட இராவணன் காலடியில், மண்டியிட வைத்தவன் கும்பகர்ணன். இனி வெல்வதற்கு எவரும் இல்லை என எண்ணியபோது தான் அவனுக்கு அசதி ஏற்ப்பட்டது. பல காலம் தான் தூங்கவில்லை என்ற நிலை புரிந்தது. அரக்கர் முதல் தேவர் வரை அனைவரையும் வென்ற பின், இனி போருக்கு தேவை இருக்காது என அவன் தூக்கத்தை அரவணைத்த போதுதான், இராவணன் சீதையை கவர்ந்து வந்தான்.

(“கேள்வி செவியர் ஊரை கெடுப்பார்! வினை விதைப்பார்!” தொடர்ந்து வாசிக்க…)