ஐ.எஸ்ஸுக்கு எதிரான அமெரிக்காவின் நான்கைந்து கிளர்ச்சியாளர்களே மிச்சம்

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு எதிராக போராட அமெரிக்கா பயி ற்சி அளித்த கிளர்ச்சியாளர்களில் நான்கு அல்லது ஐந்து பேரே களத்தில் போராடி வருவதாகவும் அந்த திட்டம் முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்றும் அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. ஐ.எஸ்ஸுக்கு எதிராக அமெரிக்காவின் யுத்த மூலோபாயத்தின் கீழ் சுமார் 5,000 கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் மற் றும் பயிற்சி வழங்குவதற்கு 500 மில்லியன் டொலர்களை வழங்க கொங்கிரஸ் அவையில் அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் இந்த திட்டதின் கீழ் பயிற்சிபெற்ற 54 பேர் கொண்ட குழுவின் பெரு ம்பாலான கிளர்ச்சியாளர்கள் அல் கொய்தா கிளையான அல் நுஸ்ரா குழுவி டம் சிக்கி இருப்பதாக அமெரிக்க இராணுவ ஜெனரல் லொயிட் ஒஸ்டின் அமெ ரிக்க செனட் அவையில் விளக்கமளித்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்கா பயிற்சியளித்த வீரர்களில் எஞ்சியிருக்கும் எண் ணிக்கை நகைச்சுவையானது என்று குடியரசு கட்சி செனட் உறுப்பினர் கெல்லி அயோட்டே குறிப்பிட்டுள்ளார். “இந்த திட்டம் முழுமையாக தோல்வியடைந்து விட்டதை நாம் கண்டறிந்திருக்கிறோம். அது அப்படி இருக்கக் கூடாது என்று நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் அதுதான் உண்மை” என்று மற்றொரு குடி யரசு கட்சி செனட்டர் ஜெப் செசன் குறிப்பிட்டார்.