தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தப் பிரச்சினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சமரம் மூலம் தீர்க்கப்படுவது சிறந்தது

மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் பற்றிய கூட்டு ஒப்பந்தப் பிரச்சினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சமரம் மூலம் தீர்க்கப்படுவது நல்லது. சமரசம் காண முடியாதவிடத்து மனுவில் பெயர் குறிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகள் அடுத்துவரும் அமர்வில் ஆட்சேபணைகளை பதிவு செய்ய வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் தொழிலாளர் சங்கம் தாக்கல் செய்திருந்த ரிட் மனு 08.05.2017ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்டது. (“தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தப் பிரச்சினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சமரம் மூலம் தீர்க்கப்படுவது சிறந்தது” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்ஸ் தேர்தல் முடிவுகள்

2002 இல் அடிப்படைச் சம்பளமாக 1500 ஈரோக்களாக ஆக்குவேன் என அப்போது போட்டியிட்ட வேட்பாளர் சேகோலோன் ரோயால் முன்மொழிந்தார். அவரது கட்சிதான் நேற்றுவரை ஆட்சியில் இருந்தது. இன்றுவரை அவ்வெல்லையை அவர்கள் எட்டவில்லை .வேலையற்றோர் தொகை 36 இலட்சத்தை அண்மித்து எந்த தற்காலிக மாற்றீடுகளும் இல்லாது பயங்கரவாத ஒழிப்பு என்பதில் யார் தீவிரம் .வெளிநாட்டவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என விவாதத்திலேயே தம் காலத்தை கடத்தும்போது மக்ரோன் வெற்றி பெற்றதில் ஆறுதல் கொள்ளமுடியாது .ஒரு சிறிய ஆறுதலாக இடதுசாரிகளின் செல்வாக்கு மிகுந்த மாகாணம் 93 இல் 50 வீதத்தினரே வாக்களித்திருப்பதும் எமது வாக்கு கொம்யூனிஸ்ட் கட்சிக்கு மாத்திரமே என கோஷம் எழுப்பி பதாகை தூக்கி தெருவில் இறங்கியதும் ஆறுதல் .இந்த ஓர்மம் வேண்டும் இப்போது.

(“பிரான்ஸ் தேர்தல் முடிவுகள்” தொடர்ந்து வாசிக்க…)

Felicitation To A Friend & Resolute Marxist

(Dr. Rajan Hoole)
In the normal course of events my long friendship and brotherly regard for Sritharan, or Sugu, as he is called, and to several of his colleagues, particularly Subathiran, or Robert, would have been unusual. Those of us whose training had a professional bias and had successful careers with domestic felicity mapped out for us, often ceased to think about things that really matter. That would normally have been perfectly all right. But when these persons also had a vicarious urge to be heroes of Tamil nationalism, they also gave their voice and tacit approval to maligning and killing as traitors, those who thought and felt for the utterly hapless plight of ordinary people, repeatedly forced into wars they never wanted.

(“Felicitation To A Friend & Resolute Marxist” தொடர்ந்து வாசிக்க…)

அலாரம் அடிக்கிறது

(மொஹமட் பாதுஷா)

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடும் அளவுகடந்த கனவுகளோடும் நிறுவப்பட்ட நல்லாட்சியின் ஆட்சிப் பரப்பெங்கும் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்ற களநிலை மாற்றங்கள், கருத்தியல் அதிர்வொன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. கூட்டு அரசாங்கத்துக்குள் கட்சிசார் ‘முன்னிலைப்படுத்தல்கள்’ ஏற்கெனவே இருக்கத்தக்கதாக, இனவெறுப்பு நடவடிக்கைகளும் கூட்டு எதிரணியின் செயற்பாடுகளும் தீவிரமடைந்திருக்கின்றன. ஓர் அரசாங்கம் ஆட்சியமைத்து பல வருடங்களுக்குப் பிறகு ஏற்படுகின்ற ஸ்திரமற்ற நிலைமைகள் அல்லது அதுபோன்ற ஒரு மாயத்தோற்றம் இப்போது உருவாகி வருகின்றது.

