தனிப்பட்ட நபர்கள் தலையிட வேண்டாம்: ஜனாதிபதி உத்தரவு

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரால் அனைத்து அமைச்சுகள் மற்றும் செயலகங்களுக்கு 07 ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானவர்கள், கடிதம் அல்லது தொலை பேசி அழைப்பு உள்ளிட்ட எந்தவொரு வழிகளிலும் அரசாங்க செயற்பாடுகள் தொடர்பில் ஆணைகள் வழங்கக்கூடாது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சார்ப்பில் பிரதமரின் செயலாளர், அமைச்சர்களின் செயலாளர் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்கள் மாத்திரமே அவ்வாறான கடிதம் மற்றும் தொலைபேசி அழைப்புகளை விடுக்க முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிப்பதுடன், இவ்வாறான செயற்பாடுகள் முன்னதாக இடம்பெற்றிந்தால் அதனை நிவர்த்திசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.