தோழமை தினம்

இது அனைவருக்குமான வாழ்வைப் பேசும் உறவாகவும் அதில் சகலரும் சமத்துவமாக அறம் சார்ந்து செயற்படுவதை உறுதி செய்யும் உறவாகவும் அடையாளப்படுதப்படுத்தி நிற்கின்றது தோழமை உறவு.

கம்யூனிஸ்ட்கள்…. இடதுசாரிகள் அதிகமாக இந்த தோழமை… தோழர்… என்ற உறவவை தமக்கிடையே பாவித்தாலும் சாதாரண மனிதனும் என் பள்ளித் தோழன், என் பள்ளித் தோழி, நண்பர் என்பதை விட தோழா என்று அதீதி அன்பில் விழிப்பதுமாகவும் உயர்ந்து நிற்கின்றது. இந்த உறவிற்கு திழைத்து வாழ்பவர்கள் நாம்.

காதலிலும் அவள் என் தோழியாய் அவர் என் தோழனாய் என்று சொல்லி அதிக நெருகத்தை ஏற்புடமையை வெளிப்படுத்துவது அதிகம். அது போல் தோளுக்கு மேல் வளர்ந்த மகனையும் தோழனாகவும் தன் தாயை மகள் என் முதல் தோழி என் அம்மாதான் என்றுமாக விரிந்தும் செல்கின்றது இந்த தோழமை உறவு.

பாடசாலையில் ஆசிரியர்களை பல்லைக் கழகங்களில் விரிவுரையாளர்களையும் அவர்களுடன் நெருக்கமாவும் போது தோழராக உணரும் தருணங்கள் அதிகம்.

அதனால்தான் இந்த தோழமை உணர்வும் அதுசார்ந்து தோழமை தினமும் உயர்ந்து நிற்கின்றது.

நவம்பர் மாதம் முழுவதும் தோழமை நினைவுகளுடன் அதிலும் நவம்பர் 19ம் திகதி தோழமை தினமாகவும் நான் நினைவு கூர்வதில் ஒரு நியாயமான காரணம் உண்டுதானே .

பலராலும் நேசிக்கப்படும் அறியப்படும் தோழர் சேய் சேய்குவராவைப் போல தனது இளம் வயதில் 40 இற்குள் உள்ளாக மக்களுக்காக தனது உயிரை எதிரிகளிடம் இழந்தவர்கள்தான் இருவரும். ஒரு வர் பொலிவியால் மற்றையவர் தமிழ் நாட்டில்.

இருவர் இழப்பிற்கும் பின்னால் இருவரும் பற்றிக் கொண்ட கம்யூனிச் சித்தாந்தமே முக்கிய காரணமா அமைந்தது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு. இரண்டு கொலைகளுக்கு பின்னால் இருவரும் சர்வ தேசிழயவாதிகளாக தம்மை பிரணாமம் அடையச் செய்வதற்குரிய உறவுகளை வளர்த்துக் கொண்டவரகள் என்ற வலுவான காரணங்களும் உண்டு.

இருவரையும் முதலாளித்து ஏகாபத்தியத்தின் தலைக்கடா நேரடியாக இந்த அழித்தொழிப்பில் ஈடுபடாமல் தமது விசுவாசிகளையே பாவித்தும் கொண்டது.

இருவரை எசமான்களுக்காக கொன்றவர்கள் நிச்சயம் இவரின் கொலையிற்கு வருத்தப்பட்டிருப்பார்கள். அதுதான் ‘சே’ இன வரலாறும் தோழர் நாபா என்று அறியப்பட்ட பத்மாநாபாவின் வரலாறும்.
ஈழவிடுதலைப் போராட்த்தில் மனிநேயத்தின் அடையாளமாக மனித நேயத்தின் விளைநிலமாக வாழ்ந்தவர் தோழர் நாபா. இதனை அவர் சார்ந்திருந்த அமைப்பினருக்கு அப்பால் சகலரும் ஏற்றுக் கொண்டதாகவே வரலாறு உண்டு.

இதனை நாங்கள் எங்களுக்கு அருகில் உள்ள முன்னாள் போராட்ட உறுப்பினர் அல்ல ஈழவிடுதலையில் ஈடுபாடுடைய எந்த மக்களிடம் கேட்டாலும் ஏற்கும் அளவிற்கு அவரின் செயற்பாடுகள் இருந்தன.
ஐக்கியமே எமக்கு முக்கியம் என்று விடுதலை அமைப்புகள் மட்டும் அல்ல இலங்கையில் வாழும் அனைத்து சமூகத்தினரும் இனத்தவரும் ஐக்கியத்துடன் சகோதரத்துடன் வாழ வேண்டும சம உரிமையுடன் வாழ வேண்டும் என்று தனது இளம் வயதில் தனது உயிரை தியாகம் செய்தவர் தோழர் நாபா.

அவரின் இலக்குகள் விளிம்பு நிலை மக்களும் குரலற்றவர்களும் மலையக மக்களும் சாதிப்பாகுபாட்டை சமூக ஏற்றத்தாழ்வுகளால் ஒடுகப்பட்ட மக்களும் ஆவர் இவர்களின் விடுதலைக்காக எப் பொழுதிலும் சமரசம் இன்றி எதிர்த்துப் பேராடியவர்.

