மறக்கமுடியுமா?

எத்தனை வருடம்? எத்தனை மரணங்கள்? ஒரு அழகான தேசத்தின் அமைதியைக் கெடுத்த கொடியவர்கள். மறக்கமுடியுமா? திருநெல்வேலி சந்தியில் தொடங்கிய வெறியாட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது. முடிக்கப்பட்டது. முப்பது வருடங்களாக எவராலும் எங்கேயும் நிம்மதியாக உறங்கவிடாமல் கெடுத்தவர்களை எப்படி மறப்பது? நாங்கள் மரணிக்கும்வரை அவர்களின் பயங்கர வெறியாட்டங்கள் மறக்கமுடியாது.

ஒன்றா இரண்டா? எத்தனை மரணங்கள். சுந்தரம், ஒபரோய் தேவன், ரெலி ஜெகன், அமீன் , றேகன் எனத் தொடங்கி ரெலோ அமைப்பின் உறுப்பினர்களையே வீதிகளில் சுடலைகளில் எரியும் நெருப்பிலே உயிரோடு தூக்கி எறிந்து வேடிக்கை பார்த்த கொலைகார கூட்டம் புலிகள்.அவர்களை மறக்கமுடியுமா?

அண்ணனை கொண்டு தம்பியை,தம்பியைக் கொண்டு அண்ணனை,கொலை செய்ய வைத்த மிருகக்கூட்டம் புலிகள். தாய் முன்னால் பிள்ளையை கொலை செய்து வீரம் காட்டிய கோழைகள் புலிகள். இவர்களை மறக்கமுடியுமா?

அப்பாவிமனிதர்கள்,பிஞ்சுக்குழந்தைகளை துப்பாக்கியால் கொன்ற கொலைகாரக் கூட்டம் புலிகள். எப்படி மறப்பது? கென் பாம், டொலர் பாம், அனுராதபுரம் என எத்தனை ஏதுமறியாத அப்பாவிகளை காரணமின்றி வேட்டையாடிய புலிகளை மறப்போமா?

மாடிவீட்டுக்குள்ளே பொதுமக்களை அடைத்து வைத்து அந்த வீட்டையே குண்டு வைத்து தகர்த்த கந்தன் கருணை படுகொலை வெலிக்கடையை மிஞ்சியது. இந்த கொலைகார கூட்டத்தை எப்படி மறப்பது?

அறுபதுக்கும் அதிகமான பிஞ்சுக்குழந்தைகள் உட்பட நாற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்களை தொழுகையின்போது சுட்டுக்கொன்ற கொலைகார புலிகளை மறப்போமா?

மதம் வேறு என்ற ஒரே காரணத்துக்காக ஒரே இரவில் ஒரு சமூகத்தை பிறந்து வளர்ந்த இடத்தைவிட்டு விரட்டியடித்த கொள்ளைக்கும்பல் புலிகள்.அவர்களை மறப்போமா?

மக்களை பலிக்கடாக்களாக்கி தங்களை காத்த கோழைகள்.அடுத்தவன் உழைப்பில் வாங்கிய சொகுசு வாகனங்களில் வீதிவலம் வந்த கொள்ளைக் கார கூட்டம். வசதியான வீடுகளை அபகரித்து சொந்தம் கொண்டாடிய அஅராஜகத்தின் கூட்டம். எப்படி மறப்பது?

புதைக்கப்பட்ட பிணங்களையே தோண்டி எடுத்து வன்மம் தீர்த்த மிருக கூட்டம். இத்தனை கொடுமைகள் செய்த ஒரு கூட்டத்தை மறப்பதென்பது இலகுவான விசயம் அல்ல.

நவம்பர் 27 வெறிபிடித்த மிருகங்களின் கொலைகள் அராஜகங்கள் நினைவுக்கு வரும் நாள். இலங்கை வரலாற்றில் கொலைகாரருக்கு உரிய நாள். கொலைகாரர் தினம் நவம்பர் 27.

மறக்கமுடியுமா?

(Vijay Baskaran)