பிரதமர் ரணில் இன்று இந்தியா பயணம்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இன்று புதுடில்லி புறப்பட்டுச் செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவாரெனத் தெரிய வருகிறது. பிரதமரின் இவ்விஜயத்தின் நிமித்தம் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 16 இந்திய மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான சிநேகபூர்வ நட்புறவை முன்னிலைப்படுத்தும் அடையாளமாக இம்முடிவை அரசாங்கம் எடுத்திருக்கின்றது. தமிழ் நாட்டைச் சேர்ந்த இம்மீனவர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நிலவிவரும் நட்புறவை வலுப்படுத்தி பிராந்திய சமாதானத்தையும் நல் லிணக்கத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வது குறித்து இப்பேச்சுவார்த் தைகளின் போது இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது