பத்மநாபா: ஆயுத வகிபாகம் ……..? அரசியல் வகிபாகம்…..?

மீண்டுமொரு தேவையகலப் புரட்சி தேவைப்படுகின்றதா எனும் கேள்வியும் மக்களிடையே எழுத் தொடங்கின சுடுகலன்களால் சுடுகாடாக்கப்படும் ஈழத்தின் அழகிய முகத்தை அவதரிக்கக்காத்திருந்த தனியிறையாண்மையின் வதனங்கள் வதனமிழந்து வடித்துக்கொண்டிருந்த இரத்ததில் பத்மநாபாவின் புரட்சியும் மூழ்கிவிட்டது என்றே கூற வேண்டும்.

தமிழ் மக்களின் சுயாட்சியும் இறையாண்மைக் கோட்பாட்டுவியல் அரசியலும் அனைத்துக்குமான ஓர் முகப் பார்வையாக அமைந்துவிட வேண்டுமென்பதில் பத்மநாபாவின் வகிபாகம் என்னவாக இருந்திருக்கும் நடப்பாண்டு அரசியலின் எல்லாத் தமிழ் தலைமைகளும் பேச நினைக்கும் மாகாணத்தின் சுயாட்சி மற்றும் மரபு வழி பாதுகாப்பின் அரசியல் தத்துவத்தை அவரது வகிபாகம் அன்றே கூறிவிட்டது எனலாம்.

அரசியல் போர்முக நெருக்கீடுகளுக்குள் தமிழினத்தின் தத்துவார்த்த அரசியல் அடிபட்டு நகர்நதுவிடக் கூடாது என்பதும் இந்த நகர்வு இடைநிலைக்குள் தமிழர்களின் மரபு வழித் தாயகத்தின் வாழ்வியலும் அதன் சுயசார்புப் பொருளாதாரமும் தீக்கிரையாக்கிவிடக் கூடாது என்பதிலும் மெத்தனப் போக்குகளின் பித்தலாட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் இனச் சுத்திகரிப்பாக அதிகரித்துவிடக் கூடாது என்பதிலும் பத்நாபாவின் வகிபாகம் அமைந்திருக்கும்.

தோழமை அரசியல் முகங்களின் தோள்களுக்குப் பின்னால் துரோகத்தின் ஈட்டிகள் முதுகைக் குத்தக் கூடும் என்பதில் நன்கறிந்த அரசியல் விரோதமும் விழிகளில் ஒடிக்கொண்டிந்தது ஒன்றுபட்ட தேச ஒற்றுமைக்குள் தமிழ் தேசியத்தின் முகத்தையும் முதுகையும் காப்பாற்ற வேண்டிய தேவையும் எழுந்தது அதுதான் மாகாண தன்னாட்சியதிகாரத்தின் இருப்பிடமாகவும் தனித்துவ அதிகாரப்பகிர்வின் அங்கீகாரமாகவும் அமையும் என்பதும் ஒரு வகிபாகம்தான்.

தமிழ் அரசியல் பிளவுகளின் ஆரம்பச் சதிகளில் கூட்டுறவாண்மையை மேன்மையையும் அதன் மேலாதிக்கத்தால் சாதிக்க வேண்டிய அரசியல் பொறிமுறையின் நகல்வுகள் பற்றியும் யாருமே சிந்தித்திராத நிலையில் ஆயுத சித்தாந்தமும் அரசியல் சித்தாந்தமும் அவலச்சாவுகளால் அமைதியின்மைக்கு அகலப்பாதையொன்று திறக்க நேரிடும் என்பதில் எழுச்சியான முகவுரையொன்றும் பத்மநாபாவின் வகிபாகத்தால் உணர்த்தப்பட்டிக்க வேண்டும்.

எழுச்சி மிகு உரைகளும் எதற்குமான அரசியல் முகங்களும் எதிர்கால சந்ததிகளின் வாழ்வியலில் வழித்தடங்களில் வலிகளை நிரப்பிவிட்டு நிதர்சனமான மறைவுகளாக அமைந்துவிடும் என்பதும் நன்கறிந்த வகிபாகமாகவும் எல்லாவற்றிக்குமான தீர்மானமாகவும் இருக்கவில்லையாகினும் நிரப்பமுடியாத வெற்றிட அரசியலுக்குள் தமிழ்ச்சமூகம் தன்னை வெறுமையாக்கிவிட்டு பிச்சை கேட்டு நிற்குமெனவும் தீர்க்கமான புரட்சியாளனாய் பூரித்துக் கூற முடியுமானால் அதுவும் பத்மநாபாவின் வகிபாகமாகவும் அமைந்திருக்கும்.

