UNP – TNA யினரின் தமிழ் மக்கள் விரோத கூட்டு நிராகரிக்கப்படல் வேண்டும்

1. வடக்கு மாகாண அரசை ஊழல் பெருச்சாளிகளை கொண்ட TNA யின் மாபியா கூட்டமொன்றை வைத்து கைப்பற்றி ஐந்து வருடங்கள் எந்த வித அபிவிருத்தி வேலைகளுமின்றி, தங்களுக்கு கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்துக்கொண்டும், சகட்டு மேனிக்கு எழுக தமிழ் நடத்துவதாக பாசாங்கு பண்ணி மக்களை உசுப்பேற்றி ஏமாத்தி காலத்தை கடத்தினார்கள்.

2. சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுபட்டமையும் அது தொடர்பான எந்த ஆக்கபூர்வமான நவடிக்கையும் எடுக்காததுடன் அந்த ஊழலில் ஈடுபட்டவர்களை அம்பலப்படுத்தாமல் மூடிமறைக்கும் நிபுணர் குழு அறிக்கைகளை வெளியிட்டமை.

3. இரணைமடுவிலுருந்து யாழ்ப்பாணத்திற்கு நன் நீர்விநியோகம் மற்றும் அதனுடன் இணைந்த யாழ் மாநகர வடிகால் புனர் நிர்மாணம் போன்ற ஆயிரங்கோடி பெறுமதியான ஆசிய வங்கி திட்டத்தை நிராகரித்து செயலற்றதாக்கியமை.

4. தாண்டிக்குளத்திலா ஓமந்தையிலா பாரிய சந்தை ஒன்றை அமைப்பது என்கின்ற சர்ச்சையை கிளப்பி சந்தையையே இல்லாமல் பண்ணியமை .

5. வடகிழக்கில் கடந்த நாலரை வருடங்களில் எந்த விதமான பாரிய உட்கட்டமைப்பு வேலைகள் எதுவுமே செய்யப்படவில்லை தொடங்கப்படவும் இல்லை.

6. வடகிழக்கில் மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் பாரிய தொழில் சாலைகளையோ அல்லது வேலை வாய்ப்புக்களையோ ஏற்ப்படுத்துவதற்கு எந்த வித திட்டங்களையும் முன்வைக்கவும் இல்லை முயற்ச்சிக்கவும் இல்லை.

7. மாகாண அரசு விசேஷ ஷரத்து இலக்கம் 17 – 2017 ஐ (Provincial Council Special Act No 17 of 2017 ) பாராளுமன்றத்தில் ஆதரித்ததன் மூலம் இன்று UNP யின் தேவைக்காக மாகாண அரசு தேர்தல்கள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசையான அதிகாரப்பரவலாக்கத்தின் அடையாளமாக இருக்கும் மாகாண சபை மக்களால் தெரிவு செய்யப்படட பிரதிநிதிகள் இன்றி கவர்னர் ஆட்சியில் தொடர்ந்து இருப்பதற்க்கான காரண கர்த்தாக்கள் TNA யினரே. அன்று TNA யினர் பாராளுமன்றத்தில் இந்த சடட மூலத்தை தோற்கடித்திருந்தால் இன்று வடக்கு கிழக்கில் மக்கள் பிரதிநிதிகளை கொண்ட மாகாண சபை இருந்திருக்கும்.

8. யுத்தத்தில் காணாமல் போனோர் தொடர்பாகவும் தசாப்தங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியற்கைதிகள் விடயத்திலும் TNA யினர் பாராளுமன்றத்தில் எந்தவித அர்த்தமுள்ள நெருக்கடியையும் அரசிற்கு ஏற்படுத்தவில்லை TNA யினரின் நிலைப்பாடு தான் என்னவென்று கூட துணிவுடன் வெளியில் தெரிவிக்கவில்லை. எல்லா தரப்பினனராலும் காணாமல் ஆக்கப்பட்டோர் இனி திரும்பி வரப்போவதில்லை என்ற விடயம் எல்லோருக்குமே தெரியும். இது தெளிவாக தெரிந்தும் அந்த குடும்பங்களின் எதிர் கால வாழ்க்கைக்கு நியாயமான இழப்பீடுகளையும் அவர்தம் வாழ்க்கையை மேம்படுத்த புனர்நிர்மாண நடவடிக்கைகள் எதையுமே மேற்கொள்ளாமல். 500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டு பல கோடி ரூபாய்களை வேதனமாகவும் நிர்வாக செலவாகவும் விரயமாகி காணாமற் போனோர் அலுவலகத்தை (OMR ) அமைத்து செயற்படுத்துகின்றனர்.

9. வடக்கு கிழக்கில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள், 25 மாகாண சபை உறுப்பினர்கள், 470 வரையிலான உள்ளூராட்சி உறுப்பினர்கள் அரசின் செல்லப்பிள்ளை என்கின்ற அந்தஸ்து இவை எல்லாம் இருந்துமே தமிழ் மக்களுக்கு பயனுள்ள வகையில் ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை கேவலம் இறுதியாக TNA யினரது கல்முனையில் தனி தமிழ் மாவடடம் அமைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை கூட ரணில் தரப்பினால் உதாசீனம் செய்யப்பட்டபோது கையாலாகாதவர்களாகவே இருந்தார்கள்.

UNP – TNA யினரின் தமிழ் மக்கள் விரோத கூட்டு நிராகரிக்கப்படல் வேண்டும் – மாற்றம் தேவை என்பதே SDPT யின் நிலைப்பாடு.