திம்புவா…? இலங்கை – இந்தியா…? இமாலயாவா…?

மே 2009 யுத்தம் முடிவிற்கு பின்னரான காலங்களில் புலம் பெயர் தேசங்களில் இருந்து இது போன்ற பல முயற்சிகள் அவை சில அறியப்பட்டதாகவும் பல அறியப்படாதவையாகவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

ஆனால் அவை எல்லாம் ஒரு எல்லையைத் தாண்டியது இல்லை.
இதற்குள் தமிழ் தரப்பை ஒற்றுமைப்படுத்தல் என்பதான விடயங்களே அதிகம் நடைபெற்று அதன் பின்பு அடுத்த கட்டத்திற்கு நகருதல் என்ற அணுகுமுறை அதிகம் செயற்படுத்த முற்பட்டதான அணுகு முறையில் முதற் கட்டத்தில் கிடைத்த ஏமாற்றம் அதற்கு அப்பால் பயணிக்காமல் இடையில் நின்ற அனுபவங்களே அதிகம்.

இதே போல் இலங்கையில் இருக்கும் தமிழ் பேசும் மக்களை பிரநிதித்துவப்படுத்தும் பல வேறு கட்சிகளும் எல்லோரும் ஒருமித்த அணியில் இருந்து என்றாக இல்லாவிட்டாலும் இதே மாதிரியான அரசியல் தீர்விற்கான முயற்சிகளை மேற்கொண்டும் இருக்கின்றார்கள்.

இதே போல் இலங்கை அரசும் புதிய அரசியல் யாப்பு என்ற வரையிலான வரைக்கும் 13 வது திருத்தச் சட்த்தை முழுமையாக அமுலாக்குதல் 13 வதற்கு அப்பால் 13 பிளஸ் என்றாக அறிமுகப்படுத்துதல் அல்லது அதனை முழுமையாக இல்லாது ஒழித்தல் என்பதாக சில முயற்சிகளை நடாத்திக் கொண்டுதான் வருகின்றது.

இவை அனைத்தும் ஒரு எல்லையை கடக்காமல் இடையில் நின்று போவது அல்லது உலர்ந்து உதிர்ந்து போவதான நிலமைகளே அதிகம் வரலாறாக இருப்பதினால் தற்போதைய முயற்சியையும் அவ்வாறான அவ நம்பிக்கையின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் பார்த்துக் கொண்டு இருப்பது இயல்பானதுதானே.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக சேர் பொன் இராமநாதன் காலத்தில் இருந்து பொன்னம்பலத்தின் 50 இற்கு 50, பண்டா செல்வா இடையேயான சமஷ்டி வகையிலான ஒப்பந்தம், ஜேஆர்இன் மாவட்ட சபை என்றாக பயணித்து அப்பாபிள்ளை அமிர்தலிங்க காலத்து தனிநாடு என்றாக ஈழப் பிரகடனம் என்ற வரையிலாக பயணித்தாலும் இதுவரை நம்பிக்கை தரும் புள்ளிகளை நாம் அடையவில்லை.

இவை எல்லாவற்றிற்கும் நடுவில் இந்தியாவின் முன் முயற்சியினால் இந்திய அளவிலான…? மாநில சுயாட்சி அதிகாரம் என்ற வரையிலான அதிகாரப் பரவலாக்கம் என்றாக இலங்கையில் எற்படுத்தப்பட் 13 வது அரசியல் திருத்த சட்ட மூலத்தின் அடிப்படையிலான மாகாணசபை முறைமை மட்டுமே இன்று வரை இலங்கை அரசியல் யாப்பில் எழுதப்பட்ட ஒரளவிற்கு அதிகாரம் பகிர்தளிக்கு முயலும் சட்பூர்வமான தீர்வாக சிறுபான்மை மக்களுக்கு மட்டும் அல்ல முழு இலங்கை மக்களுக்குமான அதிகாரப் பரவலாக வந்திருக்கின்றது என்பது இங்கு கவனத்தில் கொண்டாக வேண்டும்.

