சீனாவின் பொறிக்குள் சிக்கித்தவிக்கும் இலங்கை

இலங்கை தான் ஒரு புதிய அணிசேரா நாடு என்று 2019 இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டபோது அறிவித்தது. ஆனால் தற்போது தனது இறையாண்மையை சீனாவிடம் கையளித்துவிட்டது என்றே தோன்றுகிறது. விசேடமாக ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்த பிறகு, சீனா இலங்கையை தங்க முட்டையிடும் வாத்தாகக் கருதியது கடன்களையும், அபிவித்தித் திட்டங்கள் என்ற பெயரில் நாட்டின் அனைத்துத் திட்டங்களிலும் தனது கால்களைப் பதிக்கத் தொடங்கியது மட்டுமன்றி, கடனுதவி என்ற பெயரில் பணத்தை வகை தொகையின்றி வாரி இறைக்கத் தொடங்கியது. இங்கே பாரிய வருமானத்தை ஈட்டிக்கொண்ட நிறுவனமாக China Harbour Engineering Company (CHEC) திகழ்ந்தது என்பது வெள்ளிடை மலை.