ஜனாதிபதி- பிரதமருக்கிடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கடையில், நேற்று (29) இரவு நீண்ட நேர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு என்ற அடிப்படையில் எவ்வாறு எதிர்நோக்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பின்னர் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை தொடர்ந்து ஆட்சி செய்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது. குறித்த கலந்துரையாடல் சுமார் 4 மணிநேரம் இடம்பெற்றதாகவும், இரவு 11.30 மணியளவில் இது நிறைவுப்பெற்றதாவும் தெரிவிக்கப்படுகிறது.

‘புலிகளின் முக்கிய தளபதிகள் உயிரிழக்க ஸ்ரீதரனே காரணம்’ -EPDP எம்.ரெமிடியஸ்

“தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம்.ரெமிடியஸ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

(“‘புலிகளின் முக்கிய தளபதிகள் உயிரிழக்க ஸ்ரீதரனே காரணம்’ -EPDP எம்.ரெமிடியஸ்” தொடர்ந்து வாசிக்க…)

‘கூட்டமைப்பு குற்றச்சாட்டுகளிலிருந்து எம்மை விடுவித்துள்ளது’ – EPDP

“ஈ.பி.டி.பி கட்சி ஒட்டுக்குழு என்றும், தமிழ் உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள் என்றும் எம்மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வீண்பழி சுமத்தி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க எங்களின் ஆதரவை பெற்றுள்ள நிலையில் அப் பொய் குற்றச்சாட்டுக்களில் இருந்து எங்களை விடுவித்துள்ளது” என ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களான மு.ரெமிடியஸ், வி.குபேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

(“‘கூட்டமைப்பு குற்றச்சாட்டுகளிலிருந்து எம்மை விடுவித்துள்ளது’ – EPDP” தொடர்ந்து வாசிக்க…)

பிணங்களுடன் கிடந்து மீண்டேன்

1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை”

இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய இரவு 1987 மார்ச் 30ம் திகதிய யாழ்ப்பாணத்து இரவு அப்படி இருக்கவில்லை. அது ஒரு கோர இரவு அது படு கோரமாகத் தமக்கு அமையப் போகின்றது என்பதை உணராமல், நாளாந்தம் கடந்து போகும் சாதாரண இரவு போலக்கருதி மறுநாளைத் தரிசிக்கத் துயில்வதற்காகத் தமது இரவு உணவைப் புசித்து கொண்டிருந்தார்கள்… அவர்கள் புலிகள் இயக்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள்.

(“பிணங்களுடன் கிடந்து மீண்டேன்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் கதிர்

எனது பாலிய நண்பனும் தோழனும் ஆகிய கதிர்(கணேசரத்தினம் கதிர்காமநாதன்)தமிழ் பாசிசவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டு இன்று 30 வருடங்கள் கடந்துவிட்டன.இவன் பூனகரி,நல்லூர் பிரதேசத்தை பிறப்பிடமாகவும்.ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவனும் ஆவான்.ஈழதேச விடுதலைபோராட்டத்திற்கு ஈ பீ ஆர் எல் எவ் இயக்கத்தை தேர்வு செய்து அதன் இராணுவ பிரிவான மக்கள் விடுதலை படையில் இந்திய உத்தர பிரதேசபயிற்சியை முடித்துக்கொண்டு கிளி/ முல்லை பிராந்திய பொறுப்பான தளபதியாக செயற்பட்டதுடன்.

(“தோழர் கதிர்” தொடர்ந்து வாசிக்க…)

காவிரி மேலாண்மை வாரியம்; கெடு முடிந்தது: ஊடகங்களைத் தவிர்க்கும் பாஜக நிர்வாகிகள்

தமிழகத்தில் காவிரி விவகாரம் பெரிதாகி வரும் நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி வாரியம் அமைக்கும் இறுதி நாளான இன்று பாஜக நிர்வாகிகள் ஊடகங்களில் பதில் அளிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் காவிரி பிரச்சினை முக்கிய பிரச்சினையாக மாறி வருகிறது. காவிரிக்கான நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது, அதற்கு 6 வார கால அவகாசமும் வழங்கியது.

(“காவிரி மேலாண்மை வாரியம்; கெடு முடிந்தது: ஊடகங்களைத் தவிர்க்கும் பாஜக நிர்வாகிகள்” தொடர்ந்து வாசிக்க…)

வெனிசுவேலா தீ விபத்தில் 68 பேர் பலி

வெனிசுவேலாவில், சிறைச்சாலை ஒன்றிலிருந்து தப்பித்துச் செல்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின் போது ஏற்பட்ட தீ, தொடர்ந்தும் பரவியதன் காரணமாக, குறைந்தது 68 பேர் பலியாகினர் என, நாட்டின் பிரதம வழக்குத் தொடுநரும் சிறைக்கைதிகளின் உரிமைகளுக்கான அமைப்பொன்றும் தெரிவித்துள்ளனர். கரபொபோ மாநிலத்திலுள்ள பொலிஸ் தடுப்பு முகாமொன்றிலேயே, இச்சம்பவம் நேற்று முன்தினம் (29) இடம்பெற்றது.

(“வெனிசுவேலா தீ விபத்தில் 68 பேர் பலி” தொடர்ந்து வாசிக்க…)

துரோகி என்ற வாயால் தோழா எனப் பாடுக…!

(சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சிவப்பரம் பொருளுக்கும் நடந்த சம்பாசணைபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி (ஈபிடிபி) க்குமிடையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் சம்பாசணை நடந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்தோம். அந்தக் கற்பனையை நீங்களும் படித்தறிக)

(“துரோகி என்ற வாயால் தோழா எனப் பாடுக…!” தொடர்ந்து வாசிக்க…)

பன்முகப்படுத்தப்பட்ட தலமையை உருவாக்குவதற்கான ஆரம்ப புள்ளியாக இருந்திருக்கும்

ஆட்சி அமைப்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் எழுதப்படாத உடன்படிக்கையில் செயற்பட்டு வருகின்றன. இந்தப் புதிய சூழலைப்பற்றி பல்வேறு வகையான அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதிகமும் பதற்ற நிலையிலான அபிப்பிராயங்களாகவே உள்ளன.

(“பன்முகப்படுத்தப்பட்ட தலமையை உருவாக்குவதற்கான ஆரம்ப புள்ளியாக இருந்திருக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் தேவானந்தா- பிரம்ம ரிஜி

கௌசிகன் என்ற மன்னன் தான் ஆண்ட நாட்டு மக்களின் நன்மைக்காக முடி துறந்து முனிவராக மாற யாகம் செய்தான்.ஒரு சத்திரியன் முனிவராவதை முனிவர் வசிட்டர் விரும்பவில்லை.ஆனாலும் கௌசிகன் தவமிருந்து சிவனின் அருளால் பிரம்ம ரிஜி பட்டம் வாங்கி விசுவாமித்திர முனிவர் என்ற பெயர் பெறுகிறார்.

(“டக்ளஸ் தேவானந்தா- பிரம்ம ரிஜி” தொடர்ந்து வாசிக்க…)