இதில் இந்த மகாணசபை என்பது என்னவோ தமிழருக்காக தனியான விசேட அதிகாரங்களை கொடுக்கும் அவர்களுக்கான விடயம் மட்டும் என்பதாக இலங்கை அரசும் ஏன் தமிழர் தரப்பும் அதிகம் பேசவிளைவதும் அதற்கான எண்ணப்பாடுகளை சமான்ய மக்கள் மத்தியில் ஏற்படுத்த முற்படுவதற்கான மடை மாற்றும் செயற்பாடு சமான்ய சிங்கள மக்கள் மத்தியில் எதோ தமிழருக்கும் விசேட அந்தஸ்தை வழங்கி நாட்டைப் பிரிப்தாக இது இருக்கின்றது என்ற பயப் பிராந்தியை ஏற்படுத்தி சிங்களத் தரப்பும் தமிழ் தரப்பும் வெற்றியை, தோல்வியை முறையே அடைந்துள்ளனர்.

இந்த மகாணசபை முறமையில் ஒரே ஒரு விசேட செயற்பாடாக வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரே மகாண சபை அரசாகவும் பின்பு அனுமதி பெறும் வாக்கெடுப்பாக கிழக்கு மக்களிடம் தேர்தல் நடாத்தி இணைப்பை நிரந்தரமாக்குவது என்ற எற்பாட்டை மட்டும் இந்த 13 வது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கத்தில் இந்தியா தனது அழுத்தங்கள் மூலம் செய்திருந்தது என்பதுவும்.

அதனை நீதி மன்ற நடைமுறைகள் மூலம் அவசரமாக ஜேவிபி செல்லாக் காசாக்கியது என்பது இங்கு எரிகின்ற விடயங்களை மேலும் எரிய விட்டதாக அமைந்தும் விட்டது.

உண்மையில் வடக்கு கிழக்கு நிர்வாக ரீதியாக இரு மகாணங்களாக இருந்தாலும் உண்மையில் மக்களின் மனங்களில் ஆயுதப் போராட்டத்திற்கு முன்பு அதிகம் இணைந்தே இருந்தன.

அது சமூக பொருளாதார பண்பாடு கலை கலாச்சாரம் என்பதாக பலதிலும் இதில் முஸ்லீம் மக்களும் தமிழ் மக்களும் தமக்கான தனித்துவங்களை பேணிய வண்ணம் இணைந்தே வாழ்ந்தனர் என்பது வரலாறறு உண்மை.
ஆனால் ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் ஏற்பட்ட பல கசப்பான நிகழ்வுகள் அதனை பேரினவாதம் தனக்கு சாதமாக பயன்படுத்திய முறை யாழ்ப்பாண அல்லது வடக்கின் மேலாண்மை என்று இன்று மக்களுக்கு இடையே அது தமிழ் மக்கள் முஸ்லீம் மக்கள் என்பதற்கு அப்பால் வடக்கு மக்கள் கிழக்கு மக்கள் என்பதாகவும் பல சந்தேகங்களை எற்படுத்தி உறவுகளில் விரசல்களை எற்படுத்திவிட்டும் சென்றிருக்கின்றது.

ஆனால் சிறுபான்மையினர் என்ற வகையில் இரு பிரிவினரும் ஒரே மாதிரியான ஒடுக்குமுறையால் இணைந்தே இருக்கின்றனர் என்பதே உண்மை நிலை.

திம்புவில் எழுதப்படாத ஒற்றுமையாக பலம் மிக்கவர்களா தமிழர் தரப்பு இருந்தது என்பது இதுவரை பேரினவாத்திற்கான பெரிய சவாலாக இருந்த கால கட்டம் என்பதாகவே பார்கப்படுகின்றது.

ஆகும் இதில் கூட மலையக மக்களின் நலன்களை கருத்தில் கொண்ட அளவிற்கு முஸ்லீம் தரப்பின் கருத்துகளை அதிகம் தமிழர் தரப்பு இணைக்கவில்லை என்ற பார்வையில் நியாயங்கள் உண்டு.
நீலன் திருச்செல்வம், கேதீஸ்வரன் வரைவில் சந்திரிகா அம்மாரின் காலட்டத்தில் முன் வைக்கப்பட்ட தீர்வு பாரளுமன்றத்தில் தமிழ் மிதவாதத் தலமைகளும் ரணில் விக்ரமசிங்கவும் எரித்து மகிழ்ந்தவையில் சமஷ்டிக் அப்பால் நிறைய நல்ல விடயங்கள் இருந்தன என்பதில் தமிழர் தரப்பு மட்டும் அல்ல சிங்களத் தரப்பும் தவற விட்ட சந்தர்பங்களில் முக்கியமான கால கட்டம் இதுவாகின்றது.

