மண்ணையும் கடலையும் காற்றையும் மரணிக்கச் செய்து மனிதர்கள் மட்டும் வாழமுடியுமா?

(சுகு-ஸ்ரீதரன்)

2015 உலக- பிரபஞ்ச அளவிலான அதிர்வுகள். sri-t
மேற்கு ஆபிரிக்காவில உயிர் கொல்லி எபோலா,
நேபாளத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த பூகம்பங்கள்.
சென்னை -கடலூரில் பிரளயமான வெள்ளம்.

சமூக இயக்கம் என்னும் போது கிரேக்கத்தை அடுத்து போர்த்துக்கல்லில் ,ஸ்பெயினில் நிகழ்ந்த சாதகமான அரசியல் மாற்றங்கள்.

டெல்லி சட்ட சபைத் தேர்தலில் ஆம் ஆத்மி மீளவும் பெற்ற வெற்றி
மியன்மார் தேர்தலில் அங்சாங்சுஜிக்கு கிடைத்த மக்கள் ஆதரவு.
அல்ஹைடாவிற்குப் பின் ஐஎஸ் பயங்கரவாதம் உலகளாவிய அளவில் அகலக்கால் பரப்பியிருப்பது.
பாரிசில் நிகழ்ந்த தாக்குதல்கள் நிலைமையின் பாரதூரத்தன்மையை உணர்த்துகிறது.
கறுப்பின பின்னணியில் வந்த ஒபாமாவிற்கு பின் டென்மார்க்கை ஒத்த சமூக பாதுகாப்பு விடயங்களில் அக்கறை செலுத்தும் பெனி சண்டர்ஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அரங்கில் முக்கியமான ஒரு ஆளாக காணப்படுகிறார்.?
அதேவேளை டொனாட் ரம்ஸ் போன்ற கோடீஸ்வர இனவாத சக்திகளும் தலைதூக்கியிருக்கின்றன.

சோவியத் யூனியன் காலத்திற்குப்பின் புட்டினின் ரஸ்சியா உலகளாவிய அளவில் அமெரிக்காவிற்கு மீண்டும் பங்காளியாகிய காட்சி. வடக்கு தெற்கு பொருளாதார ஏற்றத்தாழ்வு மிக ஆழமடைந்துள்ளது ஆபிரிக்க கண்டம் மற்றும் தென்னாசியாவின் வறுமை மற்றும் மத்திய கிழக்கில் மேற்கும் வட அமெரிக்காவும் ஏற்படுத்திய விபரீதங்களின் நாசகார விளைவு ஐ.எஸ். மத்திய கிழக்கில் ஒப்பீட்;டளவில் முற்போக்கான அரசுகளாகவே கடாபியின் லிபியாவும் சதாமின் ஈராக்கும் காணப்பட்டன.

இப்போது அவை அழிக்கப்பட்டு நாசகார ஐஎஸ் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலக யுத்ததின் பின்னர் மத்தியதரைக்கடல் தாண்டி லட்சக்கணக்கான அகதிகள் ஐரோப்பாவினுள் பிரவேசித்துக் கொண்டிருக்கிறார்கள். அஞ்சலா மெக்கல் கணிசமான அகதிமக்களை ஏற்றுக் கொண்டுள்ளார். பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல்களின் பின் அதி தீவிர வலதுசாரி சக்திகள் ஐரோப்பாவினுள் தலையெடுத்துள்ளன. அகதிகளின் வருகைக்கு அவை தீவிர எதிர்ப்பை காட்டுகின்றன.

ஐக்கிய அமெரிக்காவில் பாடசாலைகளில் நிகழும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள். நைஜீரியாவில் போஹோகரத்தின் பேயாட்டம் பாலஸ்தீனத்தில்மீண்டும் இண்டிபடாவின் எழுச்சி பிறேசிலில் டில்மாவின் வீழ்ச்சி . வலது சாரி சக்திகளின் வெற்றி உலகைக்காப்பாற்றும் இறுதிச் சந்தர்ப்பமாக பேசப்பட்ட உலகின் வெப்பநிலையை 1.5 டிகிரி சி குறைப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டது பெரும் சாதனையாக பேசப்படுகிறது. சீனாவில் சூழல் மாசடைதல் காற்று சுவாசம் விற்பனைப் பொருளாகி இருப்பது