சுடுகலன்கள் மீது தீராது காதல் இல்லையென்றாயினும் புரட்சியின் போர்க்களத்திற்கு சுடுகலன்கள் தேவைதான் எம்மீது வலிந்து திணிக்கப்பட்டது எம் கரங்களில் ஆயுதம் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது நாம் மக்களுக்காகவே ஆயுதமேந்தியுள்ளோம் அவர்களுக்காகவே நாம் போராடுகின்றோம் எனும் பத்நாபாவின் கூற்றானது ஒடுக்குமுறை அரசியலுக்குள்ளும் அடக்குமுறை ஆயுத தரிப்பிற்குள்ளும் இருந்து தமிழினம் விடுதலை பெறத் துடிக்கின்றது.

ஆனால் அதன் நாடித்துடிப்பானது தம்மைப்போன்றவர்களிடமிருந்தே பிறப்பெடுக்க வேண்டுமென்பதும் ஒரு மறையுண்மையாகவும் பத்நாபாவிடம் இருந்திருக்க வேண்டும் இதுதான் பத்மநாபாவின் மாபெரும் வகிபாகம்.

ஆனாலும் ஆங்காங்கே எழுந்த உள்ளக அரசியல் ஆயுத குழுக்களின் முரண்பாடுகளும் தென்னிலங்கையின் அரசியல் கபட அரங்கில் அவதரிக்கக் காத்திருந்த முரண்பாட்டுவியல் நகர்வானது இன்னுமின்னும் அதிகரித்துக்கொண்டிருப்பதை பத்மநாபா விரும்பியிருக்கவில்லை.

இந்த விருப்பமின்மையானது தென்னிலங்கைக்கு சார்பானவராக கருதிவிடவும் முடியாது ஆனால் சக தோழமைகளின் உளைச்சலில் கருதியதால் பத்மநாபா விரோதியாகவே பார்க்கப்பட்டார் எனலாம்.

புரிதலற்ற அரசியல் களத்தில் புரட்சியாளனை புறந்தள்ளி வடகிழக்கின் தாயக அரசியலில் ஒரு தாயத்தை மரணிக்கச் செய்த மாபெரும் தவறை சக தோழமைகள் செய்துவிட்டார்கள் தமிர்களுக்கெதிரான போர்முறைக் குற்றவாளியாக நிர்ப்பந்திக்கப்பட்டு பத்மநாபாவின் அரசியல் வகிபாகத்தை அழிப்பதில் சக ஆயுக்கழுக்கள் காட்டிய அக்கறையானது அவரின் அரசியல் வியூகத்தில் தோற்றம்பெறவுள்ள அத்தனைக்குமான முடிவிடமாக கருதிவிட்டார்கள்.

இன்று பேசப்படும் மாகாண முறைகளின் கீழான ஆட்சியினை கோடிட்டுக்காட்டிய பத்மநாபாவின் அரசியல் வியூகத்தில் இன்றைய சமூகம் அரசியல் குழந்தைகளாகவே இருக்கின்றன தமிழர்களின் ஆயுதக்குழுக்குள் உள்ளகத்திலேயே நடாத்திய அரசியல் கொலைகளும் ஆயுத அத்துமீறல்களும் அடாவடித்தனமான ஆயுதவரசியல் புற நகர்வும்.

தம்மை ஏகமாக நிரூபித்துக்கொள்வதற்கான படைவலுச்சமனிலைக்கான கொடூரங்களாகவே பார்க்க முடிகின்றது. இங்கேதான் பத்மநாபாவின் வகிபாகம் துளிர்விட்டிருக்க வேண்டும். முதலில் தமிழ் மக்களுக்குத் தேவையான அரசியல் வகிபாகம் யாரைச் சார்ந்திருக்க வேண்டும் யாரைச் சார்ந்திருந்து இந்தக் கேள்விகளுக்கு இன்னும் விடைகிடைக்காவிடினும் அவற்றிற்கான விதியாலோசனைக் கோட்பாட்டுவியலாக பத்மநாபாவின் வகிபாகத்தை முன்னிறுத்த முடியும்.

