இலங்கை: கொரனா செய்திகள்

இந்தியாவின் சேரம் நிறுவனமானது கொவிசீல்ட் தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதன் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 29ஆம் திகதியிலிருந்து இதுவரை 9,24,000 பேருக்கு இந்தியாவின் கொவிட்சீலட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் மாதம் இறுதிக்குள் கொவிசீல்ட் தடுப்பூசியை இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசி முதலில் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள சீனர்களுக்கே முதலில் வழங்கப்படுமென்று பிரதான தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதனை  இலங்கையர்களுக்கு ஏற்றுவதற்கான உரிய வயதினர் குறித்து சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர்கள் குழு தீர்மானித்தன் பின்னரே, சினோபார்ம் தடுப்பூசி இலங்கையர்களுக்கு ஏற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டுக்காக தத்தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களை இலக்கு வைத்து, எழுமாறான பிசிஆர் பரிசோதனையை செய்ய திட்டமிட்டுள்ளதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக பொருளாதார வலயங்களில் கடமையாற்றுவர்கள் குறித்தே இதன்போது அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதென, தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர், சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு வாரங்களில் புத்தாண்டை கொண்டாட பெரம்பாலானவர்கள் கொழும்பிலிருந்து தூர இடங்களுக்குச் செல்வதால், இவர்கள் கொரோனாவுடன் செல்வதற்கு வாய்ப்புள்ளதால், இந்த எழுமாறான பிசிஆர் பரிசோதனை செய்யப்படவுள்ளது என்றார்.

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில், சகல வகுப்புகளையும் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் யாவும் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை சுகாதார பணிப்பாளர் நாயகம் வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில், மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள், சகல வகுப்புகளும் எதிர்வரும் திங்கட்கிழமை 29ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.