ஒரு குழந்தைதான் பெறலாம் என்ற நிலையில் ஏற்பட்ட மாற்றம்
நேபாளத்தில் நிகழ்ந்த யாப்புச் சீர் திருத்தம்.
மாதேசி மக்கள் தாம் ஓரம் கட்டப்பட்டதாக உணரும் நிலை
இலங்கையில் ஜனவரி 8 இல் நிகழ்ந்த ஜனநாயக மறுமலர்ச்சி
அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கான பாதை திறக்கப்பட்டிருப்பது.

பாரதிக்குப்பின்னான அழுத்தமான மக்கள் இலக்கியவாதி ஜெயகாந்தன் மறைவு மனோராமா ஆச்சி எம்எஸ்வி மறைவு அறிவியல் தேடலின் இளம் இந்தியாவின் கனவான மனிதர் அப்துல்கலாமின் மறைவு நவதாராளவாத உலகம்- விரல் விட்டு எண்ணக்கூடிய தொகையினர் கோடான கோடி மக்களின் வளங்களை அபகரித்துவைத்திருக்கும் உலக ஒழுங்கு. வளங்கள் சரியாகப் பகிரப்படவேண்டும் சூழல் பாதுகாக்கப்படவேண்டும். ஆயுத உற்பத்தி முடக்கப்படவேண்டும் என்ற எண்ணம் பரவலாக வலுவடைந்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதமும் தலிபானின் தலையெடுப்பும் சிரியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பேரழிவும் வல்லரசுகளுகிடையிலான வளங்களைப் பங்கு போடுவதற்கான கெடுபிடி யுத்தமும்.

தென் சீனக் கடல் மீதன செல்வாக்கு மற்றும் சீனாவின் பட்டுப்பாதைப்பிரச்சனைகள் தென்சீனகடலில் அமெரிக்க விமான ஊடுருவல் சீனாவின் சீற்றம். ரஸ்சிய போர்விமானம் துருக்கி எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டது. சினாய் பாலைவனத்தில் ரஸ்சிய பயணிகள் விமானம் சுட்டு வீழத்தப்பட்டது வறட்சி வெள்ளம் துருவங்களில் பனி உருகல் உலகளாவிய அளவில் உணவு குடிநீர் பிரச்னைகள் பெரும் சவால்களாக உரு வெடுத்துள்ளன ஜனநாயக மயப்படுத்துதல் மனித உரிமைகள் வளங்களைப் பகிர்தல் பெண்களின் உரிமைகள் சுற்றாடல் சவால்கள் தொடர்பாக அதிக தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.மானிடம் ஒருமித்து செயற்படவேண்டியிருகிறது.

பூமியை ஒத்தது போல் பரீட்சார்த்த கிரகங்கள் பலநூற்றுக்கணக்கில் கண்டு பிடிக்கபட்டிருக்கின்றன. புளூட்டோ கிரகம் தொடர்பாக இதுவரை இருந்த கருதுகோள்கள் மாற்றம் அடைந்திருக்கின்றன. மூலத்துகள் இருக்கிறதா அடி முடியற்ற பிரபஞ்சமா என்ற விஞ்ஞான விவாதங்கள் தொடர்கின்றன. ஐன்ஸ்ரீனின் சார்பியல் ஒளியின் வேகம் தொடர்பான கருத்துகள் சரியா என்ற கேள்வி எழுந்தது. அது சரியே என்றவாறே செல்கிறது.

புதிய ஜீவராசிகள் வாழும் கிரகங்களின் கண்டு பிடிப்பு அண்மையில் சாத்தியமே என்பதுபோல் விண்வெளி தொலைநோக்கி தொழில் நுட்பங்கள் உன்னத வளர்ச்சி பெற்றுள்ளன. ஆயுத உற்பத்தி –யுத்தம் விண்வெளி ஆய்வு ,மறுபுறம் உணவு சுகாதாரம் கல்வி இருப்பிடம் இவற்றுக்கு எவ்வளவு செலவழிக்கப்படுகிறது சில மனிதர்களுக்கும் பெருவாரியான மக்களுக்கும் இடையேயான பொருளாதார இடைவெளி இயற்கையும் மனிதவாழ்வும் சமநிலையில் இல்லை பாரதூரமான ஏற்றத்தாழ்வும் தள்ளாட்டமும் காணப்படுகிறது. அறம்சார் மற்றும் நாசகார விழைவுகள் இவற்றுக்கிடையில் நூலிழையில் நம் பொது முடிவுக்கு வர ஏதாவது இருக்கிறதா? தேடவேண்டும்.