அது போல் புலிகளின் ஏக செயற்பாட்டுக் காலத்தில் அமையவிருந்த இடைக்காலத் தீர்வான ஒஸ்லோ ஒப்பந்தமும் அவ்வாறானதுதான்…
இவ்வாறு 13 வது திருத்தச் சட்டம் என்ற அரசியல் அமைப்பில் உருவாக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கத்தறி;கு முன்பும் பின்பு அரசியல தீர்வு என்று நல்லதாகவும் கூடாதனவாகவும் பலதும் உருவாக முற்பட்டாலும் இவை அனைத்திலும் தமிழர் தரப்பின் இராஜதந்திரங்கள் தோற்றதாகவும் இலங்கை மத்தியில் ஆளும் அரசுகளின் பேரினவாதம் வெற்றி பெற்றதாகவும் அமைந்த செயற்பாடுகளே அதிகம் என்பதே உண்மை நிலை.

இங்கு நாம் ஒரு விடயத்தை கவனத்தில் எடுத்தாக வேண்டும் புலி (புலிசார்ந்த தரப்பைத்) தவிர வேறு எவரும் இப்படியான சமாதான அரசியல் தீர்வு… பேச்சுவாரத்ததை முயற்சிகளை முட்டுக்கட்டை போட்டதாக வரலாறு இல்லை.

சொல்லாவிட்டாலும் யார் குத்தினாலும் மக்களுக்கு நல்லது நடக்கட்டும் என்பதாகவே வரலாறு முழுவதும் இருந்து வந்திருக்கின்றனர். சிறப்பாக புலிகளின் ஏகபோக செயற்பாட்டுக் காலமான 1990 தொடக்கம் 2009 மே வரைக்கும்.
.
அதாவது புலிகளின் ஏக போக காலத்தில் அவர்களைத் தவிர வேறு யாரையும் கலந்தாலோசிக்காத இணைத்துக் கொள்ளாத தனி ஓட்டத்தின் போதும் இதுதான் நடைபெற்றது.

உண்மையில் இலங்கை போன்ற பல தேசிய இனங்கள் வாழும் நாடுகளில் அதிகாரப் பரவாக்கலுடனான அரசியல் தீர்வில் சகலரும் சம உரிமை பெற்று வாழ்வதற்கான முன்னெடுப்புகளை கிடைத்தில் இறுகப் பற்றி முன்னோக்கி நகர்வதே சாத்தியமான எற்புடைய செயற்பாடாக இருக்க முடியும்.

அதனை தோழர் பத்மநாபா தலமையில் அ. வரதராஜப்பெருமாள் முதல் அமைச்சராக உருவான இணைந்த மகாணசபையை முன் நகரத்திச் செல்வதில் விட்ட பஸ்ஸாக தமிழ் தரப்பு இழப்புகளை சந்தித்து பலவீனமான சமூகமாக இன்று மாறி இருக்கின்றது என்பதே உண்மை.

இன்றை தேவை 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி அதற்கான மகாணசபைத் தேர்தல் ஆட்சி அதிகாரம் என்பதில் இருந்து மீண்டும் ஆரம்பித்து இறுகப் பற்றி முன்னோக்கி நகர்வதே புத்தி சாதுர்சியமான இராஜதந்திரமான செயற்பாடாக இருக்க முடியும்.
அதனை நோக்கிய விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கானதாக இமாலயா முயற்சிகள் என்றாக உலகத் தமிழர் பேரவையின் பயணங்கள் அமைந்ததாக இருக்க வேண்டும்.