(“அலாரம் அடிக்கிறது” தொடர்ந்து வாசிக்க…)

நெட்டை நெடு மரமென நின்று தொலைப்போமோ?

பில்கிஸ் பானுவிற்கு இப்போது வயது 34. அப்போது வயது 19. அப்போது என்பது 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம். அந்த மாதத்தின் 3ஆம் தேதி அவர் கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானார். அப்போது அவர் 5 மாத கர்ப்பிணி. கையில் 3 வயது குழந்தை இருந்தது. ஈத் பண்டிகைக்காக அவர் தாய் வீட்டிற்கு வந்திருந்தார்.
அப்போதுதான் கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து முஸ்லிம் மக்கள், தேடித்தேடி அழிக்கப்பட்டார்கள் முஸ்லிம் மக்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. அந்த தினத்தில் அவரது ஊரிலிருந்தால் தாக்கப்படுவோம் என்ற செய்தி கிடைத்தது. அதனால் மசூதி, ஆதிவாசிகள் குடியிருப்பு என்று மறைந்து மறைந்து ஓடிக் கொண்டிருந்தார்கள். தாய், 2 தங்கைகள், தாய் மாமாவின் 2 பெண்கள், அப்பாவுடன் பிறந்த அத்தையின் பிள்ளைகள் என்று ஈத் பண்டிகைக்காக வந்திருந்த சொந்தங்கள் எல்லோரும் மரணத்திற்கும், மானத்திற்கும் பயந்து ஓடிக் கொண்டிருந்தார்கள்.

(“நெட்டை நெடு மரமென நின்று தொலைப்போமோ?” தொடர்ந்து வாசிக்க…)

‘தாய்க் குண்டு’ என்ற பெயர் கேவலமானது – போப் பிரான்சிஸ்!

”மரணத்தை வழங்கும் குண்டுக்குத் ‘தாய்க் குண்டு’ எனப் பெயர் வைத்துள்ளதை நான் கேவலமாக உணர்கின்றேன்!” என்று போப் ஃபிரான்சிஸ் கூறியுள்ளார். அமெரிக்க ராணுவம் இதுவரையான போர்களில் பயன்படுத்திய குண்டுகளிலேயே மிகப்பெரிய வெடிகுண்டுக்கு, ‘அனைத்துக் குண்டுகளுக்கும் மேலான தாய்’ என்று பெயர் வைத்திருந்தமை பற்றி விமர்சனம் செய்கையிலேயே போப் ஃபிரான்சிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

(“‘தாய்க் குண்டு’ என்ற பெயர் கேவலமானது – போப் பிரான்சிஸ்!” தொடர்ந்து வாசிக்க…)

ஆறாத்துயரம்

எமது நண்பி சிவரமணி 1991மே மாதம் 17ம்திகதி தற்கொலை செய்துகொண்டாள் அவள் பற்றிய நினைவுகள் எனது கடந்த கால வாழ்க்கையில் கல்வெட்டாயின. அவளது தற்கொலைக்கான காரணம் அரசியல் ரீதியானதென்பதை நான் அறிந்தவன்; உணர்ந்தவன். இன்றைக்கு முகப்புத்தகத்தில் அவளின் தற்கொலைக்கு சாதியக் காரணிகளே காரணம் என்ற கோணத்திற் கருத்துகள் பகிரப்படுகின்றன.
சிவரமணியின் மரணம் வரையில் அவளுடன் நட்பாக இருந்தவர்களுள் நானும் ஒருவன்.

(“ஆறாத்துயரம்” தொடர்ந்து வாசிக்க…)

குட்டிமணி தங்கத்துரை தேவன் ஆகிய மூவரும் பின்னர் ஜெகனும் கைது செய்யப்பட பொலிசுக்கு தகவல் கொடுத்தவர் பிரபாகரனே.