இந்தியா ,இலங்கை, நேபாளம் ,வங்கதேசம் ,பாகிஸ்தான் ,பூட்டான் ,மாலைதீவு- சார்க் மற்றும் ஆப்கானிஸ்தான் என்ற சம்பிருதாய எல்லைகளுக்கப்பால் நாம் ஜனநாயக வழியில் ஒன்றாகச் செயற்படுவதற்கான பொறிமுறைகளை உருவாக்கமுடியாதா? படிம எரிபொருளுக்கு மாற்றான எரிபொருள் உபயோகம் சூரிய ஒளி -காற்றாலை- நனோ தொழில் நுட்பம் என்பன முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. நச்சு இராசயனங்களுக்கு பதிலாக சேதன உரங்கள் பற்றிய கருத்துக்கள் செயல்முறைகள் பலம் பெற்று வருகின்றன. டீஎன்ஏ தொழில் நுட்பம் பிரமிக்கத் தக்க அளவான மாற்றங்களை நிகழத்தியுள்ளது. அது வைத்திய- உயிரியல் துறையில் மாத்திரமல்ல.தொல் உயிரியல் பொருளாதார பண்பாட்டு துறைகளிலும் மாபெரும் மாற்றங்களை நிகழ்த்தலாம். விண்வெளி ஆய்வில் அண்மைய ஆண்டுகளாக கண்டு பிடிக்கப்பட்ட கரும் பொருட்கள் மற்றும் பிரகாசமான ஒளிரும் பொருட்களும் ஆற்றல் வளங்களை உருவாக்கும் பொறிமுறைகளை அறிந்து கொள்வதற்கான ஒரு மாபெரும் பாய்ச்சலாக அமையலாம்.

துருவங்கள் உருகுவது காந்த இயல்பு குறைவது பற்றியெல்லாம் புதிய ஆய்வுகள் எச்சரிக்கை செய்கின்றன. ஓன்றையொன்று போசித்து வாழ்தல் ,அனுசரித்து வாழ்தல் ,பொறுப்புணர்வை வெளிப்படுத்துதல் இன்று உலகின் தவிர்க்கமுடியாத விதியாக வேண்டியிருக்கிறது. உலகின் நாடுகளின் எல்லைகள் -இறையாண்மைகள் என்ற பெயரில் நிகழும் சர்வாதிகாரங்கள் நவதாராளவாத ஆக்கிரமிப்புக்கள் எல்லாமே அர்;த்தம் இழந்து சம நிலையடைந்தே ஆகவேண்டும். அமெரிக்கா கியூபாவிற்கு இடையிலான மீள் உறவு போல் . இத்தகைய ஒரு நிகழ்வு இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் – அரபுக்களிடையில் நிகழவேண்டியிருக்கிறது. மத்திய கிழக்கின் அமைதி பிரதானமாக உலக அமைதியின் உந்துசக்தியாக இருக்கும். இயற்கை பிரளயங்கள் அன்றாடம் என்று ஆகிவிட்ட பிறகு உலகின் கோடான கோடி மக்களுக்கான உணவு இருப்பிடம் பற்றிய அக்கறைகள் முன்னெப்போதையும் விட முதன்மை பெறுகின்றன. உலகத்தின் வளங்கள் பேணப்படுவதும் சமத்துவமாக பங்கிடப்படுவதும் தவிர்க்க முடியாத விதியாகிறது. நவதாராளவாத உலகம் காலாவதியாகவேண்யகாலம் வந்த விட்டது மனிதர்கள் தமக்கிடையேயும் இயற்கையுடனும் அனுசரித்த வாழ்ந்தேயாக வேண்டும்.

சுகு-ஸ்ரீதரன்