தமிழ் மக்களுக்கு அடிப்படையில் தேவையான அரசியல் வியூகத்தை உருவாக்கத்தவறி வீதிகளிலும் வீடுகளிலும் கொழுத்தப்பட்ட உயிர்களின் ஓலங்களுக்குப் பின்னால் உரிமைக்குரல்கள் அறுக்கப்படுவதை அன்றைய தமிழ்ச் சமூகத்தின் கல்விமான்கள்கூட விரும்பியிருக்கவில்லை
இங்கேதான் பத்மநாபாவின் வகிபாகம் தமிழ் அரசியலில் வகிபாகித்துக்கொண்டது.

சகோதர படுகொலைகளுக்கு பின்னால் படுகுழியில் அமிழ்த்தபடவுள்ள தமிழர்களின் எதிர்கால அரசியல் இருப்பானது எக்காலத்திற்கும் நிவர்த்தி செய்யப்படாத வலிகளை உருவாக்கிவிடும் என்பதை உணரவோ உடனிருந்து உளமா்ற்றம் செய்யவோ கால அவகாசத்தை யாரும் எடுத்துக்கொள்ளவில்லை.

தென்னிலங்கையின் ஆயுத சத்தங்களுக்கு அப்பால் தென்னிலங்கையின் சுடுகலன்களின் அரசியல் சீருடைகளிற்கு அப்பால் தமிழ் மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள அவதிப்படவேண்டியிருந்தது இந்த அவல நிலையில் தம் உரிமைக்கான போராட்டங்களில் தமக்கான பங்களிப்பு என்னவாகயிருக்கும் என்பதையும் தமிழ் சமூகத்தின் அனைத்து தரப்புமே பயத்தோடு அனுகவேண்டியிருந்தது. பத்மநாபாவின் வகிபாகம் இதை உணர வைத்தது எனலாம்

எல்லாவற்றிற்குமான விடுதலையுணர்வானது வெறும் சுடுகலன்களின் நம்பிக்கையில் தக்கவக்காது ஜனநாயக நம்பிக்கையிலும் அணுக வேண்டுமென்பதையும் ஆழமாக சிந்திதிக்கொண்டது எனலாம் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் தென்னிலங்கைக்கு படைவலு போரியலை உணர்த்துவதன் மூலம் உள்நாட்டு யுத்தமொன்றிற்கு தென்னிலங்கை விரும்பாது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பகிர்ந்தளிக்க உந்தப்படும் என்பதில் சந்தேகங்கள் இருக்கவில்லை.

பத்மநாபா தொட்டுக் கொண்ட அரசியல் களமானது விட்டுச் சென்ற இடத்திலிருந்து ஆரம்பிப்பதற்கான அரசியல் கருத்தரிக்க முடியாமல் போய்விட்டது.

தமிழ் மக்களின் ஒப்பற்ற உரிமைகளுக்கான தன்னார்வ போராட்ட களத்தை உருவாக்கிய பத்மநாபா அதன் வகிபாகத்தையும் ஏற்றுக்கொண்டார் ஏதிலி வாழ்வியலிலிருந்து மக்கள் விடுதலை பெறுவதற்கான சாதகமான ஒன்றையும் அவர் பரிந்துரைத்தார் என்றே கூற வேண்டும்.

இன்று எல்லோரும் தூக்கிப்பிடிக்கும் மாகாண ஆட்சிமுறை முக்கியமானதொன்றாகும் சக போராளியை அரசியல் நீட்சிக்கான சித்தாந்தமும் இடதுசாரி கொள்கையியலில் வன்முறை வன்முறைக்கு தீர்வாக அமையாது எனும் ஆருட அரசியலிலும் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பத்மநாபா மறுதலிப்புக்களாலும் ஆயுத வன்முறைகளாலும் எதையும் அடைந்துவிட முடியாது எனும் கற்பித்தலையும் ஒரு வகிபாகமாக பிரசன்னப்படுத்தியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

எல்லா அரசியல் இயக்கங்களும் எல்லா அரசியல் தலைமைகளும் ஒன்றாய் இணைந்து கொள்கை முரண்பாடுகளை களைந்து தனிநபர் வெறுப்புக்களையும் களைந்து அரசியல் வெறுப்புணர்வில் ஒருவர்மீது ஒருவர் திணிக்கக் காத்திருந்த கொலைவெறிகளையும் தவிர்த்து போராடியிருப்பின் எண்ணற்ற தலைவர்களை தமிழினம் இன்று உயிரோடு வைத்திருக்கும் இதுவும் ஒரு வகிபாகம் பத்மநாபாவின் அரசியல் வகிபாகமானது ஆயுதமா…..? அரசியலா……..?