‘தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்’ முன்னோடி மட்டுமல்ல, எமது தமிழ் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் 1970 முதல் தமது மக்களின் விடுதலைக்காக உழைத்தவர்களில் தங்கத்துரை (தங்கவேல்), குட்டிமணி (யோகச்சந்திரன்), தேவன் (சுப்பிரமணியம்)ஆகிய மூவரும் 5.4.81 அன்று பருத்தித்துறை மணற்காட்டில் வைத்து கடற்படை, இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். குறிப்பிட்ட மூவரும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு போகிறார்கள் என்பது எப்படி கடற்படைக்குத் தெரிய வந்தது? இதற்கான பதில் இன்னமும் மர்மமாகவே உள்ளது. இவர்கள் வழக்குகளில் ஈடுபட்டு இவர்களை அடிக்கடி பனாகொடை முகாமுக்கு போய் சந்தித்தவரான சட்டத்தரணி கரிகாலன் “தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன்” என்ற தலைப்பில் ஜுனியர் விகடனில் எழுதிய தொடர் கட்டுரையில் இப்படியாகக் குறிப்பிடுகின்றார்.

(“குட்டிமணி தங்கத்துரை தேவன் ஆகிய மூவரும் பின்னர் ஜெகனும் கைது செய்யப்பட பொலிசுக்கு தகவல் கொடுத்தவர் பிரபாகரனே.” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சுகு இன் புத்தக வெளியீடு

(சாகரன்)

இவன் என் தோழன். 1978 அறிமுகம்… அதுவும் நல்லூரில் ஒரு ரியூட்டறி கொட்டகையில்  அரசியல் வகுப்பில். மெலிந்த உரிவம் கண்ணை மூடியபடி தலையை ஒரு பக்கமா சாய்தபடி பல மர்க்சியப் புத்தகங்களை பங்கங்கள் வாரியாக மேற்கோள் காட்டி அரசியல் வகுப்பு. இந்த வயதில் இவ்வளவு அரசியல் புத்தகங்களை அதுவும் மாக்சிச புத்தகங்களை எவ்வாறு வாசித்து கொண்டார் என்ற பிரிமிப்பு எமது நாட்டுச் சூழலுக்கு எற்ப கருத்துரைகளை வழங்கினார். அவர் வேறுயாரும் இல்லை தோழர் சுகு சிறீதரன் திருநாவுக்கரசு.

(“தோழர் சுகு இன் புத்தக வெளியீடு” தொடர்ந்து வாசிக்க…)

தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தி நிற்போம்

31 வருடங்களின் முன்பு மே மாதம் ஈழவிடுதலை போராட்டத்திற்கான இறங்கு முகத்திற்கு ஆரம்ப சுழி போட்ட நாள் புலிகள் தனது ஆயுத மேலாதிக்கத்தை.. செயற்பாட்டை… தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு எதிராக ஆரம்பித்த நாள். அந்த விடுதலை அமைப்பின் செயற்பாடுகளை முடக்குகின்றோம் என்று பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து புறப்பட்டு அதன் போராளிகள் பலரைக் கொன்று இறுதியாக அதன் தலைவர் சிறீசபாரத்தினத்தை கொன்று ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான சாவுமணியை அடித்துக் கொண்டனர். ஈழவிடுதலை அமைப்புக்களுக்கிடையேயான ஐக்கிய முன்னணி ஈழத் தேசிய விடுதலை முன்னணியை முன்நோக்கி நகர்த்துவதில் சிறீசபாரத்தினத்னதிதும் அவர் தலமைதாங்கிய ரெலோ அமைப்பினதும் செயற்பாடுகள் வரலாற்றில் குறித்துக் கொள்ளப்படவேண்டியவை.

(“தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தி நிற்போம்” தொடர்ந்து வாசிக்க…)