இதில் 4 அம்சம் என்ற சுயநிரணய உரிமையும் 6 அம்சங்களைக் கொண்ட இமாலயா என்தற்கு அப்பால் இருக்கும் அதிகாரப் பகிர்வான மாகாணசபையை வலுப்படுத்துவதில் ஆரம்பிப்போம்
இதன் பணயத்தின் முடிவு திம்புவின் 4 அம்சக் கோரிகைகளை முழமைப்படுத்துவதான ஆரம்ப புள்ளிகளாக கொள்ளலாம். இதன் இடை நிலையில் தற்போதைய 6 அம்சக் இமாலயா அமையலாம்
யார் குற்றினாலும் அரிசி ஆனால் போதும் என்ற பொருமாத் தோண்டிக் கதைகள் ஒரு வகையில் தப்பித்துக் கொள்ள பாவிக்கும் தந்திரோபாயம். கொள்கை அற்ற செயற்பாடாவே நாம் பார்க்க முடியும்.

உலக வரலாறுகளும் இதனைக் கூறியும் நிற்கின்றன

தமிழ் பேசும் மக்களிடையே ஏற்படவேண்டிது ஐக்கிய முன்ணியே ஒழிய ஒற்றை தலமை அல்ல. பல்வேறு சமூகப் பிரிவுகள் வர்க்கப் பிரிவுகளை தன்னகத்தே கொண்ட சமூகம் தமக்கிடையே பொதுவானதாக இருக்கும் ஒடுக்கு முறைகளை வெல்வதற்கு தமது அடிப்படையில் ஐக்கிய முன்னணியை அமைத்து செயற்படுவது முன்னோக்கி நகர்வதே சரியானது.

பதிலாக வெளிநாடுகள் இலங்கையை தமது அரசியல் சதுரங்கத்திற்கும் இந்துவத்துவா ஒரே தலமை என்பதை திணிப்பதற்கும் இலங்கையின் தமிழ் பரப்பை பாவிக்கும் அணுகுமுறைகளை நாம் இனம் கண்டு அவற்றிலற்குள் மாட்டுப்படாமல் செயற்படுவதே சிறந்ததாக இருக்கும்
தற்போதைய இமாலயாக்கள் பற்றி அதன் பின்புலம் பற்றி இருப்பதான சந்தேகத்தை நாம் புறந்தள்ள முடியாது.

இந்தியாவின் தென் மாநிலங்ளை குறிப்பாக தமிழ் நாட்டை தம் வசப்படுத்த இலங்கையின் தமிழ் மக்கள் மத்தியில் பட்டை பூசலை தனக்கு சாதமாக பயன்படுத்த முயலும் ஆர்எஸ்எஸ் இன் வேலைத்திட்டங்களை நாம் புறம் தள்ளி போக முடியாது. அதன் கரங்கள் தமக்கான களங்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கின்றது.

இதற்கும் அப்பால் இந்தியவிற்கும் மேற்குலகிற்கும் வீரம்பப்படாத விருந்தாளியாக சீனாவின் பிரசன்னத்தை எவ்வாறு ஒழிப்பது என்ற வேலைத்pட்ட இணைதலகளும் இதற்குள் தமது ஆதரவுத்தளங்களை ஏற்படுத்த அடுத்த ஜனாதிபதியாக இப்ப இருப்பவரை தக்க வைக்கும் சூத்திரங்களும் இங்கு தமக்கான களங்களை அமைப்பதற்கு ஏற்ப சூழலை ஏற்படுத்துகின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

அரசியல் யாப்பில் இருக்கும் அதிகாரப் பரவலாக்கததை செயற்படுத்துவதற்கான விடயங்களை வலியுறுத்தி அதனை நடைமுறைப்படுத்தி அதில் காலூன்றி எழுந்து வருவதற்கான முன் முயற்சிகளே இன்று அவசியமாகின்றது. இதில் நமக்குள் ஐக்கியமான ஒருமித்த குரல் செயற்பாடே இன்று முதன்மையானது ஆகும்.

இதற்கான சந்திப்பாக தேரர்கள் சஜித் அனுர ஏன் மகிந்த ரணில் என்றான பயணங்களை மேற்கொள்ளுங்கள்.

இரு மொழி பேசும் மக்களையும் தயார்படுத்துங்கள்

பாதை கடினமானதுதான் ஆனால் பயனுள்ள பயணம் இது