இந்தியாவின் இராஜதந்திரமற்ற செயல்

ஆனால் இவற்றை பின் தள்ளி…..

அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற ஜீ 20 மகா நாட்டிற்கு பின்பு உலகிற்கே தலமை வகித்து எமது பெருமையை நிலை நாட்டிவிட்டோம் என்ற மமதையில் இருந்த இந்தியாவிற்கு இல்லை… இந்திய மத்திய அரசிற்கு இல்லை…. பாஜக மோடி அரசிற்கு கிடைத்திருக்கும் அரசியல் பின்னடைவுதான்……

மணிபூரிலும் காஷ்மீரிலும் கர்நாடகா பாடசாலையிலும் மத மொழிச் சிறுப்பான்மையினரை இலக்கு வைத்து இந்துத்துவா மத மேலாண்மையை முன்னிறுத்தி குஜராத் மாடல் என்று இஸ்லாமியரை கொன்று குவித்த மோடியிற்கு அமெரிக்காவிற்குள் புகுதலுற்கு இருந்த தடையை அவர் இந்தியப் பிரதமராக வந்தவுடன் தங்கள் நலன்களின் அடிப்படையில் திறந்துவிட்டு செங்கம்பள வரவேற்பளித்த செயற்பாடு….


இன்று நாடு விட்டு நாடு தாண்டி…. கண்டம் விட்டு கண்டம் தாண்டி….. வேறு ஒரு நாட்டின் இறையாண்மையை மதிக்காது ஏதேச்சேகாரமாக செயற்பட்டு கொலைகளை நாமும் செய்யலாம் என்றளவிற்கு அமெரிக்க இஸ்ரேல் அதுசாரந்த நாடுகளின் உளவுப் படைகளுக்கு இணையாக தன்னை நகர்த்திக் கொண்ட பாஜக அரசின் செயற்பாடு விரிவடைந்துள்ளது.

இந்திய சுதந்திரத்தின் பின்பு நேரு, இந்திரா போன்ற தலைவர்கள் உருவாக்கிய உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு பல் தேசிய இனங்களும் பல மொழிகளும் பல மதங்களும் இணைந்து வாழும் நாடு என்பதை மறுதலித்த செயற்பாட்டின் மமதையிற்கு கிடைத்த ‘வெற்றியாக’ அண்மைய கனடா பிரஜையை கனடாவில் வைத்துக் கொலை செய்ததை பாஜக அரசின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவின் பெருமையை நாம் உலகில் உயர்த்திப் பிடிப்பதற்கு மோடியின் பாஜக அரசுதான் காரணம் என்று சிறப்பாக இந்துவத்துவா மேலாதிக்க சிந்தனையை வட மாநிலங்களில் விதைத்து கொண்டாட வைத்திட்ட மமதை இன்று கனடாவுடனான இராஜீவ உறவுகளை கேள்விக் குறியாக்கி இருக்கின்றது….

இதற்கான கண்டனங்களை உலக அரங்கிலும் ஏற்படுத்தியிருக்கின்றது.

கடந்த வருடம் பஞ்சாபில் நடைபெற்ற விவசாயிகளின் விடாப்பிடியான போராட்டம் மோடியின் பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த புதிய சட்டத்திலல் இருந்து பின்வாங்கிய சூழலும் இதில் பஞ்சாப் மக்களின் இணைந்த போராட்டமும் அமெரிக்காவிற்கான மோடியின் பயணங்களின் போது மோடியின் இந்துத்தவா ஆதரவாளர்களை மீறி இந்திய மத மொழிச் சிறுபான்மையினர் அணியாக திரண்டு தமது எதிர்பை வெளிப்படுத்தியமை போன்றவற்றில் சீக்கியர்கள் அதிகம் ஒருங்கிணைந்து செயற்பட்டது மோடியை சினம் கொள்ள வைத்தது என்ற அரசியலை நாம் மறுக்க முடியாது.

கனடிய இந்திய உறவுகள் சீர் கெட்டிருப்பதை ஜி 20 மகாநாட்டிற்கு சென்ற கனடியப் பிரதமர் தனது நாடு திரும்புவதற்காக பழுதடைந்த தனது விமானத்திற்கான பிரதியீட்டு விமான வருகையிற்காக டெல்லியில் விருந்தினர் விடுதியல் இரு நாட்கள் காத்திருந்த போதே உணர முடிந்தது.
அண்மையில் ரஷ்யாவின் சந்திரனுக்கான லூனாவின் வெற்றியிற்கு மேலாக சந்திராயனின் வெற்றி இந்தியா என்ற உபகண்டத்தவரை கல்வியிற்காகவும் வேலையிற்காகவும் தொழில் நுட்ப தேடலுக்காவும் மேற்கத்திய நாடுகளை நோக்கி ஓட்டங்களை நிறுத்தவில்லை.


கோவில்பட்டியில் இருந்து கோதாவாரி வரை வாழும் சாதாரண இந்திய கிராமத்தவனின் கனவு மேற்கத்திய வெளிநாட்டிற்கு காசு பண்ணப் போவதும்….. வேலை தேடிப் போவதும்….. கல்வி தேடிப் போவதும்…. என்பதாக இன்னும் ‘வளர்ச்சியடைந்த’ நிலையில் இருக்கும் இந்தியா ஒளிர்கின்றது….. வளர்கின்றது…. டிஜிற்றல் இந்தியா என்றால் இல்லை என்ற பதிலையே கூறி நிற்கின்றது.

சுந்தர் பிச்சை இந்தியாவில் உள்ள ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றின் தலைவர் என்பதை விட அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில் நுட்ப கம்பனி ஒன்றின் தலைவர் என்று கூறிக் கொள்வதில் எந்த ‘பெருமை’யும் இல்லை.

