கடந்த காலங்களில் இலங்கையில் தடை செய்யப்பட்ட 06 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் 316 தனிநபர்களுக்கு எதிரான தடையையும் இலங்கை நீக்கியுள்ளது.
Month: August 2022
பலுசிஸ்தானில் தலைவிரித்தாடும் மனிதாபிமான நெருக்கடி
பலுசிஸ்தான் கடந்த இரண்டு தசாப்தங்களாக மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை சந்தித்து வருகிறது. துஷ்பிரயோகங்களின் முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் ஸ்தாபனம், பூஜ்ஜிய பொறுப்புணர்வை எதிர்கொள்கிறது என உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச மன்றம் (IFFRAS) தெரிவித்துள்ளது.
கொலம்பியா
(Love in the time of Cholera)
சர்வதேச மிருகவைத்திய மகாநாடு கொலம்பியாவில் உள்ள கட்டகேனாவில் நடப்பதாக இரண்டு வருடத்திற்கு, முன்பு அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் விரும்பிப் படித்த நாவல் லவ் இன் த ரைம் ஒவ் கொலரா(Love in the time of Cholera). அதை எழுதிய கபிரியல் மார்குவஸ் (Gabriel Garcia Marques) வாழ்ந்த இடம் மட்டுமல்ல அந்தக் கதை நிகழ்ந்த இடமும் கட்டகேனா.
பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்
பாகிஸ்தான் எச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறது
அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலால் ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா தலைவர் அய்மன்-அல் ஜவாஹிரி கொல்லப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் எச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறது. அந்த கொலைக்குப் பிறகு தொடர்புடைய சர்வதேச சட்டங்கள் குறித்து இஸ்லாமாபாத்தின் குறிப்பு தெரிவிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வருமா?
கோட்டாபய குறித்து தாய்லாந்து பிரதமர் அதிரடி அறிவிப்பு
இலங்கையின் முன்னாள் ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார். வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடும் வரையிலும் தாய்லாந்தில் அவர் தற்காலிகமாக தங்கியிருப்பார் என்றும் தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணியின் பெயர் அடுத்த வாரம்
10 சுயாதீன கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்படவுள்ள கூட்டணியின் பெயரை எதிர்வரும் 21ஆம் திகதி வெளியிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த 10 கட்சி உறுப்பினர்களுடன் நேற்று இரவு நடைபெற்ற கலந்தரையாலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து பறக்கிறார் கோட்டாபய
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைக்கு திரும்பாமல், சிங்கபூரில் இருந்து தாய்லாந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது என ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் வெளியேறத் தீர்மானம்
காலி முகத்திடல் போராட்டக்களத்திலிருந்து ஒன்றிணைந்த குழுவாக வெளியேற தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் போராட்டக்களத்திலிருந்து வெளியேறுவதால் போராட்டம் முடிந்து விட்டதென அர்த்தம் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், பிரதேச மற்றும் நகரங்களை அடிப்படையாக கொண்டு, போராட்டத்தை வலுவாக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.