தமிழர்கள் மத்தியில் சாதிக் கட்டமைப்பு

தோம்பு என்பது ஊர்களிலுள்ள காணிகளின் பெயரும், பரப்பும், உடையவன் பெயரும், சாதியும், அரசிறை வரியும், கடமைகளும், ஊழியமும் குறிக்கப்பட்ட ஏட்டின் பெயராகும். இது கி.பி. 1623 இல் எழுதப்பட்டது.

தோம்புகளின் அடிப்படையில் இங்குவந்து குடியேறிய சகல மக்களுள் மலையாளத்தவர்கள் 48% குடியேறியுள்ளார்கள் என்று ஊகிக்கலாம்.

மலையாளிகள் வந்து குடியேறிய இடங்களுக்குத் தங்கள் பெயரையோ, தங்கள் சாதிப் பெயரையோ, தங்கள் ஊரின் பெயரையோ, தங்கள் நாட்டின் பெயரையோ, அல்லது அரசன் பெயரையோ ஏதாவதொன்றை வைத்துள்ளனர்.

மலையாளச் சாதிகளும் குடியேறிய இடங்களும் :

(1) குறும்பர் – குறும்பாவத்தை (சுதுமலை), குரும்பசிட்டி (ஏழாலை)

(2) முக்குவன் – முக்குவிச்சி ஒல்லை

(இணுவில்)

(3) நாயர் – பத்திநாயன் வயல் (மல்லாகம்)

(4) புலையன்- மூப்பன்புலம் (ஏழாலை)

(5) மலையன் – மலையன் சீமா (சிறுப்பிட்டி)

(6) பணிக்கன் – பணிக்கன் சாட்டி (வேலணை)

(7) தீயன் – தீயாவத்தை (கோப்பாய்)

(😎 பட்டன் – பட்டன் வளவு (வரணி)

(9) வாரியார் – வாரிக்காவற்கட்டு (புங்குடுதீவு)

(10) வேடுவன் – வேடுவன் கண்டி (மூளாய், நவாலி)

(11) பாணன் – மாப்பாணன் கலட்டி (கச்சாய்)

(12) பிராமணன் – பிராமணன் வயல் (நாவற் குழி)

(13) வேளான் – வேளான் பொக்கட்டி (கச்சாய்)

(14) நம்பி – நம்பிராயன் தோட்டம் (சுதுமலை)

மலையாளம் என்னும் பெயரோடு கூடிய குடியேற்றங்கள் :

(1) மலையாளன் காடு – அராலி, கோப்பாய்

(2) மலையாளன் சீமா – அச்சுவேலி, நீர்வேலி

(3) மலையாளன் ஒல்லை – உடுவில்

(4) மலையாளன் பிட்டி- களபூமி

(5) மலையாளன் தோட்டம் – சங்கானை, சுழிபுரம், சுதுமலை

(6) மலையாளன் வளவு – அத்தியடி, அச்செழு

(7) மலையாளன் புரியல் – களபூமி

சேரன் என்னும் பெயரோடு கூடிய குடியேற்றங்கள் :

(1) சேரன் – சேரதீபம் (இலங்கை)

(2) சேரன் கலட்டி – வரணி

(3) சேரன்எழு – நவுண்டில்

(4) சேரன் தம்பை – தனக்காரக்குறிச்சி

(5) சேரபான் சீமா – மாவிட்டபுரம், நவிண்டில்

(6) வில்லவன் தோட்டம் – சங்கானை, சில்லாலை

(குறிப்பு:

வேளான் – திருவாங்கூரில் பறையர் ‘வேளான்’ என்று அழைக்கப்படுவர்.

சீமா – எல்லை

வில்லவன் – சேரன்)

யாழ்ப்பாணத்தில் வழங்கும் சேரநாட்டு ஊர்ப்பெயர்கள் :

(1) அச்செழு

(2) இடைக்காடு

(3) கரம்பன்

(4) கிழாலி

(5) குதிரைமலை

(6) கொல்லம்

(7) நாகர்கோயில்

(😎 கோவளம்

(9) மாந்தை

(10) பாலைக்காடு

கேரளத்திலும் யாழ்ப்பாணத்திலும் வழங்கும் பொதுச் சொற்கள் :

(1) துரும்பு

(2) வண்ணான்

(3) பணம்

(4) நம்பி

(5) அப்பச்சி

(6) பறைதல்

(7) குட்டி

யாழ்ப்பாணத்திற் காணப்படும் மலையாள வழக்கங்கள் :

(1) பெண் வழிச் சொத்துரிமை

(2) பெண் வீட்டில் மாப்பிள்ளை வசித்தல்

(3) பெண்கள் மார்புக்குக் குறுக்கே சேலையைக் கட்டுதல்

(4) பெண்கள் காதோட்டையை ஒலைச்சுருள் வைத்துப் பெருப்பித்தல்

(5) பெண்கள் மாதத்துடக்குக் காலத்தில் வண்ணானுடைய மாற்றுடை அணிதல்

(6) சம்மந்தக் கலியாணம்

(7) ஆண்கள் வேட்டி கட்டும் முறை

(😎 ஆண்கள் கன்னைக்குடுமி முடிதல்

(9) கஞ்சி வடித்துச் சோறு சமைத்தல்

(10) நாற்சார் வீடு கட்டுதல்

(11) சங்கடப் படலை அமைத்தல்

(12) வீட்டைச்சுற்றி வேலி அடைத்தல்

(13) ஒழுங்கை அமைத்தல்

(குறிப்பு :

யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறையில் ‘சங்கடப் படலை’ என ஒரு வகையான வெளி வாசல் வேலியில் அமைக்கப்பட்டமுறை ஒன்று இருந்தது. இது ஒரு மறைந்து போகும் பாரம்பரிய அமைப்பு முறையாகும். நடை பயணமாக வரும் வழிப்போக்கர்களுக்குச் சங்கடங்களை தீர்க்கும் முகமாக அவை அமைக்கப்பட்டதால் அவை ‘சங்கடப் படலை’என காரணப் பெயர் பெற்றிருக்கலாம்.)

(Copied)

பொறுப்பு துறப்பு(😆) : கட்டுரையை பதிவதற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது.

குறிப்பு: மக்கள் கூட்டம் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்வது வழமையானது. மலையாளிகள் இலங்கையை நோக்கி இடம்பெயர்ந்தது போல் ஈழத்தமிழர்களும் கேரளாவிற்கு பெருமளவில் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அவ்வாறு சென்ற சமூகத்தினர் ஈழவா என அழைக்கப்படுகின்றனர். கேரளாவின் சனத் தொகையில் 25% சதவிகித ஈழவா சமூகம் ஆகும்.