ஊரடங்கு தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!

கொழும்பிலும், புறநகர்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை ஐந்து மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு – மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் முன்னெடுத்த நிலையில், கொழும்பில் பல இடங்களில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

ஒவர் டைம் வேலை செய்யும் இந்தியா

நாடு தற்போது முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார​ நெருக்கடியை சமாளிப்பதற்காக, ஒவ்வொரு நாடுகளிடமும், அமைப்புகளிடமும் கடன் கேட்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்த வேண்டும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நீண்டகால காத்திருப்புக்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கின்றது.

இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும்

புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ள தமிழக முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சுமார் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேச்சுவார்த்ததை நடத்தினார். இதன் போது,   இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் எனவும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வழியாக உதவிகளை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

மஹிந்தவும் மகன் நாம​லும் ஒரேமாதிரி அறிவிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது புதல்வரான அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும் ஒரேமாதிரியான அறிவிப்பை விடுத்துள்ளனர். முன்னதாக அறிவிப்பை விடுத்திருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது அமைச்சு மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் கடமையாற்றுவோர், வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறைமைக்கு மாறுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

மாண்டவர்கள் நாங்கள் பேசுகிறோம்….

(தோழர்கள்)

கந்தன் கருணையில்

கருணையற்றுப் பாசிசப்புலியின்

துவக்குச் சூட்டால்

துடிக்கப் பதைக்க

மாண்டவர்கள் நாங்கள்

பேசுகிறோம்…

ஏனென்று கேட்காமல்

எதுக்கென்றும் கூறாமல்

எங்களைக் கைதுசெய்தீர்களே

எங்கேயிப்போது நீங்கள் ?

எங்களை நிராயுதபாணியாக்கி

சித்திரவதைப் பண்ணி

கொன்றுதான் போனீர்களே

எங்கே நீங்கள் ?

எங்கள் மூச்சுக்கள்

காற்றில் கலக்கும்போது

நாங்கள் விட்ட

சாபப் பெருமூச்சு

ஒருநாள் நீதிகேட்கும்…

துவக்கோடும் பீரங்கியோடும்

நவீன ஆயுதத்தோடும்

கொலைவெறித் தாண்டவமாடிய

உங்களின் நிலை

இன்று என்னாச்சு?

எங்களைத் தொலைத்த

நேசிப்புக்கு உரியவர்கள்

இன்றும் எங்களைத்

தேடிக் கொண்டிருக்கிறார்கள்

பாசிசம் முதலில்

முற்போக்காளர்களை அழிக்கும்

கடைசியில் தன்னைத்தானே

அது அழித்துவிடும்…

எவ்வளவோ உதாரணங்கள்

இருந்தும் ஏற்கமறுத்தீரே

மற்றவர் கருத்துக்கு

தலையசைக்க மறந்தீரே

உயர்த்தித் தூக்கிப்பிடித்த

உங்கள் தலைவன் மரணத்ததையே

வெளியில் சொல்லமுடியாத

நீங்களெல்லாம் போராளிகளா ?

ஈழத்தாயின் மடியில்

நித்திரை கொள்ளும்

மாண்டுபோன நாங்கள்

மீண்டும் வருவோம்

பாசிசத்தின் வேர்கள்

அனைத்தும் அறுபடும்வரை

எங்களை நினைவேந்துவோர்

இருக்கும் வரை

கந்தன் கருணையில்

மாண்டுபோன நாங்கள்

மீண்டும் வருவோம்

இந்திய கடலோர காவல்படையிடம் சிக்கிய இலங்கையர்

நாகை மாவட்டம் கோடியக்கரை படகுத் துறை முகத்தில் இருந்து 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பலில் சென்று கடலோரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த  காரைக்காலைச் சேர்ந்த இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் நேற்று (29) கண்ணாடி இழை படகு ஒன்றை சோதனை செய்தனர்.

‘பெரியண்ணா’வின் பெரியமனம்

மனம் கலங்கி உதவிக்கரம் நீட்டும் ‘பெரியண்ணா’வின் பெரியமனம்

எதற்கும் தட்டுப்பாடு என்றொரு நிலைமை​யே, நாட்டில் நிலவுகின்றது. ஒரு பக்கத்தில் விலையேற்றம்; மறுபுறத்தில் தட்டுப்பாடு. இடையில் சிக்குண்டிருக்கும் மக்கள், விழிபிதுங்கி நிற்கின்றனர். அந்தளவுக்கு ‘பஞ்சம்’ ஒவ்வொருவரது கழுத்தையும் நெருக்கிக்கொண்டிருக்கின்றது.

பாரிய போராட்டத்துக்கு தயாராகும் எதிர்க்கட்சி

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளுக்கு எதிராக தேர்தல் தொகுதிகளை மையப்படுத்தி 150 போராட்டங்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.