The Tamils and India’s foreign policy games

An interview with Varatharajah Perumal

Talking of the international dimension, back in the 1980s, the reason why India started supporting the Tamil militants was because India didn’t like Sri Lanka’s foreign policy under the J.R.Jayewardene government. Had Mrs Sirima Bandaranaike been in power at that time, the Tamil militatnts would not have got any help from India. Today once again, the Indians are interfering in the internal affairs of Sri Lanka in order to impose their foreign policy on Sri Lanka. The excuse they use for this is the Northern Tamil community. For example, when Narendra Modi came to the Sri Lankan parliament and talked about going beyond the 13th Amendment, he was doing so on behalf of the Northern Tamils. There is a huge Indian Tamil population in Sri Lanka and Modi does not give a twit about them because they can’t be used in India’s foreign policy games.

(“The Tamils and India’s foreign policy games” தொடர்ந்து வாசிக்க…)

ஹட்டனில் ஈரோஸின் மே தினக் கூட்டம்

“உலக பாட்டாளிகளே உரிமை மீட்புக்காக ஒன்றுபடுங்கள்” எனும் தொனிப் பொருளில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மே தினக் கூட்டம் ஹட்டன் – டிக்கோயா புவியாவத்தை நகரில் மே 1ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு காலை 9.00 மணிக்கு கட்சியின் மலையகப் பொறுப்பாளர் தோழர் இரா. ஜீவன் இராஜேந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

(“ஹட்டனில் ஈரோஸின் மே தினக் கூட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்ஸ்: பழையன கழிதல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

காலங்கள் மாறும்போது காட்சிகளும் மாறும். அரசியலும் அதற்கு விலக்கல்ல. ஆனால் அரசியலில் மாற்றங்கள் அவ்வளவு இலகுவாக நிகழ்வதில்லை. அவ்வாறான மாற்றங்கள் நீண்டகால நிகழ்வுகளின் படிநிலையின் விளைவால் நிகழ்வன. இருந்தபோதும் அரிதான அரசியல் மாற்றங்கள் அதிசயம் போல் நோக்கப்படுகின்றன. அம்மாற்றங்களின் முக்கியத்துவம் அக்காலச் சூழலின் அடிப்படையில் நோக்கப்படல் வேண்டும். அப்போதே நிகழ்ந்தது பழையன கழிதலா அல்லது புதியது புகுதலா எனப் புரியும். பழையன கழிதலால் புதியது புகும் என உறுதியாகச் சொல்ல முடியாது. அதேபோல புதியன புகுதலுக்கும் பழையன கழிய வேண்டிய தேவையும் இல்லை. இரண்டும் ஒன்றையொன்று சாராது தனித்தனியாக நிகழவியலும். மாற்றங்கள் ஒருபடித்தானவையோ வரன்முறையான செயன்முறையைக் கொண்டவையோ அல்ல. இதனால் எதிர்வுகூறல் கடினம். அரசியலின் சுவாரசியமே அதன் எதிர்வுகூறவியலாமையே.

(“பிரான்ஸ்: பழையன கழிதல்” தொடர்ந்து வாசிக்க…)

தொழிலாளர் தின நிகழ்வு

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வு திருகோணமலையில் நடக்கயிருப்பதால் தொழிலாளர்கள், தோழர்கள் மற்றும் நண்பர்கள் இவ் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “காணாமல் ஆக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும்” என, தெரிவித்து உறவினர்களால் குறித்த போராட்டம் கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் 67ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது. 67 நாட்கள் ஆகியும் அரசாங்கம் தீர்வு எதனையும் வழங்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

(“ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

வில்பத்து பிரச்சினையில் மூன்று நற்செய்திகள். இன்னுமொரு நல்ல செய்தியும் இன்று வருகிறது!