யாழ்ப்பாணத்து செம்மண் கூலித் தொழிலாளர்கள், மலையத்து தொழிலாளர்கள், கிழக்கின் விளிம்பு நிலை விவசாயிகள் கடற் தொழிலாளிகள் என்றுஇவரின் தடங்கள் பதியாத இடம் இல்லை எனபதே உண்மை.

இந்தியாவில் சிறப்பாக தமிழ் நாட்டின் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள சேரி மக்களிடம் இவரின் தோழமை எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. கோடம்பாக்கத்து இவரின் வாழ்வுடன் இணைந்து பயணித்த போது நான் இதனை நேரில் பல தடவை கண்டுள்ளேன்.

கூடவே எம் மத்தியல் வாழந்த புத்திஜீவிகளை எம்மக்களுக்கான செயற்பாட்டாளராக முற்போக்காளர்களாக வளரத்;தெடுப்பதில் வாய்பளிப்பதில் அவர் ஆற்றிய பங்கினை இன்றுவரை தம்மை வெளியில் காட்டிக் கொள்ளதாத புத்திஜீவிகள் பலரும் அறிவர்.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையினை செயற்திறன் மிக்கதாக அர்த்தமுள்ளதாக செயற்படுத்துவதற்காக இலங்கையின் நிர்வாகத் துறையில் பாண்டித்தியம் பெற்ற அனைவரையும் அரவணைத்து மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தை நிர்வாகத் துறையில் பாண்டித்தியம் பெற்றவரகள் அறிவர்.

இந்த நிர்வாக அதிகாரிகளை மக்களோடு ஐக்கியத்தை ஏற்படுத்தி அதே வேளை அவர்கள் சுதந்திரமாக எமது மக்களுக்கான செயற்பாட்டை ஏற்படுத்தியவர். அவரின் பிறந்த தினம் இன்று. உயிருடன் எம்மோடு பயணப்பட்டிருந்தால் 70 வயதை உடையவராக இருந்திருப்பார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் இருந்த யுத்தகாலத்தில் காயப்பட்டவர்களுக்கான இரத்தத் தேவையை உணர்ந்து இந்நாளில் குறியீட்டு ரீதியில் தொடர்ச்சியாக இரத்ததானம் செய்து வருவது தோழமை தினத்தின் வழமை.

அது போரால் யுத்தம் முடிவுற்ற பின்பு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியமைக்கு இலசவச மருத்து முகாம் சிறப்பாக கண்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணாடி வழங்குதல் என்ற செயற்பாடுகளையும் கொரான சுனாமி போன்ற பேரிடர் காலத்தில் மக்களுக்கான நிவாரணங்களை தம்மால் முடிந்தளவில் உலர் உணவு, சமைத்து உணவு, பண்டங்களாக தோழமை தினத்தில் வழங்கி வந்தவர்கள்….

அதன் உச்சமாக கடந்த வருடம் தொடக்கம் மக்களின் சுய பொருளாதார கொள்கையை அடிப்படையிலான மக்களே தமது உணவிற்கான பொருள்களை உற்பத்தி செய்தல், அதனுடன் கூடிய சூற்றுச் சூழலை மாசுபடுவதை தடுத்த நிறுத்தல் என்பதற்காக இலவச மரக்கன்றுகளை வழங்கியும் வருவது சிறப்பான செயற்பாடாகும்.

இந்த செயற்பாட்டை செய்திகள் மூலம் அறிந்ததே என்னை இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

இவ்வருடம் நவம்பர் மாதம் முழுவதும் இலவச மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கி வருகின்றனர் தோழமை உறவை வலுப்படுத்தும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக.

தோழர் நாபா உயிருடன் நம்முடன் இன்று இருந்திருந்தால் இன்றைய காலகட்டத்தில் மக்களுக்காக என்னத்தை செய்ய முயலுவர் என்பதை சரியாக கணிப்பீடு செய்து அவரின் பிறந்தினமான தோழமை தினத்தில் அந்த மாதம் முழுவதும் இதனை செயற்படுத்துவது சிறப்பான செயற்பாடாகும்.

அனைவருடனும் தோழமையாக பழக்கும் வெறுப்பை தவிர்த்த அரசியலையும் செயற்பாடுகளையும் நினைவுகூரும் தோழமை தினத்தை பசுமைப் புரட்சியாகவும் சூற்றுச் சூழல் மாசுபடுவதை தடுத்தல் மக்களின் வாழ்வாதாரத்தை அவர் சுய முயற்சியினால் மேம்படச் செய்ய மக்களே கன்றுகளை நட்டு பராமரித்து தமக்கு தேவையான உணவுகளை ஓரளவேனும் உற்பத் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயற்படும் இன்றைய தினத்தில் நாமும் இணைவோம்.

வாழ்க தோழமை வெற்றி நடை போடட்டும் தோழமை தினம். அதனைத் தாங்கிச் செல்வதில் தம்மைத் தியாகம் செய்தவர்களை நினைவு கூர்வோம்.

இலவச மரக் கன்றுகளை பெற விரும்புவோர் சாவகச்சேரியில் அமைந்த இந்த விவசாய பண்ணையிடம் தொடர்புகளை மேற்கொள்ளவும்:

RMK பண்ணை
A 9 வீதி
கைதடி
நுணாவில்
சாவகச்சேரி
தொலை பேசி: 0770892030
ஈமெயில்: RMKfarm@gmail.com