கழுத்தை நெரிக்கும் சீனா

கம்ப இராமாயணத்தில், இறுதிப் போரின் போது நிராயுதபாணியாக நின்ற இராவணனை “இன்றுபோய் நாளை வா“ என்று இராமன் கூறியபோது, இராவணன் கலங்கியதை“கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்“ என்று கம்பரால் உவமிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் அருணாச்சலக் கவிராயருக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. முதலில் இவ்வரியை யார் எழுதியது என்ற ஆராய்வை விட இந்த கடன் பட்ட நிலைமையே இலங்கைக்கும் இன்று ஏற்பட்டுள்ளது. அதிக கடன்களால் கலங்கி நிற்கிறது இலங்கை என்பதே நிதர்சனமாகும்.

வாலாஜா பள்ளிவாசலும் சிந்தி இந்துக்களும்: நல்லிணக்கத்தின் தமிழ்நாட்டு மாதிரி!

சமீபத்தில் நண்பர் ஒருவருடன் திருவல்லிக்கேணியில் இருக்கும் 227 ஆண்டு பழமையான வாலாஜா பள்ளிவாசலுக்கு (பெரிய பள்ளிவாசல்) சென்றேன். நான் சென்னைவாசி கிடையாது. வாலாஜா பள்ளிவாசலைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் இப்போதுதான் முதன்முறையாகச் சென்றேன். அங்கு நோன்பு திறக்கும் நிகழ்வு மிகச் சிறப்பான அனுபவமாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

அறிவுக்களவு செய்யும் யாழ்பல்கலை பேராசிரியர்கள்: முன்நாள் விரிவுரையாளர் பகிரங்க குற்றச்சாட்டு!!

யாழ் பலக்லைக்கழக கல்விசார் ஊழியர்களின் (Academic Staff) கல்விசார் மற்றும் அறிவுசார் மோசடிகளை (Academic and Intellectual Frauds) மேற்கொண்டுவருவதான பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார் யாழ் பல்கலையின் முன்நாள் விரிவுரையாளரான கலாநிதி முத்துகிருஷ்ணா சர்வானந்தன் யாழ் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சில விரிவுரையாளர்கள், பிற கல்விமான்களின் கல்விசார் வெளியீடுகளை அல்லது கருத்துக்கள் மற்றும் உள்ளடக்கங்களை திருடி, பிரதிபண்ணி தமது பெயரில் பிரசுரிப்பது…..

ஜே.வி.பிக்கு இடம் கொடுத்ததே வந்த தவறு!

(மணியம்)

இன்று இலங்கையில் நடைபெறும் வன்முறை செயற்பாடுகளின் பின்னணியில் ஜே.வி.பி. என்ற சிங்கள இனவாத குட்டி முதலாளித்துவ கட்சி இருப்பது அரசியலை விளங்கிக் கொண்ட எல்லோருக்கும் தெரியும். இவர்கள் ஒருபோதும் திருந்தப் போவதில்லை என்பதும் எமது பட்டறிவு.
1970 இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான முற்போக்கு அரசாங்கத்தைக் கவிழ்க்க ஒருசில மாதங்களிலேயே 1971 இல் ஆயுதக் கிளர்ச்சி செய்து சுமார் 7,000 சிங்கள் இளைஞர்களைக் காவு கொடுத்து, அரசால் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் 1977 இல் பதவிக்கு வந்த ‘அமெரிக்க யங்கி டிக்கி’ என அழைக்கப்படும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் விடுதலை பெற்று புத்துயிர் பெற்றனர்.

மிரட்டலுக்கு அஞ்சி பதவி விலகத் தேவையில்லை!

(மணியம்)
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியையும் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட முழு அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் எதிர்க்கட்சிகளும், சில ‘தனியார்’ குழுக்களும் தலைநகர் கொழும்பிலுள்ள காலிமுகத் திடலின் ஒரு பகுதியிலும், நாட்டின் சில பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தீர்மானம்

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவை வழங்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு சிங்கள மக்களுக்கும் அழைப்பு

நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாக இருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களும் கலந்துகொள்ள வேண்டுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

1,000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மாபெரும் வேலைநிறுத்த போராட்டம்

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் தமது பதவிகளை இராஜினாமா செய்ய விரும்பாததற்கு எதிராக 1,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் நாளை (28) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

நாட்டின் பொறுப்பை ஏற்க தயாராகி வரும் ஐ.ம.சக்தி

மக்கள் ஆணையின் ஊடாக நாட்டின் பொறுப்பை ஏற்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமைக்கு உடனடி தீர்வைக் கோரி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி  ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் எதிர்ப்புப் பேரணி இன்று கலிகமுவவை வந்தடைந்தது.