சுனத் இங்கிலாந்தின் பிரதமர் என்பதை விட சகலரையும் சமமாக மதிக்கும் ஜஸ்பால் சிங் எங்கள் நாட்டின் முக்கிய மந்திரி அவர் எச்சபையிலும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் தலைவர் மாறாக பழங்கு மகள் ஒருத்தி முர்மூ ஜனாதிபதியாக இருந்தாலும் அவர் ‘உயர்’ குலத்தில் பிறக்காதவர் கைம் பெண் என்பதினால் புதிய பாராளுமன்றக் கட்டத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிப்பது தீட்டாகும் என்ற மனநிலையும் இந்தியாவை மிளர வைக்காது.

இந்தியாவிற்குள் இருக்கும் பலவேறு தேசிய இனங்களுக்குள் தனியாக பிரிந்து சென்று தனிநாடு அமைத்தல் என்பதாக பல போராட்டங்கள் குரல்கள் எழுப்பினாலும் தொடர்ச்சியான பேச்சு வார்த்ததைகள் கலந்துரையாடல்கள் அணுகு முறை அந்த போராட்டத்திற்குரிய பிரிந்து செல்லலை இல்லாமல் செய்து இணைந்து உரிமையுடன் வாழுதல் என்றாக தீர்க்கப்பட்டதே இந்திய வரலாறு.

இதற்கான பேச்சுவார்தைகளும் பன்முகத் தன்மையும் பாஜக ஆட்சி ஏற்பட்ட பின்பு மிக வேகமாக பஅருகிப் போய் ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் என்றாக செயற்படுத்த முற்பட்டதன் விளைவுகளை இந்திய நாடு தற்போது சந்தித்து வருகின்றது.

இதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டு தத்துவார்த்தம் மாற்றம் ஒன்றோ மாறாது என்பதை மறுதலிக்கும் சனாதனம் ஆகும்.

நேருவும் இந்திரா காந்தியும் அதனைத் தொடர்ந்த பல தலைவர்களும் வேற்றுமையிலும் ஒற்றுமை என்றாக கட்டிக்காத்த பன்முகத் தன்மையை வெறும் 10 வருடத்திற்குள் தொலைத்து நிற்பதன் வெளிப்பாடாக இன்று கனடாவிற்குள் புகுந்து அந்த நாட்டுப் பிரஜை ஒருவரை கொலை செய்யும் அளவிற்கு நிலைமைகள் தாறுமாறாக்கியும் இருக்கின்றது.

இதுபற்றிய கனடிய அரசின் கேள்விகள் கண்டனங்களை இந்திய மத்திய பாஜக அரசு எதிர் கொண்ட விடயம்.

புத்திசாலித்தனமானதாக தெரியவில்லை. இதனையே இந்திய பொறுப்பு வாய்ந்த உத்தியோகஸ்தர்களின் ஊடகவியலாளர் சந்திப்புகள் கட்டியம் காட்டியும் நிற்கின்றன.

இதன் விளைவுகளை சரி செய்யும் மனப் பக்குவத்தை ஆளும் பாஜக அரசு கொண்டிருப்பதாகவும் உணர முடியவில்லை.

‘ஒரு காலத்தில் இந்திய நாட்டின் பிரஜை என்றாலும் இன்று முறைப்படி கனடிய அகதி அஸ்தஸ்து பெற்று அதனைத் தொடரந்து கனடா நாட்டின் பிரஜையாக மாறி இருக்கும் ஒருவரை தமக்கான குற்றவாளியாக இருப்பதாக கூறி அதற்கான இராஜீவ உறவுகளின் அடிப்படையில் அணுகுவதே நாடுகளுக்கிடையேயான சரியான அணுகு முறையாகும்.

இதனை மீறி எழுந்தமானத்திற்கு தனது எஜன்ட்டுகளை அனுப்பி கொல்வது என்பது அந்த நாட்டின் இறைiயாண்மையை கேள்விக்குறியாக்கும் விடயமாகும்.

இதனைத்தான் கனடிய பிரதமர் தனது பாராளுமன்ற உரைஈ ஐநா சபை உரையிலும் குறிப்பிட்டு இருக்கின்றார்.

இந்தியாவின் கேரள மாநிலத்தின் சனத் தொகைக்கு அண்மையான நாடு கனடா நாம் உலகின் அதிக சனத் தொகையைக் கொண்டிருக்கும் நாடு சீனாவை எதிர் கொள்ள எம்மிடம் வந்தாக வேண்டும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எம்மை மீறி யாரும் செயற்பட முடியாது என்ற மமதையில் ஈடுபட்டால் இதனால் இழப்புகளை சந்திக்கப் போவது பாஜக என்பதை விட இந்திய மக்கள் தான்.

கனடாவின் சனத் தெகையில் 3.7 வீதம்(இதில் 2 வீதம் அளவிற்கு சீக்கியர்கள்) அளவிலான வேலை மாணவர்கள் என்றாக உள்ள நிலையில் இந்தியாவில் இதனைத் தேடாது ஏன் கனடாவிற்கு எம்மக்கள் இடம் பெயர்ந்தார்கள் இடம் பெயர்கின்றார்கள் என்பதற்கு சந்திராயனின் வெற்றி மமதையில் இருந்து கொண்டு யோசிப்பதைவிட….

முடிந்தளவிற்கு பலதையும் இந்தியாவிற்குள் உருவாக்கும் தேடும் நாட்டை கட்டியமைக்கும் அரசியல் சமூக பொருளாதாரங்களை அமைப்பதே இந்தியா உலகின் 5 வது வலிமை மிகுந்த நாடு என்று பெருமைப்பட்டு இதில் இருந்து முன்னோக்கி நகர உதவும்.