வில்பத்து காணி சுவீகரிப்புக்கெதிரான மக்களின் போராட்டம் இன்று 32 வது நாளாக மறிச்சுக்கட்டியில் நடைபெற்று வருகிறது. தமது மண் தமக்கு வேண்டுமென்று அரசை வலியுறுத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் இரவு பகல் பாராமல் அங்கு நடைபெறுகின்ற போராட்டத்திற்கு நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த மக்கள் தமது ஆதரவைத்த தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று போராட்ட களத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் இணைப்புச் செயலாளரும் முசலி மண்ணைச் சேர்ந்தவருமான அலிகான் ஷரீப் உரையாற்றினார். அவர் தனது உரையில்,

(“வில்பத்து பிரச்சினையில் மூன்று நற்செய்திகள். இன்னுமொரு நல்ல செய்தியும் இன்று வருகிறது!” தொடர்ந்து வாசிக்க…)

முருகநேசன் என்னும் விரிவுரையாளன்

குடும்பத்தில் நிலவிய பயங்கர வறுமையில் அவரது தாயார் புல்லுக்கடகம் சுமந்து அதை விற்று தன் பிள்ளைகளை படிக்கவைத்தார் ,மூத்தவரான தோழர் முருகநேசன் படிப்பை முடித்து வேலையில் தன்னைப் பொருத்திக்கொண்டிருக்கும்போதில் தமது வறுமை ஓரளவு தணிந்தும் ஏனைய சகோதரர்கள் மேலும் படித்து முன்னேறிவிடலாம் என அவர்கள் குடும்பம் நம்பிக்கைகொண்டிருந்தது .தனது குடும்ப வறுமையையும் சூழலையும் விலத்தி விடுதலைப்போராட்டத்தில் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் .காந்தி என்றழைக்கப்பட்ட புலிகளின் சித்திரவதைகளினதும் சிறைச்சாலைகளினதும் பொறுப்பாளன் ஓர் உண்மையான காந்தீய வாழ்வில் வாழ்ந்த முருகநேசனை சிறையில் சித்திரவதை செய்து கொன்றான் .தன்னைச் சித்திரவதை செய்தவர்களுக்கு அவர் சிறையில் அரசியல் மற்றும் சமூக விஞ்ஞானத்தின் அடிப்படைகளை விளக்கமுயன்று தோற்று காந்தியால் கதிரையால் அடித்துக்கொல்லப்பட்டார்.சித்திரவதை செய்த காந்தி இறுதி யுத்தத்தில் அரச படைகளிடம் சரணடைந்து இன்னமும் புனர்வாழ்வு முகாமில் உள்ளான்.

(“முருகநேசன் என்னும் விரிவுரையாளன்” தொடர்ந்து வாசிக்க…)

வட கொரியா யுத்தத்திற்கு அறை கூவல் விடவில்லை

வ‌ட‌ கொரிய‌ ம‌க்க‌ள் எப்போதும் போருக்கு எதிராக‌த் தான் குர‌ல் கொடுத்து வ‌ருகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள‌து அர‌சு போர்வெறி கொண்டு அலைய‌வில்லை. அதைச் செய்வ‌து அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌ம். அது அந்த‌ ம‌க்க‌ளுக்கு ந‌ன்றாக‌த் தெரியும். நாளைக்கு அமெரிக்க‌ இராணுவ‌ம் ப‌டையெடுத்தால் அந்த‌ ம‌க்க‌ளை கையைக் க‌ட்டி வேடிக்கை பார்க்க‌ சொல்கிறீர்க‌ளா? அமெரிக்க‌ குண்டு வீச்சில் அப்பாவி ம‌க்க‌ள் பலியாக‌ மாட்டார்க‌ளா? த‌ங்க‌ள் நாட்டை ஆக்கிர‌மிக்க‌ வ‌ரும் அந்நிய‌ இராணுவ‌த்தை எதிர்த்து போரிடுவ‌து த‌ப்பா?

(“வட கொரியா யுத்தத்திற்கு அறை கூவல் விடவில்லை” தொடர்ந்து வாசிக்க…)

‘மோடிக்கு நேரமில்லை’

ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கைக்கு வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர ​மோடி, ஒப்பந்தம் எதிலும் கைச்சாத்திட மாட்டார். அதற்கு அவருக்கு நேரமும் இல்லை” என, அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்றபோது, அவர் இதனைக் கூறினார்.

(“‘மோடிக்கு நேரமில்லை’” தொடர்ந்து வாசிக்க…)

முப்படைகளின் உயர்பொறுப்பை ஏற்க பொன்சேகாவுக்கு அழைப்பு

நாட்டின் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படைகளில் அதியுட்ச பொறுப்பை ஏற்பதற்கு முன்னாள் இராணுவ தளபதியும் பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதற்கான அதிகாரங்களுடன் உரிய பதவியை வழங்கினால் தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு சரத் பொன்சேகா சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றபோது, அவர் இதனைக் கூறினார்.