இந்திய விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள்? இதோ ஓர் எளிய விளக்கம்

அதானியின் கண் இந்த வர்த்தகத்தில் பதிந்தது.
இமாச்சல பிரதேசத்தில் பாஜக அரசாங்கம் இருந்ததால், அதானிக்கு அங்கு நிலம் எடுப்பதற்கும், மீதமுள்ள காகித வேலைகளுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

அதானி வணிகர்களின் கிடங்கை விட ஆயிரக்கணக்கான மடங்கு பெரிய பெரிய கிடங்குகளை பல்வேறு இடங்களில் கட்டிவிட்டான். இப்போது, அதானி ஆப்பிள் வாங்க ஆரம்பித்துள்ளான். விவசாயிகளிடம் இருந்து சிறுவியாபாரிகள் ஆப்பிளை கிலோ ரூ 20 வாங்கிய பொழுது அதானி முதல் வருடம் ரூ22க்கு வாங்கினான். அடுத்த வருடம் ரூ.23க்கு வாங்கினான். சிறுவியாபாரிகளால் அதானியுடன் போட்டியிட முடியாமல் பின்வாங்கினர். வேறு வேலைகளுக்கு போக ஆரம்பித்தனர்.

இப்போது அதானி அங்கு ஏகபோக வியாபாரியாக மாறிவிட்டான்.
இப்போது ஆப்பிளின் விலை கிலோவுக்கு ரூ .6 ஆக மாறிவிட்டது.
இப்போது அங்கு சிறு வணிகர்கள் இல்லை. விவசாயி அதானிக்கு ஒரு கிலோ ரூ.6க்கு ஆப்பிள்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இப்போது அதானி ஒரு ஆப்பிளை ரூ.6க்கு வாங்கி ரூ100க்கு விற்பனை செய்கிறான்.

விவசாய மசோதாவை செயல்படுத்தினால் கோதுமை, அரிசி மற்றும் பிற விவசாய பொருட்களுக்கும் இதே தான் நடக்கும். முதலில் அவர்கள் அளிக்கும் விலை சிறு வர்த்தகர்களை அழித்து விடும்.
ஆரம்பத்தில் விவசாயிகளிடமிருந்து பயிரை லாபகரமான விலையில் வாங்குவார்கள். பிறகு சிறு வணிகர்களை ஒதுக்கிய பின்னர் விவசாயிகளிடமிருந்து மிக குறைவான விலைக்கு வாங்குவார்கள்.
இப்போதே ஒட்டுமொத்த விவசாயிகளும் மக்களும் விழிப்படையாவிட்டால் காலம் நம்மை சவக்குழிகளுக்குள் தள்ளி விடும்.

முதலில் நாம் நமது வீடுகளில் இருந்து பெரு முதலாளி கொள்ளையர்களை விரட்டுவோம்.
அம்பானி, அதானியின் பொருட்களை தூக்கி எறிவோம்.